May 19, 2009

கையில் மிதக்கும் கனவா நீ-3

பகுதி 1

பகுதி 2

குழந்தைகள் பெயர் பட்டியல் கொண்ட இணையத்தளத்தை பார்த்து கொண்டிருந்தாள். சில பெயர்கள் ரொம்ப புதுசா இருந்தாலும் சிரிப்பா இருந்தது. அதை பார்த்து சிரித்தேன்.

"ஏய் இப்ப எதுக்கு சிரிக்கிற?"

"உனக்கு ரொம்ப ஆர்வம் தான் போ. இப்ப தான் கல்யாணமே முடிஞ்சு ஒரு மாசம் ஆயிருக்கு. அதுக்குள்ள குழந்தைகளுக்கு பெயர் வைக்குற அளவுக்கு போயிட்டீயா..." அவள் தோளில் சாய்ந்து கொண்டேன்.

"இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள நமக்கு குழந்தை இருக்கும். அப்போ என்ன பெயர் வைக்கலாம்னு டென்ஷன் ஆக கூடாது பாரு. அதுக்கு தான்... இப்பவே... இங்க பாரு.. இந்த பெயர் நல்லா இருக்குல.." ஒரு பெயரை சுட்டி காட்டினாள்.

"பொண்ணு பொறந்தா..ஷாமினி....பையனா இருந்தா ஷாமன். பிடிச்சுருக்கா?" என்னிடம் கேட்டாள். புன்னகையை சம்மதமாய் அளித்தேன்.

"பொண்ணுங்க எப்ப ரொம்ப அழகா இருப்பாங்கன்னு தெரியுமா?" என்றேன். தெரியாது என்று தலையசைத்தாள்.

"அமெரிக்காவுல ஆராய்ச்சி செஞ்சு இருக்காங்களாம்."

"என்னென்னு?"

"பொண்ணுங்க pregnantஆ இருக்கும்போது தான் ரொம்ப அழகா தெரிவாங்கன்னு.."

"அதுக்கு?"

"உன்னைய ஒவ்வொரு வருஷமும் அழகா காட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்."

"ச்சீ...." அனிதா என் நெஞ்சில் முகம் புதைத்து வெட்கப்பட்டாள். தொடர்ந்தாள்,

"அப்போ ரெண்டு பேரு போதாதே?"

இருவரும் சிரித்து மகிழ்ந்தோம்.

"சார்..." மருத்துவமனையில் தாதி என்னை அழைத்தார். இன்னொரு பேப்பரை நீட்டி,

"இதுல இன்னொரு கையெழுத்து போடுங்க" என்றாள்.

"எதுக்கு..." நான் கேட்பதற்குள் டாக்டர் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தார்.

"அனிதாவுக்கு கொஞ்சம் சீரியஸா இருக்கு. she is in a critical condition. குழந்தை இல்ல அனிதா... யாராச்சு ஒருத்தரை தான் காப்பாத்த முடியும்." என்றார் டாக்டர்.

எனக்கு யார் வேண்டும் என்பேன்? உருகி உருகி காதலித்த மனைவியா? இல்லை ஆண்டுகளாய் ஆசைப்பட்ட குழந்தையா? வேதனை என்னை கொஞ்சம் கொஞ்சமாய் திண்றது. மரணம்- இந்த வார்த்தை என் வாழ்க்கையில் கேட்க போகிறேன் இரண்டாவது முறையாக.

முதன் முறை....

"அண்ணா, எப்படி இருக்கீங்க? அமெரிக்காவுல இப்ப climate எப்படி இருக்கு?" என்றேன்.

"ஓ..it's good." என்றார் அவர்.

"அம்மா அப்பா எங்க?"

"......."

"அண்ணா, இருக்கீங்களா? ஹாலோ ஹாலோ.... அப்பா எங்க? அப்பாகிட்ட கொஞ்சம் கொடுங்க...பேசி ரொம்ப நாளாச்சு?"

"........."

"அண்ணா, அப்பா எங்க?"

"சாரி.... அப்பா இறந்து 2 மாசம் ஆச்சு."

"what!!!??!! ஏன்....என்கிட்ட......"

"அம்மா தான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க."

தலையில் கைவைத்து உட்கார்ந்து இருந்தேன். அண்ணாவிற்கு ஃபோன் செய்த சம்பவம், அப்பாவின் மரண செய்தி- இவை யாவும் மருத்தவர் அனிதாவின் நிலைமை பற்றி சொன்ன பிறகு என் மனதில் வந்துபோனது. ஆம், அப்பாவின் மரணத்திற்கு பிறகு, என் வாழ்க்கையில் இன்னொரு முறை ஒரு மரணம். இம்முறை மனைவியாக இருக்கலாம் அல்லது குழந்தையாக இருக்கலாம்.

ச்சே....எந்த ஆண்ணுக்கும் வரகூடாத நிலைமை.

என் மனதிற்குள்ளே, "அப்பா, நீங்க தான் இவங்கள காப்பாத்தனும். உங்க ஆசிர்வாதம் தேவைப்பா....ப்ளீஸ் பா.... ப்ளீஸ் பா.... எனக்கு ஒரு பையன் பொறக்கனும்.... நீங்க மறுபிறவி எடுத்து வரனும். இல்லேன்னா உங்க குணம் இருக்கிற ஒரு பொண்ணு பொறக்கனும். எப்படியாச்சு அனிதாவையும் காப்பாத்துங்க பா ப்ளீஸ் பா...." மனம் சிறுபிள்ளை போல் அழுதது.

உள்ளே ஒரு பயங்கரமான அலறல் சத்தம். அனிதாவின் குரல். அதற்குபிறகு எந்த சத்தமும் இல்லை. என் உயிர்நாடி நின்று போனதுபோல் உணர்ந்தேன். மருத்தவர்களும் தாதியர்களும் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தனர். எந்த செய்திக்கும் தயாராக இருந்தேன் நான். மருத்துவரின் முகத்தை பார்க்க தைரியம் இல்லை.

என் தோளை தொட்டு, "god is great. it is a miracle. அனிதாவும் குழந்தைகளும் நல்லபடியா இருக்காங்க. by the way...உங்களுக்கு twins பொறந்திருக்கு. " சிரித்து கொண்டே சொன்னார். உயிர் மீண்டும் வந்தது எனக்கு.

"தேங்கஸ் டாக்டர்...." என்னால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. நான் அனிதாவையும் குழந்தைகளை பார்க்க அறை கதவை திறந்தேன்.

மருத்துவர் அவர் அறைக்குள் சென்றபோது நிறைய trainee மருத்துவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்,

"டாக்டர், இது எப்படி சாத்தியமாச்சு? இப்படி உள்ள பொண்ணுங்களுக்கு pregnancy ரொம்ப complicationsஎ தராதா?"

அதற்கு டாக்டர், "ஆம்.. கொஞ்சம் complicated தான். அனிதா ஒரு physically disabled person. அவங்களுக்கு ஒரு கால் இல்லாம இருந்தாலும், அவங்க mentally ரொம்ப strong. நிறைய நம்பிக்கை இருந்துச்சு அவங்களுக்குள்ள... so she was able to cooperate with us better. " என்று சொல்லியவர் தன் கணினியில் உள்ள விளக்கப்படம் மூலம் மற்றவற்றை விளக்கினார்.

அனிதா மயக்கத்தில் இருந்தாள். அவள் பக்கத்தில் இரண்டு குழந்தைகள்- ஒரு பையன், ஒரு பொண்ணு. என் ஆள் காட்டி விரலால் அவர்களின் விரல்களை தொட்டேன். இருவரும் என் விரலை பிடித்து கொண்டு சிரித்தனர்.

என்னையும் அறியாமல் வாய்விட்டு அழுதேன்!

*முற்றும்*

16 comments:

ivingobi said...

அனிதா ஒரு physically disabled person. அவங்களுக்கு ஒரு கால் இல்லாம இருந்தாலும், அவங்க mentally ரொம்ப strong. நிறைய நம்பிக்கை இருந்துச்சு அவங்களுக்குள்ள... so she was able to cooperate with us better...
Konnuttinga.... COnfidence iruntha ellamum namakku saaathagama irukkum nu puriya vachutinga..... Rommmmmmmmmmmmmmmmmmba nalla irukku story athuvum Neenga sonna selfconfidence kaga naan vote pannuraen.......

ivingobi said...

rommmmmmmmmmba nalla story kathalum paasamum inainthu avanga kathalai vazha vaithullathu athanai vida thannambikkai thaan avangalukku thaaimai kidaikka mukkiya kaaranam.......

reena said...

கதாசிரியை காயத்ரிக்கு ஒரு 'ஓ' போடலாம். முடிவில் ஒரு சமூக சிந்தனை டச்... நல்லா இருந்தது காயத்ரி

pappu said...

அனிதா ஒரு physically disabled person. அவங்களுக்கு ஒரு கால் இல்லாம இருந்தாலும், அவங்க mentally ரொம்ப strong. நிறைய நம்பிக்கை இருந்துச்சு அவங்களுக்குள்ள... so she was able to cooperate with us better.///////

இந்த disabledமேட்டர் கொஞ்சம் திணிக்கப் பட்ட மாதிரி இருக்கே!

நீங்க அடுத்த கதைய குஜால்டியா, எங்கள மாதிரி யூத்துக்கு எழுதுங்க!

thevanmayam said...

எழுதுங்க!
எழுதுங்க!!

Divyapriya said...

நீங்க எழுதினதுலையே இந்த கதை/நடை தான் சூப்பர் :)) கலக்குங்க...

Thamizhmaangani said...

@பாப்பு

//இந்த disabledமேட்டர் கொஞ்சம் திணிக்கப் பட்ட மாதிரி இருக்கே!//

கதை ஆரம்பிக்கும்போதே, இதை மனதில் கொண்டு தான் ஆரம்பித்தேன்:)

Thamizhmaangani said...

@கோபி

தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் உங்களுக்கு எனது நன்றிகள் பல:)

Thamizhmaangani said...

@ரீனா

//முடிவில் ஒரு சமூக சிந்தனை டச்.//

அப்படியா? என்னங்க பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க:)

Thamizhmaangani said...

@திவ்யாபிரியா

நன்றி:)

புதியவன் said...

அழகான கதையை நெகிழ்வா முடிச்சிருக்கீங்க ரொம்ப நல்லா இருந்தது தமிழ்...

ஆகாய நதி said...

கதை நல்லாருக்கு... வேறு கோணத்தில் சென்று முடித்துவிட்டீர்கள் கதையை :) சூப்பர்!

அப்புறம் ஒரு சந்தேகம், லாஜிகலா பார்த்தா டிவின்ஸ் அப்படின்றது முதல் ஸ்கேன்லயே தெரிந்திடுமே... லாஜிக் கொஞ்சம் மிஸ் ஆகுதே... :)ஆனா அது பரவால...

Thamizhmaangani said...

@புதியவன்

பாராட்டுகளுக்கு நன்றி:)

Thamizhmaangani said...

@ஆகாயநதி

//லாஜிக் கொஞ்சம் மிஸ் ஆகுதே... :)ஆனா அது பரவால...//

நீங்க ரொம்ப லாஜிக்கா யோசிக்கிறீங்க..i like it very much!:)

லாஜிக் மீறிய இக்கதைக்கு கண்டிப்பா கண்டனம் தெரிவிச்சிடுவோம்:)

mvalarpirai said...

நல்லாயிருந்தது...இந்த அம்மாக்கள் மட்டும் காதல்னா கதறுராங்கனா தெரியல :)

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா said...

very suprice. kadaici katatthil naanum aluthutenpa. all the best