பாகம் 1
இவ்வாறு பல நாட்களுக்கு, நந்தினி ஒரு மாதிரியாய் திரிந்தாள். அவளின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள். நந்தினியால் இந்த விஷயத்தில் ஒரு உடனடி முடிவு காணமுடியவில்லை.
‘சரி , உண்மையாகவே சிவாவைக் காதலிக்கிறோமா’ என்று பலமுறை கேட்டுக் கொண்டாள் நந்தினி. ஆயிரம் முறை கேட்டாலும் அதற்கு பதில் ‘ஆம்’ என்று ஆயிரத்து ஒரு முறை வந்தது.
தனது மனதில் தோன்றிய காதலை சிவாவிடம் சொல்ல முற்பட்டாள். அதற்கு முன்னால் சுதாகரிடம் விஷயத்தைச் சொல்லிவிடலாமா என்றுகூட நினைத்தாள்.
ஆனால், அவளுக்கு கூச்சமாக இருந்தது. வெட்கம் அவளை வெளிப்படையாகப் பேசவிடாமல் தடுத்தது. தன் காதலை எப்படி சிவாவிற்குப் புரிய வைப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் அவளது மனம் கபடி ஆடியது. தன் தாயிடம் இதைப் பற்றி சொல்ல முடியாது. தன் தம்பியிடமும் சொல்ல இயலாது. இதனைப் பற்றி நினைத்து நினைத்து நந்தினிக்கு ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை. ஒரு சனிக்கிழமை மாலை நேரம், அவளுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.
“சரி நந்தினி, நீ ஏன் அவனுக்கு உன் காதலை எஸ். எம். எஸ் மூலம் அனுப்பலாமே?” என்று அவள் மனம் நந்தினிக்கு சொல்லியது.
இனி இதுதான் ஒரு சிறந்த வழி என்று தன் கையடக்கத் தொலைபேசியை எடுத்தாள். மனத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாலும் கைகள் ஏனோ நடுங்கின. விரல்கள் சிவாவின் தொலைபேசி எண்ணை அழுத்த போகும்போது கையடக்கத் தொலைபேசியின் மணி ஒலித்தது. அவளுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது.
“ச்சே..." முக்கியமான விஷயம் செய்யும்போதுதான் இப்படி கண்டநேரத்தில எஸ்.எம்.எஸ் வரும். யார் இது?...” என்று நந்தினி எரிச்சலுடன், வந்திருக்கும் குறுந்தகவலைத் திறந்து படிக்க ஆரம்பித்தாள்.
“ ஹாய் நந்தினி, எப்படி இருக்கே? உங்கிட்ட ஒன்னு சொல்லனும். ரொம்ப நாளாவே சொல்லனும்னு இருந்தேன். இனிக்குதான் அதை சொல்ல தைரியம் வந்துச்சு. ஐ லவ் யூ நந்தினி! உன்ன நான் காதலிக்கிறேன்! உங்கிட்ட எப்படி சொல்லுறதுனு தெரியாம திண்டாடிகிட்டு இருந்தேன். இந்த விஷயத்தைப் பத்தி இனிக்குதான் நம்ம சுதாகர்கிட்ட சொன்னேன். அவன்தான் உடனே உனக்கு சொல்ல சொன்னான். ஐ சின்சியர்லி லவ் யூ, நந்தினி! உன் பதிலை எதிர்பார்க்கும் உன் காதலன் சிவா.” என்றது அந்த குறுந்தகவல். நந்தினியால் நம்பவே முடியவில்லை.
நந்தினிக்கு கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது. எதை நினைத்து சென்றோமோ, அது கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷத்தில் ஆகாயத்தில் பறந்தவளாய் இருந்தாள் நந்தினி. ஞாயிற்றுக்கிழமை முழுதும் அவள் பரபரப்பாக இருந்தாள். திங்கள்கிழமை எப்போது வரும்; சிவாவை எப்போது பார்க்கலாம் என மனம் பறந்தது.
இருப்பினும் சிவாவை முதன் முதலாக காதலனாக பார்க்க போகிறோமே என்ற புது உணர்ச்சி அவளை கவ்வி கொண்டு அவளுக்கு புதிய சுகத்தை தந்தது. வயிற்றில் பட்டாம்பூச்சிகள், கண்களில் நட்சத்திரங்கள் என நந்தினி பள்ளிக்குச் சென்றாள் திங்கட்கிழமை அன்று. பள்ளியில் எப்போதும் சந்திக்கும் இடத்தில்தான் சிவா காத்திருந்தான்.
நந்தினிக்கு அந்த இடமே புதிய உலகமாக தோன்றியது. சந்தித்துக் கொண்டனர்; பேசினர் ; சிரித்துக் கொண்டனர்.
“ excuse me. நான் தான் சுதாகர். இங்க நானும் உட்கார்ந்து உங்ககூடலாம் பேசியிருக்கிறேன். உங்க பழைய ஃபிரண்ட்,” என்று முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டு விளையாட்டாய் அவர்களிடம் சொன்னான்.
“டேய், என்னடா. உனக்கு எப்போதும் கிண்டல்தானா. ஏய் எனிவே, ரொம்ப நன்றிடா. நீ கொடுத்த தைரியத்தினால்தான் இவ்வளவும் நடந்திருக்கு. ரொம்ப நன்றிப்பா,” என்றான் சிவா. அதற்கு அமோதித்தவளாய் நந்தினியும் தன் தலையை அசைத்துக் கொண்டாள்.
“அதுக்கு என்னடா.. பரவாயில்ல” என்ற சுதாகர், நந்தினியைப் பார்த்து,
“ நந்தினி, இனிமேல்தான்பா நீ ஜாகரதையா இருக்கனும். பசிக்கும் ஆனா சாப்பிட முடியாது. தூக்கம் வரம் ஆனா தூங்க முடியாது. அப்படியே தூங்கினாலும் தூக்கத்துலே சிரிப்பு வரும். பஸ் ஜன்னல் ஓரமா உட்கர பிடிக்கும். ராத்திரி எல்லாம் பகலா தெரியும். பகல் எல்லாம் ராத்திரியா தெரியும். காதல் பாட்டு எல்லாம் ரொம்ப பிடிக்க ஆரம்பிக்கும். அதுவும் முக்கியமா இளையராஜாவின் 80ஸ் பாட்டுதான் அதிகம் கேட்பே!” என்று மூச்சு விடாமல் தொடர்ந்து கடகடவென்று பேசி முடித்தான். அவன் சொன்னதைக் கேட்டு சிவாவும் நந்தினியும் வாய்விட்டுச் சிரித்தனர்.
“ஹாஹாஹா.. சரி சரி.. நான் சும்மா கிண்டலுக்காகச் சொன்னேன். இரண்டு பேருக்கும் ஆல் தி பெஸ்ட்! எனக்கு class ஆரம்பிக்கபோது. டைம் ஆச்சு. நான் கிளம்புறேன், “ என்று மேசையிலிருந்து பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் சுதாகர்.
உண்மையில் அவனுக்கு வகுப்பு அப்போது இல்லை. ஒரு மணி நேரம் கழித்துதான் அவனுக்கு பாடவேளை உண்டு. சிவாவும் நந்தினியும் தனியாக இருக்கட்டும் என்று நினைத்து நாகரிகத்துடன் நடந்து கொண்டான் சுதாகர்.
பல நாட்கள் சென்றன. காலேஜில் உள்ள பலருக்கும் தெரியும் இவர்களின் காதல் விவகாரம். சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருவரும் சுற்றினார்கள். வெளியே செல்வது, ஊர் சுற்றுவது, அவர்கள் எழுதும் பிழையுள்ள கவிதைகளை பகிர்ந்து கொள்வது என காதல் மயக்கத்தில் இருந்தனர் சிவாவும் நந்தினியும். சில நேரங்களில் நந்தினிக்கு பள்ளி மதியம் ஒரு மணிக்கே முடிந்துவிடும். ஆனால் சிவாவிற்கு மூன்று மணிக்குதான் முடியும்.
பள்ளி உள்புறத்திலிருந்து வெளி ‘gate’ வரை நடக்க இரண்டு நிமிடங்கள்தான் ஆகும். இருந்தாலும் அவனுக்காக காத்திருப்பாள் நந்தினி. அவன்கூட சேரந்து நடக்கும் அந்த இரண்டு நிமிடங்களைகூட அவள் பெரிதாக எண்ணினாள். இதற்காக பள்ளி முடிந்து காத்திருப்பாள். இவ்வாறு இரு வீட்டாருக்கும் தெரியாமல் நாளுக்கு நாள் இவர்களின் காதல் வளர்ந்து கொண்டிருந்தது.
தினமும் சிவாவும் நந்தினியும் வீடு சென்றபிறகு ஒரு ஐம்பது குறுந்தகவல்களையாவது அனுப்பி கொள்வார்கள். அதை சிவா அழித்துவிடாமல் தன் கையடக்க தொலைபேசியிலே வைத்திருப்பான். ஒரு நாள், அவன் தன்னுடைய கையடக்க தொலைபேசியை அவன் அறையின் மேசையில் வைத்துவிட்டுக் குளிக்க சென்றுவிட்டான்.
அந்நேரம் சிவாவின் அப்பா அவன் அறைக்குள் இருந்த செய்தித்தாளை எடுக்க வந்தார். அச்சமயம் கையடக்க தொலைபேசியின் குறுந்தகவல் ஒலி வந்தது. புதிதாக வந்திருக்கும் குறுந்தகவலை யதேச்சியாக திறந்து பார்த்தார். அவருக்குத் தூக்கி வாறி போட்டது. அந்த குறுந்தகவல் நந்தினியிடமிருந்துதான்- “ ஏய் சிவா, என்ன பண்ணுறே? ஐ மிஸ் யூ, ஐ லவ் யூ!” என்று இருந்தது.
சிவாவின் அப்பா அந்த கையடக்கத் தொலைபேசியில் உள்ள மற்ற குறந்தகவல்களை எல்லாம் படிக்க ஆரம்பித்தார். சிவாவிற்கும் நந்தினிக்கும் இடையே காதல் இருப்பதை அறிந்து கொண்டார். கோபத்துடன் இருந்த அவர் சிவா குளித்து வந்ததும் சிவாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டார். சிவா சுருண்டு கீழே விழுந்தான்.
“ஏங்க நம்ம பையன அடிக்கிறீங்க?” என்று பதறிபோய் கேட்டார் சிவாவின் அம்மா.
“உன் பையன் என்ன காரியம் பண்றான், தெரியுமா?” என்று ஆரம்பித்தவர் அவர் அறிந்தவற்றைக் கொட்டி தீர்த்தார். அதிர்ச்சியடைந்தார் சிவாவின் அம்மா. சிவா தலைகுனிந்து நின்றான். சற்று நேரத்தில் ஆத்திரம் அடங்கியவராய் சிவாவின் அப்பா சிவாவிடம் நந்தினியைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொன்னார்.
எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல சிவாவின் அம்மா அவருடன் சேர்ந்துகொண்டு பேசினார். தன் பிள்ளை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், இப்படி காதல்கீதல் என்று சுற்றகூடாது என்ற எண்ணத்தில் கூறினாலும் அவர்கள் சொன்ன வீதம் நியாயமற்றது.
இதை புரியாதவனாய் சிவா இருந்தான். பாம்பாட்டியின் இசைக்கு மயங்கும் பாம்புபோல் சிவா, அவனின் பெற்றோர்கள் நந்தினியைப் பற்றி சொன்னதை நம்பிவிட்டான். அவர்களுக்கு நந்தினியைப் பற்றி ஏற்கனவே தெரிந்ததாகவும் அவள் சிவா படிக்கும் அதே கல்லூரியில் படிப்பதால் அவளைப் பற்றி அவனிடம் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும் என்று சிவாவின் மனதை குழப்பிவிட்டனர்.
நந்தினியின் தந்தை குடும்பத்தைவிட்டு ஓடியவர், அப்படிப்பட்டவரின் மகள் எவ்வாறு இருப்பாள்? என்று சிவாவின் பெற்றோர்கள் சிவாவின் மனதை கலைத்துவிட்டனர். சிவாவிற்கு கெட்டதையும் நல்லதையும் சிந்தித்துப் பார்க்கத் தெரியாதவன். தன்னுடயை பெற்றோர்கள் சொல்வது உண்மை என்று நினைத்து தன் காதலைத் தூக்கி எறிந்தான்.
(தொடரும்)
பாகம் 3
22 comments:
மீ தி பர்ஸ்ட்டா?????
(இப்பவரைக்கும் எந்த கமெண்டும் இல்லை)
/
Your comment has been saved and will be visible after blog owner approval.
/
ஸோ மீ தி பர்ஸ்ட்டா இருக்காது :(
/
‘சரி , உண்மையாகவே சிவாவைக் காதலிக்கிறோமா’ என்று பலமுறை கேட்டுக் கொண்டாள் நந்தினி. ஆயிரம் முறை கேட்டாலும் அதற்கு பதில் ‘ஆம்’ என்று ஆயிரத்து ஒரு முறை வந்தது.
/
அதென்ன 1000, 1001 லட்சம்முறை கேட்டாலும் அப்பிடித்தான் வரும்!
:))
/
. தன் காதலை எப்படி சிவாவிற்குப் புரிய வைப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் அவளது மனம் கபடி ஆடியது.
/
கபடி ஏன் கில்லி , கோலி , பம்பரம் எல்லாம் ஆடி இருக்கலாமே!?!?
:)))
/
“சரி நந்தினி, நீ ஏன் அவனுக்கு உன் காதலை எஸ். எம். எஸ் மூலம் அனுப்பலாமே?” என்று அவள் மனம் நந்தினிக்கு சொல்லியது.
/
என் நம்பர் நந்தினிக்கு குடுத்திட்டியா காயத்ரி??
டாங்யு
டாங்யு
/
. ஐ லவ் யூ நந்தினி! உன்ன நான் காதலிக்கிறேன்! உங்கிட்ட எப்படி சொல்லுறதுனு தெரியாம திண்டாடிகிட்டு இருந்தேன். இந்த விஷயத்தைப் பத்தி இனிக்குதான் நம்ம சுதாகர்கிட்ட சொன்னேன். அவன்தான் உடனே உனக்கு சொல்ல சொன்னான். ஐ சின்சியர்லி லவ் யூ, நந்தினி! உன் பதிலை எதிர்பார்க்கும் உன் காதலன் சிவா.
/
இந்த மெசேஜ் பேரை மட்டும் மாத்தி எத்தினி பேருக்கு பார்வர்ட் செஞ்சேனோ அவளுக்கும் செஞ்சிட்டேன்
:)))))
/
இருப்பினும் சிவாவை முதன் முதலாக காதலனாக பார்க்க போகிறோமே என்ற புது உணர்ச்சி அவளை கவ்வி கொண்டு அவளுக்கு புதிய சுகத்தை தந்தது. வயிற்றில் பட்டாம்பூச்சிகள், கண்களில் நட்சத்திரங்கள்
/
பாத்து முன்னாடி வர்ற தண்ணி லாரி கண்னுக்கு தெரியாம போயிட போகுது ப்ரேக் வேற இல்லையாம்
:))
/
நந்தினி, இனிமேல்தான்பா நீ ஜாகரதையா இருக்கனும். பசிக்கும் ஆனா சாப்பிட முடியாது. தூக்கம் வரம் ஆனா தூங்க முடியாது. அப்படியே தூங்கினாலும் தூக்கத்துலே சிரிப்பு வரும். பஸ் ஜன்னல் ஓரமா உட்கர பிடிக்கும். ராத்திரி எல்லாம் பகலா தெரியும். பகல் எல்லாம் ராத்திரியா தெரியும். காதல் பாட்டு எல்லாம் ரொம்ப பிடிக்க ஆரம்பிக்கும்
/
மொத்தத்துல மெண்டல் ஆகீடுவாங்கன்னு சொல்லாம சொல்றீங்க!!
அனுபவஸ்தி சொன்னா கரிக்க்டாதான் இருக்கும் கேட்டுக்கிறோம்!!
/
சிவாவின் அப்பா அந்த கையடக்கத் தொலைபேசியில் உள்ள மற்ற குறந்தகவல்களை எல்லாம் படிக்க ஆரம்பித்தார்
/
என்னது சிவாவோட அப்பா காதலுக்கு வில்லனா நோஓஓஓஓஓ
அப்ப சிவாவோட அப்பா பேரு சஞ்சய்
/
சிவாவின் அப்பா சிவாவிடம் நந்தினியைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொன்னார்.
/
அவருக்கு எப்பிடி தெரியும் எங்கியோ இடிக்குதே!?!?!?
/
இதை புரியாதவனாய் சிவா இருந்தான். பாம்பாட்டியின் இசைக்கு மயங்கும் பாம்புபோல் சிவா, அவனின் பெற்றோர்கள் நந்தினியைப் பற்றி சொன்னதை நம்பிவிட்டான்.
/
கழட்டி விட்டுடலாம் ஹேமா சின்ஹாவை கரெக்ட் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணீட்டேனோ!?!?!?
/
சிவாவிற்கு கெட்டதையும் நல்லதையும் சிந்தித்துப் பார்க்கத் தெரியாதவன். தன்னுடயை பெற்றோர்கள் சொல்வது உண்மை என்று நினைத்து தன் காதலைத் தூக்கி எறிந்தான்.
/
சுத்தற வரைக்கும் ஜோடியா சுத்தியாச்சி
எல்லாம் ஆக்டிங்தான் அம்மிணி நந்தினிகிட்ட சொல்லீடாதீங்க
வர்ட்டா
/
(தொடரும்)
/
இந்த பதிவிலேயே மிகவும் ரசித்து படித்த வரி இதுதான்
/
(தொடரும்)
/
இந்த பதிவிலேயே மிக சிறந்த ரசித்த வரி இதுதான் இதை ஏன் நீங்கள் முதல் பாரா முடிந்தவுடன் எழுதியிருக்க கூடாது!?!?!?
@சிவா,
//லட்சம்முறை கேட்டாலும் அப்பிடித்தான் வரும்!//
யப்பா சாமி, என்னைய காப்பாத்த மாட்டீயா!!?
//கபடி ஏன் கில்லி , கோலி , பம்பரம் எல்லாம் ஆடி இருக்கலாமே!?!?//
கபடிக்கு மட்டும் தான் training கொடுத்தோம். மத்த விளையாட்டுகளுக்கு அடுத்த கதைக்கு training கொடுப்போம்!
//பாத்து முன்னாடி வர்ற தண்ணி லாரி கண்னுக்கு தெரியாம போயிட போகுது ப்ரேக் வேற இல்லையாம்//
தண்ணி போட்டு நீங்க வந்துகிட்டு இருக்கீங்கன்னுதானே தகவல் வந்துச்சு:))
//அப்ப சிவாவோட அப்பா பேரு சஞ்சய்//
ஆஹா...!! ஆரம்பிச்சுட்டாங்கய்யா!!
//அவருக்கு எப்பிடி தெரியும் எங்கியோ இடிக்குதே!?!?!?//
இடிக்குதுன்னா.. தள்ளி உட்காருங்க..
//ஹேமா சின்ஹாவை கரெக்ட் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணீட்டேனோ!?!?!?//
பெண் பாவம் சும்மா விடாது!!
//இந்த பதிவிலேயே மிக சிறந்த ரசித்த வரி இதுதான் இதை ஏன் நீங்கள் முதல் பாரா முடிந்தவுடன் எழுதியிருக்க கூடாது!?!?!?//
கவலை வேணாம் சிவா, அடுத்த பதிவு உங்களுக்காக மட்டுமே ஸ்பெஷலா போடுறேன்!!
கதை இப்போ தான் சூடு பிடிச்சிருக்கு.....அடுத்து என்னவாகும் என கொஞ்சம் யூகிக்க முடிந்தாலும், நடக்கபோவது என்ன என்பதை அறியும் ஆவலை தூண்டுகிறது, ஸோ......சீக்கிரம் அடுத்த பகுதியையும் போட்றுங்க அம்மனி!!
முதல் பாகம் மாதிரியே நன்றாக இருக்கிறது தங்கச்சி... தொடரட்டும்...
/
முதல் பாகம் மாதிரியே நன்றாக இருக்கிறது தங்கச்சி... தொடரட்டும்...
/
என்னது ஒத்த கமெண்ட்
அசிங்கமா இல்ல????
Part 2 has lot of twists,
good flow:)))
Now I cud realise what you mentioned about Shiva's nature,
Sontha puthy ilamalum irukangala??
@திவ்ஸ்,
//கதை இப்போ தான் சூடு பிடிச்சிருக்க//
பாத்துங்க, கை சுட்டுவிட போகுது.:))
@சஞ்சய்,
//முதல் பாகம் மாதிரியே நன்றாக இருக்கிறது தங்கச்சி... தொடரட்டும்...//
நன்றி அண்ணா!:))
@ஸ்வேதா,
//Part 2 has lot of twists,
good flow:)))//
நன்றி ஸ்வேதா..
Post a Comment