தினமும் காலேஜுக்கு கார் டிரைவ் பண்ணிட்டு தான் போவேன். இன்னிக்கு அப்பாவுக்கு கார் தேவைப்பட்டதால், அவர் காலையிலேயே கார் எடுத்துகிட்டு சென்றுவிட்டார். நேற்று இரவே கேட்டார்,"உனக்கு ஓகே தானே, இல்ல.." என்றார்.
நோ! நான் தான் பெரியவங்க கிழிச்ச 'கோடு'டை தாண்டாத பிள்ளையாச்சே. ஆக நான், "it's ok. u take it." அப்படி என்றேன். இருந்தாலும் மனசுக்குள் கஷ்டமா இருந்துச்சு. ஒரு நாள் கார் ஓட்டவில்லை என்றால், ஏதோ பைத்தியம் பிடித்தவள் போல் இருப்பேன். ஏனா, i luv my car to the core! அவனுக்கு (காரை தான் சொல்றேன்.) நான் இட்ட செல்ல பெயர் "sweetheart".
என் நண்பர்கள் கார் எப்படி இருக்கு என்று கேட்பதைவிட "உன் darling எப்படி இருக்காருன்னு' தான் கேட்பாங்க! ஒரு நாள், என் தோழி வீட்டுக்கு சென்று இருந்தேன். தோழி அவள் அம்மாவிடம், "காயத்ரி, அவளோட darlingக கூட்டிகிட்டு வருது." என்று சொல்லியிருந்தாள்.
ஆண்ட்டிக்கு தெரியாது காரை தான் டார்லிங் என்கிறோம்னு. வீட்டுக்குள் சென்றுவுடன், "உன் darling எங்கே" என்றார் ஆண்ட்டி.
நான், " கீழே கார்பார்க்ல இருக்குது" என்றேன்.
ஆண்ட்டி உடனே, "ஐயோ, ஏன்? மேலே வர சொல்லவேண்டியது தானே" என்றார். அப்ப ஆரம்பிச்ச சிரிப்பு ஒரு மணி நேரத்துக்கு ஓயவே இல்ல.
சரி இன்னிக்கு கதைக்கு வருவோம். டார்லிங்க அப்பா எடுத்து சென்றுவிட்டதால், நான் பஸில் கிளம்பினேன். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் டார்லிங் வந்துடுச்சு. அதுக்கு முன்னாடி எல்லாம் பஸ், train தான்!
காலையில் 6.25 பஸில் ஏறினேன்! எனக்கு பஸிலோ அல்லது trainல் போக பிடிப்பதற்கு ஒரே காரணம், நல்லா 'சைட்' அடிக்கலாம். ஆனா, எனக்குன்ன ஒன்னுமே கண்ணுல படாது. எல்லாம் ஒன்னாவது இரண்டாவது படிக்குற பசங்களா பஸுல ஏறி என்னைய செம்ம காண்டாக்குவாங்க!!
'போர்' அடித்த வகுப்புகளை ஒரு வழியா முடித்துவிட்டு வீடு திரும்ப பஸ் ஏற வந்தேன். அவ்வளவு கூட்டமா இருந்துச்சு! சரி இந்த பஸுல ஏற முடியாது. பசி வேற எனக்கு... ஆக நடக்க ஆரம்பித்தேன். 40 நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்தேன்.
அப்ப தான் என் காரை ரொம்ம்ம்ம்ம்பபப 'மிஸ்' பண்ணேன். absence makes the heart grow fonder என்ற ஆங்கில பழமொழி ஒன்று இருக்கு. அதாவது, ஒருத்தரை பிரிந்து இருக்கும்போது தான் அவர் மீது இன்னும் ஆசை அதிகரிக்குமாம்! அப்படி போச்சு என் மனநிலைமை!
ஆக, என் வீட்டுக்காரர்... ச்சி ஐ மின் என் வீட்டுக் 'கார்' இல்லாமல் என்னால் செயல்பட முடியாது. அவன் இன்றி ஓர் அனுவும் அசையாது!
(குறிப்பு: இந்த பதிவுக்கு 'இரண்டாவது நாள்..யப்பாடா' என்று தலைப்பு கொடுக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா, என்னால் தர்மடி வாங்க முடியாது என்பதால் இந்த தலைப்பு)
முதல் நாள்.. யப்பாடா
என் டார்லிங் நினைத்து எழுதிய கவிதை(கொஞ்சம் மொக்கையாக இருக்கும்.:)
8 comments:
கனவு காணுங்கள்
விடிந்ததும் எழுந்து
மறக்காமல் பல்விளக்குங்கள்!
புதிய தத்துவம் 10001
@சிவா சித்தப்பு,
//புதிய தத்துவம் 10001//
மத்த 10000 எங்கேன்னு நான் கேட்க மாட்டேன்!!! :))
அவன் இன்றி ஒர் 'அனு'வும் அசையாது.. 'அனு'வா..? அணுவா..?
நல்ல வேளை "முதல்நாள் யப்பாடா" படிக்கலை...
crazy CAR lover:))
உங்க வீட்டுக்காரர்... ச்சி ஐ மின் உங்க வீட்டுக் 'கார்'க்கு தெரியுமா, அதான் உங்க டார்லிங்-ன்னு :))
// 'இரண்டாவது நாள்..அய்யோடா'
இந்த தலைப்பு உங்களோட இந்த பதிவ படிக்கிற எங்களுக்கு கண்டிப்பாக பொருந்தும் :))))
@தமிழ்ப்பறவை,
திருத்தம் செய்துவிட்டேன். நன்றி! :)
//நல்ல வேளை "முதல்நாள் யப்பாடா" படிக்கலை...//
படிச்சாதான் என் கஷ்டம் புரியும்!
@ஸ்வேதா,
//crazy CAR lover:))//
ஹாஹா..:)
@மதிகெட்டான்,
//உங்க வீட்டுக்காரர்... ச்சி ஐ மின் உங்க வீட்டுக் 'கார்'க்கு தெரியுமா, அதான் உங்க டார்லிங்-ன்னு :))//
தெரியுமே, அப்படி கூப்பிட்டா தான் அவர் engine start பண்ணுவாரு. :)
Post a Comment