இன்று என் keyboard grade 1 தேர்வை எழுதினேன். எனக்கு தேர்வு என்ற வார்த்தையை பார்த்தாலே பயம் கவ்வி கொள்ளும்(கொல்லவும் செய்யும்)! இன்று காலை 1030 தேர்வு நடந்தது. ஏசி அறையாக இருந்தாலும் வேர்த்து கொட்டியது. ஏதோ ஓரளவுக்கு செய்தேன். தேர்வின் ஒரு பகுதி இசை கருவிகளை அடையாளம் காட்டுதல். ஒன்றை சுட்டி காட்டி இது என்ன என்று கேட்டார்.
நான் "......ம்ம்ம்....." தலையை சொறிந்தேன். அது என்ன என்று தெரியும். ஆனால் mental block ஆயிடுச்சு. என்ன சொல்றதுன்னு தெரியல்ல.
அவர் சற்று முறைத்தவாறு, " this is கஞ்சீரா!"
நான் புன்னகையித்தேன். அசடு வழிந்த புன்னகை. "you are such an idiot." என்றது மனசாட்சி. தேர்வின் முடிவுகள் வியாழக்கிழமை தெரியும். தேர்வு முடிந்தவுடன், "குட்" என்றார். ஆனால் இன்னும் நல்லா செஞ்சு இருக்கலாமோன்னு தோணிச்சு!:(
--------------------------------------------------------------------------------
நம்ம வானவில் வீதி தம்பி கார்த்திக்கை ரொம்ப நாளா ஆள காணும். எங்கப்பா இருக்கிற? chatல் அடிக்கடி வருவார். இப்போ அதுகூட இல்ல! நல்ல புள்ளையா மாறிட்டாரா என்ன?
--------------------------------------------------------------------------------
கந்தசாமி பட பாடல்களை கேட்டேன். 8 பாடல்களில் விக்ரமே நான்கு பாடல்களை பாடி இருக்கிறார். பாடல் பல ரொம்ப இளமை துள்ளலோடு இருக்கு. excuse me kandasamy என்னும் பாடல் என்னை ரொம்ப கவர்ந்து இழுத்துவிட்டது. காரணம் பாடல் வரிகள். ஆனால் பாடல் காட்சிகளை பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரியா தான் இருக்கு. இன்னும் நல்லா செஞ்சு இருக்கலாமோ. வெளிநாடுகளில் பாடல்களை காட்சி அமைத்து பணத்தை வாரி கொட்டி இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி ஸ் தானு. அங்கிள், ஆட்டோல போறத்துக்கு காசு இருக்கா?
இத்தனை பொருட்செலவு அவசியமா? சரி இதுக்கே இப்படின்னா, அங்க யாரோ ஒரு பாடல்களுக்கு 100 கெட்-டப்புல வருகிறாராம். உஷ்,........முடியல ராகவேந்திரா சாமி!
----------------------------------------------------------------------------------
சுஜாதா எழுதிய சிறு சிறு கதைகள் என்ற புத்தகத்தை படித்து முடித்தேன் நேற்று. கதை எப்படி எழுதுவது என்பதை பற்றி நிறைய செய்திகள் அப்புத்தக்கத்தில் இருந்தன. 2 வார்த்தைகளில்கூட கதை எழுதலாமாம்!
what!! 2 words??- இது தான் என் முதல் reaction. தொடர்ந்து படித்தேன். ரொம்ப சுவாரஸ்சியமா இருந்துச்சு. பக்கம் பக்கமா எழுதுற எனக்கு 2 வார்த்தைகளில் எழுதுவது என்பது சிரமமே! ஆனால் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்...
------------------------------------------------------------------------------------
நேற்று ஒரு சின்ன புதிய சாதனை. இந்த வலைப்பூவின் followers ஐம்பது ஆகிவிட்டது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 50வது நம்பர் சுரேஷ் குமார். நன்றிங்கோ!
தங்க சங்கிலி, ஒரு பிரியாணி பொட்டலம் அவருக்கு கொடுக்கலாம் என்ற ஆசை தான். ஆனால், உலக பொருளாதாரம் சற்று மந்தமான நிலையில் இருப்பதால், அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் அது சேர்க்கப்படும்!:)
9 comments:
50க்கு வாழ்த்துக்கள்
தமிழினி கணக்குல எடுக்காட்டி மீ த 1ச்ட்
ada 50 members a kollureengala neenga...... Congrats for you... and aiyo paavam antha antha 49 persons..... naanum irukken so 49 persons mattum thaan paavam.....
தேர்வுனாவே டெரரா ? ஹி ஹி ஹி .. எனக்கும் அதே சிக்கல் தான் மா
நானும் கார்த்திக்க ரொம்பவே மிஸ் பண்றேன். கல்லூரி காலத்தின் முதல் கோடை விடுமுறை இல்லையா? பய புள்ளை ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கான் போல. நல்லா கொண்டாடட்டும் :)
@பிரேம்
//பய புள்ளை ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கான் //
அப்படி போகுதா கதை.. சரி வரட்டும் பார்த்து கொள்கிறேன்...
நெஜமாவே சுவாரஸ்யமா இருக்கு. கீப் கோயிங்! :)
நானெல்லாம் நல்ல புள்ளையாய்ட்டா உலகம் தாங்குமா? ;) எனிவே நன்றி. :)
வாழ்த்துக்கள் ..
பிறகு கார்த்திக் தனிமையின் விலை கதை discussion காக ஊட்டி சென்று உள்ளார்
//ஆனால் இன்னும் நல்லா செஞ்சு இருக்கலாமோன்னு தோணிச்சு!:(//
அரசியல் வாழ்கையில இப்படி அடிக்கடி தோனும். இதையெல்லாம் பெரிய விஷயமா எடுத்தக்ககூடாது ;)
Post a Comment