Wednesday, June 25, 2008

எதிர்நீச்சல்

நீச்சல் குளத்தில்
தள்ளினாய்
நீச்சல் தெரியாதவன்
எப்படியாவது
நீச்சலடித்து கற்று கொள்வான்!
நீச்சல் பிடிக்காதவன்
என்ன செய்வான்?
மூழ்கி தானே போவான்.
புரிந்து கொள்ளமாட்டீர்களா?

வேலை பிடிக்கவில்லை என்றான்
"நல்ல வேலையில் இருக்கிற
உனக்கு, என்ன கேடு வந்துச்சு?"
என்றீர்கள்!
பிடிக்கவில்லை என்றேனே
ஏன் எனக்கு பிடிக்கவில்லை
என்று கேட்க
ஒரு ஜீவன் இல்லையே!

பிடிக்காத இடத்தில்
உதட்டில் சிரிப்பு
உள்ளத்தில் தவிப்பு!

கோபம் வருகிறதே
கோபத்தை வெளிப்படையாக
காட்டமுடியவில்லை என்று
அழுகை வருகிறதே.

கண்ணீரை துடைக்க
என் கைகுட்டைகூட
வர மறுக்கிறது
மடியில் சாய்ந்து
அழ ஒரு ஆளில்லை
என் மனச்சாட்சிக்கு
ஒரு மடி இல்லை!

15 comments:

முகுந்தன் said...

Fantastic...

மங்களூர் சிவா said...

ஹீரோ டயலாக் சூப்பர்.

மங்களூர் சிவா said...

மீ தி பர்ஸ்ட்டு???

Thamizhmaangani said...

@முகுந்தன்,

நன்றி

Thamizhmaangani said...

@சிவா சித்தப்பு,

//ஹீரோ டயலாக் சூப்பர்.//

கவிதை எல்லாம் உங்களுக்கு டயலாக் மாதிரி தெரியுதா? :))

Divya said...

\\கோபம் வருகிறதே
கோபத்தை வெளிப்படையாக
காட்டமுடியவில்லை என்று
அழுகை வருகிறதே.\\

என்னாச்சுமா தமிழு????

ஒரே தி புலம்பல்ஸ் ஆஃப் சிங்கப்பூரா இருக்கு?

Divya said...

\\கண்ணீரை துடைக்க
என் கைகுட்டைகூட
வர மறுக்கிறது
மடியில் சாய்ந்து
அழ ஒரு ஆளில்லை
என் மனச்சாட்சிக்கு
ஒரு மடி இல்லை!\\

அம்புட்டு அழுகாச்சியா:(((

பார்த்து தமிழு....பார்த்து!!

Divya said...

அட comment moderation romove பண்ணிட்டீயா????

அட்ரா சக்கை!!!

கவலைபடாதே......நோ கும்மிஸ் ஃபரம் திவ்விஸ்:))

Thamizhmaangani said...

@திவ்ஸ்,

//ஒரே தி புலம்பல்ஸ் ஆஃப் சிங்கப்பூரா இருக்கு//

//அம்புட்டு அழுகாச்சியா:(((

பார்த்து தமிழு....பார்த்து!!//

ஒன்னுமில்ல திவ்ஸ்.. சும்மா தான்!!

SanJai said...

//நீச்சல் குளத்தில்
தள்ளினாய்
நீச்சல் தெரியாதவன்
எப்படியாவது
நீச்சலடித்து கற்று கொள்வான்!
நீச்சல் பிடிக்காதவன்
என்ன செய்வான்?
மூழ்கி தானே போவான்.
புரிந்து கொள்ளமாட்டீர்களா?//

தங்கச்சி.. இதை கொஞ்சம் வீட்ல சொல்லுமா.. உன் அண்ணனுக்கு இந்த சின்ன வயசுல கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணிட்டிருக்காங்க :((

Thamizhmaangani said...

@சஞ்சய்,

//உன் அண்ணனுக்கு இந்த சின்ன வயசுல கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணிட்டிருக்காங்க//

அட்ராசக்கை!! அப்படியா!!! எஞ்ஜாய்!!

SanJai said...

// Thamizhmaangani said...

@சஞ்சய்,

//உன் அண்ணனுக்கு இந்த சின்ன வயசுல கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணிட்டிருக்காங்க//

அட்ராசக்கை!! அப்படியா!!! எஞ்ஜாய்!//

ஹ்ம்.. உங்கிட்ட போய் சொன்னேன் பாரு... நீ எல்லாம் ஒரு தங்கச்சியா? :(

Thamizhmaangani said...

@சஞ்சய்,

//ஹ்ம்.. உங்கிட்ட போய் சொன்னேன் பாரு... நீ எல்லாம் ஒரு தங்கச்சியா? :(//

ஏய் என்ன அண்ணாத்த இப்படி சொல்லிட்டே.. வாழ்க்கையினா எப்ப பாத்தாலும் சந்தோஷமாகவே இருக்க முடியுமா என்ன? ஹாஹாஹா... எல்லாத்தையும் பாத்தா தான் வாழ்க்கை முழுமை அடையும்ண்ணா!:))

Karthik said...

//நீச்சல் தெரியாதவன்
எப்படியாவது
நீச்சலடித்து கற்று கொள்வான்!
நீச்சல் பிடிக்காதவன்
என்ன செய்வான்?

Did I write this one??
Seems so...
:)))

Anonymous said...

சரி உங்கள் கோபம் எங்களுக்கு புரிகிறது.

by
mcxmeega@gmail.com