Jan 1, 2009

Ups & Downs of my 2008

சென்ற வருஷத்துல கொஞ்ச சாதனை, கொஞ்ச கஷ்டங்கள். படிப்புன்னு சொல்ல போனால், எப்பவுமே கில்லி தான். இதே மாதிரி செஞ்சுட்டு வந்தா, நல்லா இருக்கும். என்ன ஒன்னு, அதுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டபடுனும். இந்த பரிட்சை நேரத்த நினைச்சாவே, படு காண்டாக்கீதுப்பா!

சந்தோஷமான தருணங்கள்-
2008ல நான் சாதிச்சது பாத்தீங்கன்னா... 150வது போஸ்ட் வலைப்பூவில். keyboard கத்துகொண்டது. யோகா செய்ய தொடங்கியது. அப்பரம்....ம்ம்ம்... வாழ்க்கையில செமையா கொண்டாடிய என் தோழி ஒருத்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம். என் weightயை சீராக வைத்திருப்பது. தேசிய கிரிக்கெட் அணியில் சேர்ந்தது....

கஷ்டமான தருணங்கள்:
காலில் muscle fibre torn ஆனது. கை வலி. இப்படி நிறைய உடல்நல குறை ஏற்பட்டது. ஆபரேஷன் வரையில் செல்ல வேண்டியதா போச்சு. ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். நிறைய மாதங்கள் வலைப்பூ பக்கமே வரவே இல்ல! வீட்டில் பல கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு, அதனால் நிறைய பிரச்சனைகள், மனவேதனைகள். இதனாலேயே, கிரிக்கெட் அணியிலிருந்து என்னை விலக சொன்னார்கள். இப்படி நான் ஆசைப்பட்டது என் கையைவிட்டு போனது.

எல்லாம் வருடமும் நல்லா இருக்கவேண்டும் என்பதே ஆசை. அத்தனைக்கும் ஆசைபடுவோமே! :) புத்தாண்டு வாழ்த்துகள் என் வலைப்பூவுக்கு... உங்களுக்கும்!

5 comments:

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Karthik said...

Wish you happy new year!
:)

May you always keep on rocking!

ச.பிரேம்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துகள் தமிழ் :)

தமிழ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

காண்டீபன் said...

/பிறந்தநாள் கொண்டாட்டம். என் weightயை சீராக வைத்திருப்பது. தேசிய கிரிக்கெட் அணியில் சேர்ந்தது....//

கண்டிப்பா வாழ்த்த வேண்டிய விஷயம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.