அடுத்த நாள் காலையில் காலேஜில்..
“ ஆமா நந்தினி, எனக்கு இந்த காதல் வேண்டாம். உன்ன பத்தி தெரிஞ்ச பிறகும் உன் பின்னாடி சுத்த நான் ஒண்ணும் முட்டாள் இல்ல,” என்ற சிவா கடுகடுப்புடன் முறைத்து கொண்டு சொன்னான்.
“என்ன சிவா, சொல்லுற? ஏன் திடீருன்னு. நான் என்ன தப்பு செஞ்சேன். ஏன் இப்படி எல்லாம் பேசுற?” என்று குழப்பத்துடன் கேட்டாள் நந்தினி.
“உன்ன பத்தி எங்க அப்பா அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க,” என்ற சிவா அவன் வீட்டில் நடந்தவற்றை கூறினான்.
சிவா கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நந்தினியின் மனதைக் கத்திபோல் குத்தியது. கண்ணீர் அருவியாய் வழிந்தது நந்தினிக்கு. அவளுக்குப் பேசவே முடியவில்லை. எவ்வளவு கீழ்த்தனமாக பேசமுடியுமோ அந்த அளவுக்குப் பேசி நந்தினியைக் காயப்படுத்திவிட்டான். அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த சுதாகர், சிவா பேசும்போது தடுக்க முயன்றாலும் சிவா அவனது கடும்சொற்களை நிறுத்தவில்லை.
அவன் மனதில் ஏறிய விஷத்தை கக்கி, கத்தி முடித்தவன் கடைசியில் ஒன்று சொன்னான்-
“ ஏய் நந்தினி, இன்னியோடு உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. ஆனா நம்ம பிரிஞ்சத வேற யாருக்கும் தெரியவேண்டாம். காலேஜில எனக்குனு ஒரு மரியாதை இருக்கு. இத பத்தி தெரிஞ்சா அவ்வளவுதான். ஒரு பையலும் என்னை மதிக்க மாட்டான். ஒரு பொண்ணகூட ஒழுங்க லவ் பண்ண தெரியலன்னு கிண்டல் பண்ணுவாங்க. அதனால சொல்லுறேன், இத பத்தி யாருக்கிட்டையும் சொல்லி தொலைச்சுடாதே. டேய் சுதாகர் உனக்கும்தான்டா சேத்து சொல்லுறேன்.” என்று பேசிவிட்டு சிவா அவ்விடத்தைவிட்டு அகன்றான்.
மேசையின்மீது தன் தலையை சாய்த்து குமுறி குமுறி அழுதாள் நந்தினி. சுதாகர், சிவா பேசியதை நினைத்து அதிர்ச்சி அடைந்தவனாய் இருந்தான். அவளுக்கு ஆறுதல் சொன்னான் சுதாகர்.
பல நாட்கள் உருண்டோடின. ஆனாலும் நந்தினிக்கு அவள் மனதில் இருந்த பாரம் குறையவில்லை. சிவா வேறு புதிய நண்பர்களின் கூட்டத்தில் சேர்ந்து கொண்டான். சுதாகர் நந்தினியைப் பழையபடி கொண்டுவர பல முயற்சிகள் செய்தான். ஆனால் ஒன்றுக்குமே நந்தினி ஒத்துபோகவில்லை.
காதல் துயரமே அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. சிவா எதுவுமே நடக்காததுபோல் திரிந்தான். ஆனால் நந்தினியால் அவ்வாறு இருக்க முடியவில்லை. வீட்டில் சாதாரணமாக இருப்பதுபோல் காட்டிகொள்வாள். இதயத்தில் விழுந்த இடிக்கு அவள் கண்களில் கொட்டும் மழைதான் அவளுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது.
சிவாவின் பிறந்தநாள் வந்தது. நந்தினி தான் காதல் மயக்கத்தில் இருந்தபோது அவனுக்காக வாங்கிய பிறந்தநாள் பரிசு ஒன்று அவளிடம் இருந்தது. இதை ஒரு முன்னாள் தோழி என்ற வகையில் சிவாவிடம் கொடுத்துவிடலாம் என அவள் ஆழ்மனம் சொன்னது. அதே சமயம் சிவாவை நேரடியாக பார்த்து கொடுக்க மனம் ஒப்பவில்லை. ஆகையால் சுதாகரிடம் பரிசை கொடுத்து சிவாவிடம் கொடுக்க சொன்னாள் நந்தினி. நந்தினி மறைவாக ஒரு தூண் பின்னால் நின்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தாள்.
“சிவா, பிறந்தநாள் வாழ்த்துகள். எனிவே இந்தா...,” என்றான் சுதாகர், நந்தினி கொடுத்த பரிசு பொருளை சிவாவிடம் நீட்டி,
“ இது நந்தினி பிறந்தநாள் பரிசா உனக்கு கொடுக்க சொன்னுச்சு.” என்றான் சுதாகர்.
“ ஓ...அவங்க வந்து கொடுக்க மாட்டாங்களோ.. என்ன திரும்ப ஒட்டப்பாக்குறாளா அவ. இந்த பரிசுல்லாம் எனக்கு ஒன்னும் வேண்டாம்,” என்று கூறி அருகில் இருந்த குப்பை தொட்டியில் அந்த பரிசை தூக்கி வீசிவிட்டு சிவா போய்விட்டான்.
இதை பார்த்த நந்தினி சிலையாய் நின்றுவிட்டாள். அவள் கண்களிலிருந்த கண்ணீர் மட்டும் கொட்டியது. சிவா தன்னை ஒரு தோழியாகக்கூட எண்ணவில்லையே என்று நினைத்து வேதனை அடைந்தாள்.
சுதாகர் நந்தினியிடம் வந்து ,
"நந்தினி, அவன் இப்படி செய்வான்னு எதிரப்பாத்தேன்!! சில பசங்க இப்படிதான். நீ அழுவாத. பொண்ணுங்க கண்ணீர் ரொம்ப விலை உயர்ந்ததுன்னு சொல்லுவாங்க. அத இனிமேலு இந்த மாதிரி ஆளுக்காக வேஸ்ட் பண்ணாத இவன பத்தி நினைக்காதே! அடுத்து என்ன பண்ணலான்னு யோசி. உனக்கு ஒரு ஏம் இருக்கு. அத நிறவேத்தி உன் அம்மாவுக்கு பெருமை சேரு,” என்று சுதாகர் அமைதியாகவும் உறுதியாகவும் ஆறுதலாகவும் கூறி நந்தினியின் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தத்தையே உருவாக்கி கொடுத்தான்.
பல வருடங்கள் கிடுகிடுவென ஓடின. சுதாகரின் ஊக்கத்தால் நந்தினி நன்கு படித்து அவள் நினைத்த போலவே ஒரு ஆசிரியர் ஆனாள். தன்னுடைய குடும்பத்திற்கு பெருமை சேர்த்தாள்.
ஒரு நாள் நந்தினி பள்ளி அலுவலகத்தில் இருக்கும்போது,
“ டீச்சர், உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு.. “ என்று ஆபிஸ் களார்க் நந்தினியிடம் தொலைபேசியை நீட்டினாள்.
நந்தினி தொலைபேசியை காதில் வைத்து,
“ ஹாலோ ஐ எம் நந்தினி இயர். யாரு அது?” என்றாள்.
ஒரு அமைதியான தழுதழுத்த குரலில்,
“ நான்தான் சிவா பேசுறேன்.” என்றது அந்த குரல்.
யார் இந்த சிவா என்று ஒரு நிமிடம் புரியாதவளாய் யோசித்தாள் நந்தினி.
“ நான்தான் நந்தினி, உன் காலேஜ் ஃபிரண்ட்.” என்றதும் நந்தினிக்கு எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. அதே பழைய சிவாதான்!
“ சொல்லு... என்ன திடீருன்னு ஃபோன்,” என்றாள் நந்தினி அமைதியாக, குரலில் ஒரு உணர்ச்சியும் இல்லாமல்.
“ உன்ன பாக்கனும் நந்தினி.” என்றான் சிவா.
நந்தினி சற்று உறத்த குரலில்,
“ அப்படி ஒரு சந்திப்பு இந்த ஜென்மத்தில நமக்கு வேண்டாம்!” என்றாள் உறுதியாக.
சிவா தனக்கு நடந்த கல்யாணத்தைப் பற்றியும் அவன் மனைவி சந்தேகம் புத்தி உடையவள் என்பதைப் பற்றியும் அவளால் தினமும் வேதனைப்படுவதாகவும் கூறினான் சிவா அழுது கொண்டே.
தன்னுடைய கல்யாண வாழ்க்கை கசந்துவிட்டதால் எல்லாத்தையும் விட்டுவிட்டு எங்கேயாவது போக போகிறேன் என்று வேதனையில் கூறிய சிவா,
” இதனாலதான் நந்தினி, உன்ன பாத்து பேசனும்னு சொன்னேன். அதுமட்டும் இல்ல நந்தினி. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் என் அப்பா அம்மா உன்ன பத்தி சொன்னது எல்லாம் பொய்னு சொன்னாங்க. அப்போ ஏதோ தப்பு செஞ்சுட்டாங்க. என்னோட கல்யாண வாழ்க்கை இப்படி போயிட்டேன்னு ரொம்ப கஷ்டப்படுறாங்க.. நந்தினிக்கு கல்யாணம் பண்ணிவச்சுருந்தா என் வாழ்க்கை இப்படி போய் இருந்திருக்காதேன்னு சொன்னாங்க..” என்றான் சிவா.
எல்லாவற்றையும் கேட்டு சற்று நேரம் மௌனமாக இருந்த நந்தினி ,
” நாய் துரத்தினா நம்மலும் ஓடிக்கிட்டே இருந்தா அதுக்கு முடிவே கிடையாது. தைரியமா நின்னு பிரச்சனைய எதிர்க்கனும். அப்போ நம்ம விஷயத்துல பிரச்சனை வந்தபோது எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு போனே.. இப்போ உன் மனைவியால பிரச்சனைன்னு வந்தபிறகு அவங்கள விட்டுட்டு எங்கே போகனும்னு நினைக்குற. முதல பயந்து ஓடுற பழக்கத்த விடு..” என்றாள்.
பின்னர் நந்தினி அவனுக்கு மேலும் பல அறிவுரைகளைக் கூறி ஒரு நல்ல மருத்துவரிடம் அவனுடைய மனைவியை அழைத்து செல்லுமாறு கூறினாள்.
அனைத்தையும் கேட்ட சிவா,
“ ரொம்ப தேங்கஸ்.. நந்தினி. உன் உதவிய நான் மறக்க மாட்டேன். அப்ப.. நம்ம சந்திப்பு..” என்று இழுத்தான் சிவா.
“ அதான் சிவா முன்னாடியே என் பதில சொல்லிட்டேனே. எல்லாத்தையும் மறந்துட்டு உன்ன பாக்க வர நான் ஒன்னும் இந்த சீரியல் கதையில வர ஹீரோயின் இல்ல. இப்ப உதவி பண்ணதுகூட.. ஒரு மனிதாபிமானம் என்ற அடிப்படையில்தான் தவிர.. வேறு ஒன்னு இல்ல.. என் காதலுக்கு நான் மரியாதை கொடுக்கறதுனால தான் உன்ன பாக்க விரும்பலன்னு சொன்னேன்..” என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டாள் நந்தினி.
“ என்ன டீச்சர்..தெரிஞ்சவங்களா?.. ரொம்ப நேரம் பேசினீங்க..” என்றார் களார்க். அதற்கு நந்தினி
“ ரொம்ப நாளா தெரியாம இருந்தவங்க” என்று பதில் அளித்துவிட்டு தன்னுடைய அடுத்த வகுப்பிற்கு சென்றாள் நந்தினி.
(முற்றும்)

(இது ஒரு உண்மை கதை தான். நண்பர்கள் வட்டாரத்தில் நடந்த ஒரு கதை. கதைக்காக பெயர்களை மாற்றி அமைத்தேன். மூன்றாம் பகுதி மட்டும், கதை முடிவுக்காக சற்று கற்பனை கலந்து எழுதினேன். சுதாகர் மாதிரி ஒரு நல்ல ஃபிரண்ட் தான் இந்த கதைக்கு inspiration! i dedicate this story to him.)
30 comments:
காரணங்களே யூகிக்க இயலாமல், இருந்த சுவடு கூடத்தெரியாமல் மறைந்த காதல்கள் நண்பர்கள் கூட்டத்தில் எவ்வளவோ இருக்கின்றன!!
கதை நன்று.
@சதீஷ்,
//காரணங்களே யூகிக்க இயலாமல், இருந்த சுவடு கூடத்தெரியாமல் மறைந்த காதல்கள் நண்பர்கள் கூட்டத்தில் எவ்வளவோ இருக்கின்றன!!//
முற்றிலும் உண்மை!!
கதை நன்று
ஆனா சொதப்பீட்டீங்க :(
/
சிவா கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நந்தினியின் மனதைக் கத்திபோல் குத்தியது. கண்ணீர் அருவியாய் வழிந்தது நந்தினிக்கு.
/
அருவியாய் வழிந்ததா ஒரு டேம் கட்டி தேக்கி வெச்சிருந்திருக்கலாம்ல
விவசாயத்துக்காச்சும் ஆகும்
:))
/
மேசையின்மீது தன் தலையை சாய்த்து குமறி குமறி அழுதாள் நந்தினி.
/
அவளே ஒரு குமரி அவ எதுக்கு குமறி குமறி அழுதாள்
அழறதா இருந்தா குமுறி குமுறி அழ வேண்டியதுதானே!!
:)))
/
இதயத்தில் விழுந்த இடிக்கு அவள் கண்களில் கொட்டும் மழைதான், அவளுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது.
/
மழை நீர் சேகரிப்பு செஞ்சாசா நந்தினி வீட்டில!?!?
/
இதை பார்த்த நந்தினி சிலையாய் நின்றுவிட்டாள். அவள் கண்களிலிருந்த கண்ணீர் மட்டும் கொட்டியது.
/
காயத்ரி மெகா சீரியல் நீ ஓவரா பாக்கிற அப்படிங்கிறது இந்த கதைய படிச்சதும் கண்பர்ம் ஆகுது!!!
:))))))
/
பல வருடங்கள் கிடுகிடுவென ஓடின.
/
வாழ்க்கையில் ஆயிரம்
தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு
படிக்கல்லப்பா
வெற்றிக்கொடிகட்டு
..........
..........
..........
...........
அப்பிடின்னு ஒரு பாட்டு இங்க போட்டு ஒரே பாட்டுல நந்தினி கோடீஸ்வரி ஆகிடறாங்க சிவா பிச்சக்காரன் ஆகீடறான்
/
ஒரு நாள் நந்தினி பள்ளி அலுவலகத்தில் இருக்கும்போது,
“ டீச்சர், உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு.. “ என்று ஆபிஸ் களார்க் நந்தினியிடம் தொலைபேசியை நீட்டினாள்.
/
ஏன் ஆத்தா இந்த மொபைல் போனு செல் போனுன்னு ஒன்னு இருக்கே அது நந்தினிக்கு தெரியாதா !? காயத்ரிக்கு தெரியாதா????????
:)))))))))))
/
நந்தினி தொலைபேசியை காதில் வைத்து,
“ ஹாலோ ஐ எம் நந்தினி இயர். யாரு அது?
/
ஐ இது என்ன புதுசா இருக்கே !!
நாங்கல்லாம் கழுத்துல வெச்சில்ல பேசுவோம்
:)))))))
/
ஒரு அமைதியான தழுதழுத்த குரலில்,
“ நான்தான் சிவா பேசுறேன்.” என்றது அந்த குரல்.
/
இது மயில்சாமி மிமிக்ரியேதான்
:)))))))))
/
சிவா தனக்கு நடந்த கல்யாணத்தைப் பற்றியும் அவன் மனைவி சந்தேகம் புத்தி உடையவள் என்பதைப் பற்றியும் அவளால் தினமும் வேதனைப்படுவதாகவும் கூறினான் சிவா அழுது கொண்டே.
/
போட்டு நாலு சாத்து சாத்தறதுக்கு கூடவா துப்பில்லாம போயிட்டான் படுபாவி!?!?
சிவாங்கிற பேருக்கே களங்கம் :(((((((
/
” நாய் துரத்தினா நம்மலும் ஓடிக்கிட்டே இருந்தா அதுக்கு முடிவே கிடையாது. தைரியமா நின்னு பிரச்சனைய எதிர்க்கனும்.
/
திரும்ப அதை தொறத்திகிட்டே ஓடணும்ங்கறீங்க !!!
இது ஜூப்பரு!!!!
:)))))
/
“ ரொம்ப தேங்கஸ்.. நந்தினி. உன் உதவிய நான் மறக்க மாட்டேன். அப்ப.. நம்ம சந்திப்பு..” என்று இழுத்தான் சிவா.
/
கேப்புல கெடா வெட்டறதுலயே குறியா இருந்திருக்கான் பயபுள்ளை
:)))))
Very impressive story with a different ending Tamizhmangani, hats off:-)
/
மூன்றாம் பகுதி மட்டும், கதை முடிவுக்காக சற்று கற்பனை கலந்து எழுதினேன்.
/
இது யாரை திருப்தி படுத்த !?!?!?
யாரந்த கறுப்பாடு!?!? who is the culprit??
:))))))))))))
சஞ்சய் என்னப்பா இப்பல்லாம் ரொம்ப பிசியாகீட்ட கமெண்ட்டே போடறதில்ல :(
@சிவா,
//கதை நன்று
ஆனா சொதப்பீட்டீங்க :(//
ஒன்னுமே புரியல்ல.
//அப்பிடின்னு ஒரு பாட்டு இங்க போட்டு ஒரே பாட்டுல நந்தினி கோடீஸ்வரி ஆகிடறாங்க சிவா பிச்சக்காரன் ஆகீடறான்//
no problem siva, ஒரு பாட்டுல கோடீஸ்வரன் ஆகுற மாதிரி நான் அடுத்த கதைய எழுதுறேன். அதுலையும் உங்க பேர் தான் ஹீரோவுக்கு. கதை பெயரு 'கண்ணாமலை'. எப்படி?
@siva,
//ஏன் ஆத்தா இந்த மொபைல் போனு செல் போனுன்னு ஒன்னு இருக்கே அது நந்தினிக்கு தெரியாதா !? காயத்ரிக்கு தெரியாதா????????//
இரண்டு பேருக்குமே தெரியாது.
//ஐ இது என்ன புதுசா இருக்கே !!
நாங்கல்லாம் கழுத்துல வெச்சில்ல பேசுவோம்//
confirm thaan. அப்பவே சொன்னாரே. டாக்டர் அப்பவே சொன்னாரே! சிவா உடம்பில் கொஞ்சம் 'cholestrol' அதிகமா போச்சுன்னு. குறைச்சிடு சித்தப்பு!
@சிவா,
//போட்டு நாலு சாத்து சாத்தறதுக்கு கூடவா துப்பில்லாம போயிட்டான் படுபாவி!?!?
சிவாங்கிற பேருக்கே களங்கம் :(((((((//
சித்தப்பு, உன் கல்யாணத்துல, இதைதான் நான் பெரிசா frame போட்டு சித்திக்கிட்ட கொடுப்பேன்!! ஓகேவா!!
// இது யாரை திருப்தி படுத்த !?!?!?//
யாரையும் அல்ல.
//யாரந்த கறுப்பாடு!?!? who is the culprit//
உண்மையான பெயர்களை சொல்ல இயலாது. ஆனா, இப்போ நந்தினி காலேஜ் 3rd year. சிவா, வெளியூர் படிக்க போறான். சுதாகர் இப்ப business adminstration படிக்கிறான்.
@ஸ்வேதா,
//Very impressive story with a different ending Tamizhmangani, hats off:-)//
thanks babe!
இது ஒரு உண்மைக்கதை என்று நீங்கள் சொல்லி விட்டதால், கதை நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் ஒரு உண்மைக்கதையை நீங்கள் சொன்ன விதம் சூபர்.
வாழ்துக்கள்.
அன்புடன்,
விஜய்
//என்ன டீச்சர்..தெரிஞ்சவங்களா?.. ரொம்ப நேரம் பேசினீங்க..” என்றார் களார்க். அதற்கு நந்தினி
“ ரொம்ப நாளா தெரியாம இருந்தவங்க” என்று பதில் அளித்துவிட்டு தன்னுடைய அடுத்த வகுப்பிற்கு சென்றாள் நந்தினி.//
சும்மா நச்சின்னு இருக்கு தங்கச்சி... என்னவோ போ... சுமார் 10 வருஷங்களுக்கு அப்புறம் ஒரு தொடர் கதையை படிக்க வச்சிட்ட. :))
.. ஆனா இந்த கதைல நிறைய முரண்பாடுகள் இருக்கு... இது உன்மை கதைனு சொல்லி அதுக்கு பரிகாரம் தேடிட்ட.. வாழ்த்துக்கள். :)
நல்லா இருக்கு! நல்ல முயற்சி :)
:) ennatha solla
@விஜய்,
//ஆனால் ஒரு உண்மைக்கதையை நீங்கள் சொன்ன விதம் சூபர்.
வாழ்துக்கள்..//
நன்றி விஜய்!
@சஞ்சய்,
//
சும்மா நச்சின்னு இருக்கு தங்கச்சி... //
நன்றி அண்ணா!
//ஆனா இந்த கதைல நிறைய முரண்பாடுகள் இருக்கு... //
எங்க?
@ரம்யா,
//நல்லா இருக்கு! நல்ல முயற்சி :)//
நன்றி ரம்யா!
@dreamz,
நன்றி!! :))
ஹாய் காயு,
நிஜமான சம்பவத்தில் உங்க கற்பனையை கலந்து அழகா கதையை நகர்த்தியிருக்கிறீங்க, பாராட்டுக்கள்!
முடிவில் நந்தினியின் அந்த தெளிவான பதில்கள் அருமை.
வாழ்த்துக்கள்:))
@திவ்ஸ்,
//முடிவில் நந்தினியின் அந்த தெளிவான பதில்கள் அருமை.
வாழ்த்துக்கள்:))//
பாராட்டுகளுக்கு நன்றி!:))
Post a Comment