May 15, 2009

கையில் மிதக்கும் கனவா நீ-1

அனிதாவின் கதறல் சத்தம் எனக்கு வேதனையை தந்தது. வீட்டிலிருந்து மருத்துவமனை போகும் வரை அழுகை. வலி தாங்க முடியவில்லை. தல பிரசவம் அப்படி தான் இருக்குமாம். மருத்துவர்கள் அவளை அவசர சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். நேற்று வரைக்கும் தைரியமாக இருந்தவளின் முகத்தில் பயம் படர்ந்ததை கவனித்தேன்.

மருத்துவமனை வாசலில் ஒரு பிள்ளையார் சிலை. பார்த்தேன். கும்பிடவில்லை. கொஞ்ச காலம் வரை இருந்த கடவுள் நம்பிக்கை, ஒரு கால கட்டத்திற்கு பிறகு முற்றிலுமாக இல்லை. காரணம் உண்டு.

என் மனதில் சுத்தியலால் யாரோ அடித்தார்கள். இல்லை, அடித்தது மனசாட்சி.

என்னால் தானே இப்படி...
ஏதோ ஒரு 5 நிமிஷம் சுகத்திற்காக...
ஆனால் குழந்தைகள் தானே கல்யாண வாழ்க்கையை முழுமை பெற செய்கிறார்கள்...
அவளுக்கு ஒன்னும் நடக்காது...
ஒரு வேளை அவளுக்கு ஏதேனும்....
குழந்தைக்கு ஏதேனும்...

ச்சே...தேவையில்லாத சிந்தனைகள் என்னை வாட்டி வதைத்தது. மருத்தவர்கள் ஒரு பக்கம் பரபரப்புடன் சிகிச்சை அறைக்கு ஓடினர். தாதி ஒருத்தி வந்தாள்,

"formalities.....நீங்க தானே mrs anithaவோட கணவர்....இந்த form fill up பண்ணுங்க" ஒரு பேப்பரை நீட்டினாள்.

படித்து பார்க்க மனமில்லை. கையெழுத்து போட்டேன்.

"அனிதாவுக்கு...ஒன்னும்...." துக்கம் தொண்டையை அடைத்தது. கட்டுபடுத்தி கொண்டேன்.

"we are trying our level best." அவசரமாக சென்றாள்.

தமிழ் சினிமாவில் பிரசவம் காட்சி வந்தால் மழை வரும். அப்போது எல்லாம் கிண்டல் செய்து இருக்கிறேன். ஆனால், அன்று வெளியே பெய்த கொண்டிருந்த மழை என்னை சாந்தப்படுத்தியது. ஜன்னல் வழியே எட்டி பார்த்தேன். மழை, மின்னல்!

உள்ளே அனிதா கதறி கொண்டிருந்தாள். அவள் ஒவ்வொரு முறையும் துடித்து கத்தும்போது, மனதில் இடி.

ஜன்னல் வழியே காற்றும் சாரலும் என் நினைவுகளை 8 மாதங்களுக்கு பின் இழுத்து சென்றன.

"வந்துட்டீயா அனிதா...எப்படி போனுச்சு office day rehearsal. நாளைக்கு show success தான் சொல்லு." படுக்கையில் படுத்து இருந்தேன். தூக்க கலக்கத்தில் எழுந்தேன்.

அனிதா ஒரு ஆபிஸில் கிளார்க் வேலை பார்க்கிறாள். அப்போது தான் அனிதா வீடு திரும்பினாள். இரவு மணி 10.30.

"ஓகே பா...நல்லா போனுச்சு....hope it turns out to be a successful show."என்றாள். என் பக்கத்தில் அமர்ந்தாள். அவள் போட்டிருந்த மஞ்சள் சுடிதார் எனக்கு பிடிக்கவில்லை. காலையிலே சொன்னேன். ஆனால் அவள் கேட்கவில்லை. கைகளை மடக்கி என் தலைக்கு பின்னால் வைத்தவாறு,

"இந்த டிரஸ் உனக்கு suitஆ இல்ல. கழட்டி போட்டுடு. நான் வேணும்னு help பண்ணவா" என்று எழுந்தேன்.

"ச்சீ....ஜொள்ளா..." என்னை தள்ளினாள். புன்னகையித்தேன்.

"நீ சாப்பிட்டீயா?" என்றேன்.

"இன்னும் இல்ல...." என்றாள். அவள் இன்னும் சாப்பிடாமல் இருந்தது எனக்கு கோபத்தை உண்டாக்கியது.

"அனிதா, உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன்... சரியான நேரத்துக்கு சாப்பிடனும்னு...இவ்வளவு நேரம் ஆயிட்டு... இன்னும் நீ...."

"இல்லடா... rehearsal பாத்துகிட்டே இருந்துட்டோம்... நேரம் போனது தெரியல்ல..."

"ஆமா... எப்ப பாத்தலும் ஒரு பதில் வச்சிருப்ப...."

" சாரி சாரி...." கெஞ்சினாள். அவள் விரல்களால் என் நெற்றியில் கிடந்த முடியை விலகிவிட்டு முத்தமிட்டாள். சிரித்தாள். கோபம் பஞ்சாய் பறந்தது.

"சரி சாப்பாடு ரெடி பண்றேன்... எத்தன தோசை வேணும்?" என்றேன்.

"ஒன்னு போதும்"

அவள் குளித்து முடித்து வருவதற்குள் நான் இரண்டு தோசைகளுடன் அறைக்குள் சென்றேன்.

"டேய், நானே வந்து சாப்பிட்டுகிறேன்... நீ எதுக்கு ரூம் வரைக்கும்..." அவள் முடிப்பதற்குள், அவளை படுக்கையில் அமர வைத்தேன்.

"இந்தா..." தோசையை சிறியதாய் பிய்த்து ஊட்டிவிட்டேன்.

"ஐயோ நானே சாப்பிட்டுகிறேன்..." என் கையை தடுத்தாள்.

நான் தொடர்ந்து ஊட்டிவிட்டேன். அடம்பிடிக்காமல் உண்டாள்.

"நீ சாப்பிட்டீயா?" என் தொடையில் கைவைத்து கேட்டாள்.

"ம்.." ஒற்றை சொல்லில் பதில். ஆனால் உண்மையில் அன்று நான் சாப்பிடவில்லை. மனசு சரியில்லை. ஒரு மாதிரியா இருந்துச்சு.

போர்வையை போர்த்தியபடி படிப்பதற்கு புத்தகத்தை கையில் எடுத்தாள்."சாரி டா... தூங்கிட்டு இருந்த நீ... உன் தூக்கத்த கெடுத்துட்டேன்ல..."

"ம்ம்...ஆமா...எப்ப உன்னைய முதல் தடவ பாத்தேனோ அப்பவே."

"ஐயோ...ச்சே...நீ ரொம்ப மோசம்." சிரித்தாள். தூங்கும் முன் கொஞ்சம் நேரம் புத்தகம் படிக்கும் பழக்கம் அவளுக்கு. அவள் படித்து கொண்டிருந்தாள். நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். புத்தக்கத்தில் அடுத்த பக்கத்தை திருப்பினாள், என்னை பார்க்காமலேயே,

"ஏய் ஜொள்ளா...என்ன இங்கயே பாத்துகிட்டு இருக்கே?"

"உன் மடியில கொஞ்சம் நேரம் சாஞ்சிக்கவா?"

மனசு சரியில்லாதவர்கள் தண்ணி அடிக்க போகிறார்கள். அவர்களுக்கு பொண்டாட்டி இல்லையா? மனைவியின் மடியில் தலை வைத்துப்படுக்கும் இன்பம் தெரிந்தவன் எவனும் தண்ணி அடிக்க போகமாட்டான்.

"என்ன ஆச்சு?" என் தலைமுடியை கோதியபடி கேட்டாள்.

"நாளான்னிக்கு மெடிக்கில் செக்-கப்ல...positiveஆ தானே வரும்?..." அவள் வயிற்றில் கைவைத்தேன். வெட்கப்பட்டாள்.

நாங்கள் நினைத்தபடியே மருத்தவர், "வாழ்த்துகள்! அனிதா, you are pregnant."
எங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"ஐயோ...அம்மா!" அனிதா அவசர சிகிச்சை அறையில் கத்தினாள். ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த நான் திடிக்கிட்டு போனேன். சுயநினைவுக்கு வந்தேன். பக்கத்தில் யாரோ ஒருவர் என் தோளை தட்டி,

"சார்... எனக்கு பையன் பிறந்து இருக்கான்....சுவீட் எடுத்துக்குங்கோ..." என்றார். நான் மறுத்தேன். அவர் வற்புறுத்தினார்.

சுவீட் கையில். என் வாழ்க்கை சுவீட் ஆனாதே அனிதா வந்தபிறகே.

ஐந்து வருடங்களுக்கு முன்னால்.....

அவள் வேலை செய்த ஆபிஸ் அருகே தான் என் ஆபிஸ். நான் அந்த ஆபிஸில் சேர்ந்து கொஞ்ச காலம் கழித்து தான் பக்கத்தில் ஆபிஸுக்கு ஒரு வேலை விஷயமாக போக நேரம் கிடைத்தது.

அப்போது தான் அனிதாவை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்தவுடனே மனதில் ஒரு மின்னல். கண்களுக்கு மட்டும் அல்லாமல் மனதிற்கும் அழகை தெரிந்தாள். அவளிடம் சென்று....

(பகுதி 2)

16 comments:

ivingobi said...

Romba nalla ezhutharinga aana romba interest aana place la thaan thodarum podanuma.... ? Aandava ivanga azhumba enna nu kaetkavae maattiya nee ?

Gajani said...

நல்ல கதை தொடக்கம்

Srivats said...

super, you have captured the feelings of the husband during the first labour very well:) Interesting story waitin for next post

Thamizhmaangani said...

@gobi

//Aandava ivanga azhumba enna nu kaetkavae maattiya nee ?//

ஹாஹா...:) சீரியல் பாத்து வளர்ந்தவள் நான்:) அதான்...

Thamizhmaangani said...

@கஜினி, ஸ்ரீ

நன்றி:)

Anonymous said...

I cant believe tat u r in early 20s.. Sound like you are writing with experience.. Athu ennamma //மனசு சரியில்லாதவர்கள் தண்ணி அடிக்க போகிறார்கள். அவர்களுக்கு பொண்டாட்டி இல்லையா? மனைவியின் மடியில் தலை வைத்துப்படுக்கும் இன்பம் தெரிந்தவன் எவனும் தண்ணி அடிக்க போகமாட்டான்.
//
Who told you this.. :P:P:P

But its true.. Appa never got stressed...Never looked for a drink to destress even..

He was very smart in handling issues. But, mom also played a big role in his life for him to be a success. He used to say that, he feels energetic to see ammas face and smile...

Btw, I read so many ramanichandran's novels recently. I can see a her flow slightly in ur writing.

But, iam telling u, u r one hell of capable person than herself. Saying from bottom of my heart.. U r an amazing writer...

Huggies..

Divya said...

Good start :))

Ur flow of writing is reaching heighs day by day..........keep going:))

Karthik said...

oops, got no time!! will be back tomorrow!!

now present!

Divyapriya said...

ur flow is amazing these days...too good :)

//கண்களுக்கு மட்டும் அல்லாமல் மனதிற்கும் அழகை தெரிந்தாள்.//

esp. i liked these lines...

புதியவன் said...

அருமையான தொடக்கம்

//"ம்ம்...ஆமா...எப்ப உன்னைய முதல் தடவ பாத்தேனோ அப்பவே."//

இந்த இடத்தில் மிகவும் ரசித்தேன்...

ஆகாய நதி said...

கதை ரொம்ப அழகா துவங்குதே!
அதிக முறை படித்திருந்தாலும் இப்போதுதான் முதல் பின்னூட்டம் :)

ஆகாய நதி said...

இந்த டைட்டில் இனிமை... எனக்கு மிகவும் பிடித்த பாடல் :)

mvalarpirai said...

கதையின் தலைப்பு கவிஞரின் வரி :) ..கதையும் கவிஞரின் அந்த பாடல் வரிகளை போல ரொமான்சா தான் போகுது..
கல்யாணம் ஆயி 4 வருடங்களுக்கு பிறகும் சாப்பாடு ஊட்டி விறட கணவன் ...நடந்த நல்லாதான் இருக்கும்..

Thamizhmaangani said...

@triumph

//Who told you this.. :P:P:P //

ஏதோ மனசுல தோணுச்சு...அதான்..:P)

//But, iam telling u, u r one hell of capable person than herself.//

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி!

Thamizhmaangani said...

@வளர்

//கல்யாணம் ஆயி 4 வருடங்களுக்கு பிறகும் சாப்பாடு ஊட்டி விறட கணவன் ...நடந்த நல்லாதான் இருக்கும்..//

நிஜ வாழ்க்கைல இதலா நடக்கவே நடக்காது! ஹாஹா...

reena said...

ரொமான்ட்டிக்கா போகுது காயத்ரி... அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்