Jun 19, 2008

friday 13th-ஏதாச்சு நடந்துச்சா உங்களுக்கு?

friday 13th- பொதுவா இந்த நாள் ரொம்ப பயங்கரமான நாள். ஏதாச்சு கெட்டது நடக்கும். அப்படி இப்படின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அனுபவித்துவிட்டேன் போன வெள்ளிக்கிழமை அன்று.


---------------------------------------------------------------------
ராத்திரி 1130 மணி இருக்கும். அடுத்த நாள் காலையில் அப்பா வெளியூர் கிளம்புவதால் அவரை விமானநிலையத்தில் காரில் கொண்டுவிட வேண்டும் விடியகாலையில் 4 மணிக்கு. சரி 1130 மணி போல தூங்கினா தான் கொஞ்சம் 4 மணி நேரம் நல்லா தூங்க முடியும் என்று நினைத்து, என் ரூம் lightயை off செய்யலாம்னு சென்றேன். திடீரென்று அப்பா உள்ளே நுழைந்து, பதற்றமாக,

"குட்டிக்கு நெஞ்ச வலிக்குது சொல்றா. வந்து பாரு." என்றார். (தங்கச்சியோட nickname குட்டி)

நான், " வீராசாமி படத்த பாத்து இருப்பா.." என்று ஜோக் அடித்தேன். அப்பாவுக்கு ஜோக் விளங்கவில்லை ஏன் என்றால் அவர் 4 வருடத்திற்கு ஒரு முறை படம் பார்ப்பவர்.

"இல்ல இல்ல... குட்டி அழுவுறா.." என்றார் அவர். சரி என்ன நடந்தது என்று அவள் ரூம்க்கு சென்று பார்த்தேன். படுக்கையில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறாள். நடந்தது என்னவென்றால், குட்டி என் அக்கா மேல் உப்புமூட்டை ஏறி விளையாட அக்கா முதுகு மேல் பாய்ந்திருக்கிறாள். அப்போ 'டக்' என்று நெஞ்சுபகுதியில் சத்தம் கேட்க, நெஞ்சவலி வந்துவிட்டது.

nickname தான் குட்டி. ஆனா எங்க வீட்டுல அவதான் நெட்டை.. அக்கா ரொம்ப small-built தான்.

அவ உடல் உருவத்துக்கு அக்கா மேல் ஏறி இருக்கலாமா? வயசு என்ன ஆகுது இரண்டு பேருக்கும்... அதுவும் ராத்திரி படுக்கும்போது யாராச்சு விளையாடுவாங்களா இப்படி... என்று மனதில் திட்டி தீர்த்தேன். குட்டி வலியால் கத்தி கொண்டிருந்ததால், நேரடியாக திட்ட மனம்வரவில்லை. அவளை அழைத்து கொண்டு பக்கத்திலுள்ள 24hrs clinicக்கு சென்றோம். அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அவங்க 10 மணிக்கு படுத்துவிட்டார். சதாரணமா குட்டி இரும்பல வந்தாகூட, அம்மா ஒரு வாரம் மருந்து சாப்பிடுவாங்க அவளுக்கா...இந்த விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான்!

அப்பா, நான், அக்கா, மூன்றுபேரும் சென்றோம். அங்க போனால்,

"இது maybe fracture-ஆ இருக்காலம். இல்ல lungs burst ஆயிருக்கலாம்" என்றார்.

அதை கேட்டவுடன் எனக்கு நெஞ்சு வெடித்துவிட்டது. என்னது lungs burst ???

ஒன்றுமே புரியவில்லை. பெரிய hospitalக்கு அழைச்சுகிட்டு போய் x-ray எடுக்க சொல்லுங்க என்று சொல்லி எங்களை அனுப்பிவிட்டார்.

பெரிய மருத்துவமனைக்கு சென்றோம். பகலிலே எங்க அப்பா மாட்டுவண்டி மாதிரி தான் ஓட்டுவார் காரை. இப்போ இந்த பதற்றத்தில அவரை காரை ஓட்ட சொல்லமுடியாது என்பதால் நான் ஓட்டினேன்.

'உங்க ரெண்டு பேருக்கும் என்ன நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா பாட்டுல வர கார்த்திக், சௌந்தர்யானு நினைப்பா...
நாளைக்கு அப்பாவ கொண்டுபோய் விடனும். இப்பவே மணி 1230 ஆச்சு.
குட்டிக்கு என்ன ஆகபோதோ?'

என்று பல சிந்தனைகள் மின்னலாய் ஓடியது.

mount alvenia மருத்துவமனைக்கு சென்றோம். அங்க டாக்டர் ரூம்க்குள்ளே சென்றோம். டாக்டரை பார்த்தபிறகு, எனக்கு சிரிப்பு வந்துட்டு(இந்த serious situationலயும்...) அவர் தலைமுடி ஏதோ குருவி கூடு மாதிரி இருந்துச்சு. இப்பதான் தூங்கி எழுந்திருச்ச மாதிரி ஒரு முகம்.

x-ray எடுத்து பார்த்தார். கொஞ்சம் நேரம் வெளியே வேட் பண்ண சொன்னார். விடியகாலை மணி 2 ஆகிவிட்டது. 4 மணிக்கு விமான நிலையத்துக்கு போனும். 'இன்னிக்கு எனக்கு விடிய விடிய தீபாவளி, பொங்கல், ரம்ஜான், christmas தான்.' என்றது மனம்.

இன்னும் வலியால் துடித்த தங்கச்சிய பார்க்க பாவமா இருந்துச்சு( ஒரு புரம் கோபம் இருந்தாலும்..) எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தோழிக்கு ஸ்.எம்.ஸ் செய்து நடந்தவற்றை கூறினேன். அவளும் பதில் ஸ்.எம்.ஸ் அனுப்பினாள் ஆறுதலாக.

டாக்டர் உள்ளே அழைத்தார். சென்றோம். fracture ஒன்னுமில்ல. lungs burst ஆயிருந்தா தான் கொஞ்சம் problemஆ போய் இருக்கும். இது just muscle strain தான் என்று சொன்னார்.

போன உயிர் திரும்பி வந்தது.

அவர் சொன்னபிறகு என் தங்கையிடம் மறுபடியும் கேட்டார், "வலி இருக்கா?"

அவள் ரொம்ப coolலாக, "இல்லையே!" என்றாள். அடிபாவி உனக்காக நாங்கலாம் கவலைப்பட்டா... ச்சே...

மருந்துகளை வாங்கி கொண்டு வீடு திரும்பும்போது மணி 3.

மறக்க முடியாத நாளாக அமைந்தது friday the 13th!

4 comments:

வினையூக்கி said...

சோதனைகள் பனிபோல விலகியமை நன்று

Shwetha Robert said...

How is your 'kutty' sister feeling now??
thrilling experiance @ late night-a:))

Thamizhmaangani said...

@வினையூக்கி,

//சோதனைகள் பனிபோல விலகியமை நன்று///

சரியாய் சொன்னீங்க..

Thamizhmaangani said...

@shwetha,

//How is your 'kutty' sister feeling now??//

now she is fine.