Jun 10, 2008

காதலுக்கு மரியாதை-பாகம் 1

“டேய் என்னடா இது? இதுல்லாம் ரொம்ப தப்பு சுதாகர்?” என்று செல்ல கோபத்துடன் சொன்னாள் நந்தினி.

“ ஏய், நீ சும்மா இரு. இன்னிக்கு நம்ம •பிரண்ட் சுதாகரோட பிறந்தநாள். அதுவும் என்ன ஸ்பெஷல்! அவனுக்கு இன்னிக்கு 18 வயசு ஆகுது. இனி அவன் 'தம்' அடிக்கலாம், தண்ணி அடிக்கலாம், ஸைட் அடிக்கலாம்...” என்று குறும்புடன் கை கொட்டி சிரித்தான் சிவா.

“டேய் சும்மா இருடா. ஓவரா பேசாதே. அப்படியெல்லாம் ஒன்னும் செய்யமாட்டேன். இன்னிக்கு 18 வயசு ஆகுதுல, அதான் பெரிய மனுஷன் ஆகிடோம்னு ஒரு ஃபீல் வர்றதுக்கு, யாருக்கும் தெரியாம திருட்டு தம் அடிக்கபோறோம். மத்தபடி ஒன்னும் இல்ல நந்தினி.” என்றான் நமட்டுச் சிரிப்புடன் சுதாகர்.

இப்படியே மூவரும் பேசி கொண்டே தங்கள் கல்லூரி அருகே இருக்கும் பூங்காவிற்குச் சென்றனர். பூங்காவில் நிறைய மரத்தடிகளும் செடிகளும் அடர்த்தியாக இருக்கும். அங்கே சென்று தங்களின் கொண்டாடத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சுதாகர் முடிவு செய்திருந்தான்.

இவர்கள் மூவரும் பூங்காவைச் சென்றுடையவதற்குள் இவர்களைப் பற்றி சொல்லிவிட வேண்டும்.

நந்தினி, சுதாகர், சிவா ஆகியோர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள். ஒவ்வொருவரும் வேறு வகுப்பைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் பாடங்கள் இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மூவருமே ஒன்றாகதான் இருப்பார்கள். மூவருமே இணைபிரியாத நண்பர்களும்கூட.

நந்தினி- இவளும் மற்ற பெண்கள் மாதிரி சாதாரணமாகதான் தோன்றுவாள். ஆனால் மனதிற்குள் ஒரு பெரிய இலட்சியத்துடன் வாழ்கிறாள். நன்கு படித்து நல்ல ஆசிரியராக வரவேண்டும் என்ற இலக்குடன் இருக்கும் திறமைசாலி. இரண்டு வயது இளையவன் ஒரு தம்பி உள்ளது. அம்மா தொழிற்சாலையில் சாதாரண வேலையில் பணி புரிகிறாள். பாவம்! நந்தினி நான்கு வயதாகும்போது அவள் அப்பா இந்தக் குடும்பத்தைவிட்டு வேறு ஒருத்தியுடன் ஓடிவிட்டார். இதனாலேயே நந்தினிக்கு ஆண் வர்க்கத்தின் மீது சிறு வயதிலிருந்தே கோபம். ஆனால் சுதாகரின் நட்பு கிடைத்தபிறகு அவள் கொஞ்சம் கொஞ்சமாக ஆண்கள் மீது இருக்கும் தன் கோபத்தைக் குறைத்துக் கொண்டாள். இருந்தாலும் அவள் ஆழ்மனத்தில் படிந்த வடு முழுமையாக அழியவில்லை.

சுதாகர்- இவன் குறும்புத்தனம் கொண்டவன். எல்லோரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவன். மற்றவர்களின் மீது அக்கறையும் அன்பும் கொண்டவன். உதவி என்று வந்தால் தயங்காமல் உதவி செய்வான். நந்தினியின் மன மாற்றத்திற்குக் காரணமானவன். வாழ்க்கையின் அஸ்திவாரமே அவன் வைத்துக் கொண்ட ஒரு கொள்கையில்தான் அடங்கியது என்று எண்ணுபவன். என்ன கொள்கை தெரியுமா? ‘ஜாலியா இருக்காலம், போலியாகதான் இருக்கக் கூடாது!’

சிவா- இவனும் நல்லவன்தான். ஆனால் காலமும் விதியும் யாரை விட்டுவைத்தது. சுயபுத்தி இல்லாதவன் என்ற ஒரு கெட்ட குணமே அவனிடத்திலுள்ளது.

பூங்காவைச் சென்றுடைந்தனர். யாரும் பார்க்க முடியாத ஒரு அடர்த்தியான செடிக்குப் பின்னால் சென்றனர். இதற்குக் காவல் நந்தினிதான்! யாரேனும் திடீரென்று வந்துவிட்டால், அவர்களுக்கு முன் எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று சுதாகர் நந்தினியிடம் சொல்லியிருந்தான். நந்தினி இவர்கள் செய்யும் குறும்புத்தனத்தை ரசித்தபடி தூரத்தில் நின்று கொண்டு காவல் காத்தாள்.

தொலைவில் நின்ற சுதாகர் நந்தினியை உறக்கக் கூப்பிட்டான், “ஏய் நந்தினி, எங்கள கவுத்துடாதே தாயி. யாராச்சு வந்தா சிக்கினல் கொடு. அப்பரம் இன்னொரு விஷயம். இந்த 'தம்' சும்மா ஜாலிக்காகதான் அடிக்கிறோம். அப்படியே இன்னிக்கு அப்பறம் இந்தப் பழக்கம் எனக்கு ஒட்டிக்கிச்சுனா நீதான் என்னை நல்ல வழிக்குக் கொண்டு வரனும் தாயே!” என்று இரு கைகளைக் கூப்பி கும்பிட்டான்.

சிரித்தபடியே நந்தினி “அடிங்க, சரி சரி, உலறாம, சீக்கிரம் முடிச்சுட்டு வாங்கப்பா, டைம் ஆச்சு” என்றாள் அவளும் உறத்த குரலில்.

பிறகு கொண்டாடத்தை முடித்துக் கொண்டு மூவரும் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தனர். சுதாகருக்கும் சிவாவிற்கும் கொண்டாடத்தை நினைத்து ஒரே பேரானந்தம். இவர்களின் முக மலர்ச்சியைக் கண்டு புன்னகையிட்டாள் நந்தினி.

மறுநாள் கல்லூரி முடிந்து மூவரும் மதியம் உணவு சாப்பிட பக்கத்திலிருக்கும் உணவகத்திற்குச் சென்றனர். எப்பொழுதும் போல மூவருமே சிரித்துப் பேசி கொண்டு உணவகத்தை நோக்கிச் சென்றனர்.

“ என் கணக்கு வாத்தியாருக்கு அறிவே இல்ல. கணக்கே தெரியாத ஆளா இருக்காரு,” என்று சொன்னபடி சுதாகர் உணவகத்தின் கதவைத் திறந்தான்.

உள்ளே நுழைந்தபடி சிவா “ஏன்?” என்றான் ஆச்சிரியத்துடன்.

“ அது ஒன்னு இல்லடா. இந்த வாத்தியாரு அவரோட நாலாவது பொண்ணுக்கு ‘அஞ்சு’னு பேரு வச்சருக்காரு” என்று சுதாகர் சொல்லி முடிப்பதற்குள் சிவா அனைவருக்கும் கேட்கும்படி சத்தம்போட்டு விழுந்து விழுந்து சிரித்தான்.

நந்தினிக்கும் சுதாகர் சொன்னதைக் கேட்டவுடன் சிரிப்பு வந்தது. ஆனால் சிவாவின் இறைச்சலான சிரிப்பைக் கண்டு அனைவரும் அவர்களையே பார்த்தனர்.

இதை அறிந்து கொண்ட நந்தினி, “ சிவா, அமைதியா இருடா. எல்லாரும் நம்மலே பாக்குறாங்க” என்றாள்.

நந்தினி சொல்லியும் சிவாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு தனது சிரிப்பு சத்தத்தை தொடர்ந்து கொண்டிருந்தான். பின்னர், ஒரு வழியாய் சிரிப்பை அடக்கிக் கொண்டான் சிவா. மூவரும் தங்களின் உணவை வாங்கிக் கொண்டு காற்றாடிக்குக் கீழ் இருக்கும் மேசை ஒன்றில் உட்கார்ந்தனர்.

“அட பாவி என்னடா இப்படி loud சிபிக்கரை முழுங்கன ஆளு மாதிரி சிரிச்சு மானத்த வாங்குறே,” என்று சுதாகர் வாங்கிய தோசையை வாயில் அடைத்தபடி சொன்னான்.

அந்த சமயத்தில் கடைக்குள் நுழைந்த பவித்ரா இவர்களைப் பார்த்துவிட்டாள். பவித்ரா அதே கல்லூரியில் படிக்கும் மாணவி. பவித்ரா ஒரே பந்தா பொண்ணு. எந்த புது பொருளை வாங்கினாலும் அதை மற்றவர்களிடம் காட்டி பந்தா செய்து கொள்வாள். இவளுக்குப் பட்ட பெயரே “பந்தா பவித்ரா”! பவித்ரா இவர்களை நோக்கி வருவதைக் கண்டுகொண்ட சுதாகர்,



“ வந்துட்டாயா! வந்துட்டாயா!” என்றான் வடிவேலு பாணியில். மூவரும் சிரித்துக் கொண்டனர்.

“ஹாய் பிரண்ட்ஸ், என்ன பண்ணுறீங்க?” என்று கொஞ்சும் தமிழில் பம்பாய் ஹீரோயின் போல கேட்டாள் பவித்ரா.



“ ஓ.. நாங்களா புலிய வேட்டையாடிக்கிட்டு இருக்கோம்,” என்று கிண்டலாகச் சொன்னான் சுதாகர்.



“ ஏய் naughty boy” என்று செல்லமாக சுதாகர் பின் மண்டையில் ஒரு தட்டு தட்டி, அவன் பக்கத்தில் காலியாக இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்தாள். தான் புதிதாக வாங்கிய கையடக்கத் தொலைபேசியைக் கைபையிலிருந்து எடுத்து 'பந்தா' செய்ய ஆரம்பித்துவிட்டாள்.



“ ஏய் guys, யூ நோ, திஸ் ஸ் எ நியூ நோக்கியா போன். camera quality ரொம்ப நல்லா இருக்கும்” என்று கொஞ்சி கொஞ்சி பேசினாள். திடீரென்று அவள் எதிரே அமர்ந்திருந்த நந்தினியையும் சிவாவையும் தன் கையடக்க தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்தாள்.

“கிளிக்” என்ற சத்தத்தைக் கேட்ட சிவா, “ பவித்ரா, என்ன செய்யுற?” என்றான்.


உடனே பவித்ரா தான் எடுத்ததை அவர்களிடம் காட்டினாள். படம் அழகாக தொலைபேசியில் பதிந்திருந்ததைக் கண்டு பெருமிதம் அடைந்தாள் பவித்ரா. மறுபடியும், தன் பையில் வைப்பதற்கு முன்னால் இன்னொரு முறை படத்தைப் பார்த்து,



“ ஏய், நீங்க இரண்டு பேரும் பார்க்க உண்மையான ‘லவ்’ ஜோடி மாதிரி இருக்கீங்க” என்று கேலியாக சொன்னாள்.



தான் பெரிய ஜோக் அடித்ததாக எண்ணி அவள் சிரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள். “ அடச்சே, இது சரியான லூசு” என்று திட்டிக் கொண்டு சாப்பிட தொடர்ந்தான் சுதாகர்.

ஆனால் நந்தினிக்குதான் மனதில் ஏதோ ஒரு அலை தாக்கியதுபோல உணர்ந்தாள். பவித்ரா சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் எதிரொலி போல ஒலித்துக் கொண்டே இருந்தது-

“ நீங்க லவ் ஜோடி மாதிரி இருக்கீங்க.”

அந்த நொடியிலிருந்த அவள் மனதில் ஏதோ ஒரு சலனம் ஏற்பட்டுவிட்டது. சிவாவைப் பார்க்கும்போது எல்லாம் அவள் பார்வை வேறு விதத்தில் அமைந்திருப்பதைக் கண்டு அவள் வியந்து போனாள்.

தனக்குள் ஏதேதோ நடப்பதை அறிந்தும் அறியாமலும் திக்குமுக்காடினாள். திடீரென்று மனத்திற்குள் ஒரு ரோஜாகூட்டமே பூத்ததாகத் தோன்றியது. அன்று இரவு இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே மல்லாந்து படுக்கும் நந்தினிக்கு அன்றிரவு மல்லாந்து படுக்க கூச்சமாக இருந்தது. ஒருக்களித்து கால்களை மடக்கிக் கொண்டு தூங்க முற்பட்டாள். ஆனால் உறக்கம் ஒரு ‘இஞ்’ கூட அவளிடம் நெருங்கவில்லை. இதுதான் காதல் வந்ததற்குரிய அறிகுறியோ?

பாகம் 2
பாகம் 3

26 comments:

ஆகாய நதி said...

hmmm... super starting... continue...:)

நவீன் ப்ரகாஷ் said...

கதை நல்லா சுவாரஸ்யமா ஆரம்பமாகி இருக்கு காயத்ரி... :)))

நவீன் ப்ரகாஷ் said...

அட போற போக்கிலே சொல்லிட்டு
போன ஒரு வார்த்தை லட்சியத்தோட
வாழ்ற பொண்ண இப்படி மாத்திடுச்சே....:)))))

FunScribbler said...

@ஆகாய நதி,

நன்றி உங்களது பாராட்டுகளுக்கு!

FunScribbler said...

@நவீன்,

நன்றி!

//அட போற போக்கிலே சொல்லிட்டு
போன ஒரு வார்த்தை லட்சியத்தோட
வாழ்ற பொண்ண இப்படி மாத்திடுச்சே....:)))))//

ஆஹா.. one-liners ரொம்ப சூப்பரா சொல்லுறீங்க! நீங்க சினிமா பக்கம் போலாமே!! ஹாஹா..:))

மங்களூர் சிவா said...

ம் ஆரம்பம் அமர்களமாதான் இருக்கு எப்பிடி எடுத்துகிட்டு போறீங்கன்னு பாப்போம்.

Sanjai Gandhi said...

என்ன ஆளாளுக்கு சிவா சிவானு ஒரு சப்பை:P பேரையே ஹேரோவுக்கு வைக்கிறிங்க.. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.. சஞ்சய்னு வச்சா என்ன கொறஞ்சிடுவீங்க.. :(

//அவனுக்கு இன்னிக்கு 18 வயசு ஆகுது. இனி அவன் 'டம்' அடிக்கலாம், தண்ணி அடிக்கலாம், ஸைட் அடிக்கலாம்...” //

அடப்பாவிகளா.. எங்க ஊர்ல 18 வயசு வந்தா ஓட்டு தான் போட முடியும்.. உங்க ஊர்ல இதெல்லாம் பண்ணலாமா? :P....

//“ ஏய், நீங்க இரண்டு பேரும் பார்க்க உண்மையான ‘லவ்’ ஜோடி மாதிரி இருக்கீங்க” என்று கேலியாக சொன்னாள்.//

பத்த வச்சிட்டியே பரட்டை.. :))

//தனக்குள் ஏதேதோ நடப்பதை அறிந்தும் அறியாமலும் திக்குமுக்காடினாள். திடீரென்று மனத்திற்குள் ஒரு ரோஜாகூட்டமே பூத்ததாகத் தோன்றியது. அன்று இரவு இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே மல்லாந்து படுக்கும் நந்தினிக்கு அன்றிரவு மல்லாந்து படுக்க கூச்சமாக இருந்தது. ஒருக்களித்து கால்களை மடக்கிக் கொண்டு தூங்க முற்பட்டாள். ஆனால் உறக்கம் ஒரு ‘இஞ்’ கூட அவளிடம் நெருங்கவில்லை. இதுதான் காதல் வந்ததற்குரிய அறிகுறியோ?//

அட..அட.. ககக போ...:)))

.. தங்கச்சி என்னையும் கதை படிக்க வச்சிட்டயே... ரொம்ப சூப்பர்.. விரைவில் தொடரட்டும்....

மங்களூர் சிவா said...

/
SanJai said...

என்ன ஆளாளுக்கு சிவா சிவானு ஒரு சப்பை:P பேரையே ஹேரோவுக்கு வைக்கிறிங்க.. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.. சஞ்சய்னு வச்சா என்ன கொறஞ்சிடுவீங்க.. :(
/


சஞ்சய்ங்கிற பேர்ல மட்டும் என்ன வாழுதாம்!?!?!?

கும்மக்கூடாதுன்னு நினைச்சாலும் விட மாட்டிங்களே மக்கா

மங்களூர் சிவா said...

/
நந்தினி, சுதாகர், சிவா ஆகியோர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள்.
/

காயத்திரி சிவா மட்டும் முதலாண்டு இல்லைனா ப்ளஸ் டூ நு போட்டிருக்கலாம் வயசு ஜாஸ்தியா சொல்லிட்டியே
:(

மங்களூர் சிவா said...

/
சிவா- இவனும் நல்லவன்தான். ஆனால் காலமும் விதியும் யாரை விட்டுவைத்தது. சுயபுத்தி இல்லாதவன் என்ற ஒரு கெட்ட குணமே அவனிடத்திலுள்ளது.
/

திடீர்னு பாக்க சொல்ல அப்பிடித்தான் தெரியும் ஆனா செம கில்லாடி

மங்களூர் சிவா said...

/
சிவாவைப் பார்க்கும்போது எல்லாம் அவள் பார்வை வேறு விதத்தில் அமைந்திருப்பதைக் கண்டு அவள் வியந்து போனாள்.
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
தனக்குள் ஏதேதோ நடப்பதை அறிந்தும் அறியாமலும் திக்குமுக்காடினாள்.
/

கவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
திடீரென்று மனத்திற்குள் ஒரு ரோஜாகூட்டமே பூத்ததாகத் தோன்றியது.
/

மவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
அன்று இரவு இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே மல்லாந்து படுக்கும் நந்தினிக்கு அன்றிரவு மல்லாந்து படுக்க கூச்சமாக இருந்தது.
/

திரும்ப
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/

ஒருக்களித்து கால்களை மடக்கிக் கொண்டு தூங்க முற்பட்டாள். ஆனால் உறக்கம் ஒரு ‘இஞ்’ கூட அவளிடம் நெருங்கவில்லை. இதுதான் காதல் வந்ததற்குரிய அறிகுறியோ?
/

நல்ல அறிகுறிதான்
நடக்கட்டும் நடக்கட்டும்

மங்களூர் சிவா said...

இவ்வளவு கும்மறதால சிவா-வை வில்லனா மாத்திறாத தாயி !!!

மங்களூர் சிவா said...

கதைல வில்லன் கேரக்டர் இருந்தா அதுக்கு சஞ்சய்னு பேர் வெச்சா கரிக்கிட்டா இருக்கும்

Divya said...

கதையின் ஆரம்பம் அசத்தல்!

Divya said...

\தனக்குள் ஏதேதோ நடப்பதை அறிந்தும் அறியாமலும் திக்குமுக்காடினாள். திடீரென்று மனத்திற்குள் ஒரு ரோஜாகூட்டமே பூத்ததாகத் தோன்றியது\\

திறமையும் இலட்சியமும் உள்ள பொண்ணுக்கும் இந்த கதி தானா.......எல்லாம் வயசு கோளாறு:)))

Divya said...

டயலாக்ஸ் எல்லாம் ரசிக்கும் படியாக இருக்கிறது தமிழ்மாங்கனி!!

Divya said...

அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டீங்க்ஸ்........

FunScribbler said...

@மங்களூர் சிவா,

//ம் ஆரம்பம் அமர்களமாதான் இருக்கு எப்பிடி எடுத்துகிட்டு போறீங்கன்னு பாப்போம்.//

நன்றி!:))

//சிவா மட்டும் முதலாண்டு இல்லைனா ப்ளஸ் டூ நு போட்டிருக்கலாம்//

சின்ன வயசு பையன காதலிக்க,நான் என்ன பாலசந்தர் மாதிரி கதையா எழுதுறேன். ஏதோ டைம் பாஸுக்கு கதை எழுதுனா, என்னைய சர்ச்சையில மாட்டிவிடுற மாதிரி இருக்கே!!:))

//திடீர்னு பாக்க சொல்ல அப்பிடித்தான் தெரியும் ஆனா செம கில்லாடி//

யப்பா, ஆண்டவா.. என்னை காப்பாத்து!!

//இவ்வளவு கும்மறதால சிவா-வை வில்லனா மாத்திறாத தாயி !!!//

உன் குத்தமா என் குத்தமா, யார நானும் குத்தும் சொல்ல!!:))

FunScribbler said...

@சஞ்சய்,

கவலை வேணாம் அண்ணா, அடுத்த கதையில ஹீரோ, ஹீரோயின், மற்ற எல்லாம் கதாபாத்திரங்கள் பெயரும் சஞ்சய்னு வச்சுடுறேன். ஓகே!! :))cool down.. cool!

//தங்கச்சி என்னையும் கதை படிக்க வச்சிட்டயே... ரொம்ப சூப்பர்.. //

அண்ணனுக்கு ஒரு நல்லது பண்ணலாம்னு.. அதான்!

FunScribbler said...

@திவ்ஸ்,

//கதையின் ஆரம்பம் அசத்தல்!//

//டயலாக்ஸ் எல்லாம் ரசிக்கும் படியாக இருக்கிறது தமிழ்மாங்கனி!!//

நன்றி திவ்ஸ்!!

//அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டீங்க்ஸ்........//

வந்துகிட்டே இருக்கு...

Shwetha Robert said...

very good start Tamilmangani:-)

dialogues are funny and nice, liked them.

next part cheekram podunga:)))

FunScribbler said...

@shwetha,

thanks man for ur comments!