Jun 24, 2008

120 மணி நேரம் படம் பார்த்து சாதனை!

120 மணி நேரம் தொடர்ந்து 48 ஹிந்தி படங்களை பார்த்து உலக சாதனை புரிந்திருக்கிறார் மதுராவை சேர்ந்து ஆஷிஷ் ஷர்மா. இதற்கு முன் ஜெர்மனிய நாட்டை சேர்ந்த claudia wavra தான் 117 மணி நேரம் தொடர்ந்து படம் பார்த்து சாதனை பட்டியலில் இருந்தார். அதை முறியடித்துவிட்டார் ஆஷிஷ்.

ஜூன் 11 காலை 11.08 ஆரம்பித்தவர் ஜூன் 16 ஆம் தேதி இரவு 8.12 வரை தொடர்ந்து 48 படங்களை பார்த்தார். ஒவ்வொரு படம் முடிந்தபிறகு அவருக்கு 10 நிமிடம் பிரேக் கொடுக்கப்பட்டது. நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை டாக்டர் வந்து பரிசோதனை செய்தார். சாதனையை நிகழ்த்திய ஆஷிஷ் தன் ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை எண்ணி பெருமிதம் கொண்டார்.

இச்செய்தியை படித்தபிறகு, எனக்கும் சாதனை பண்ணவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. தொடர்ந்தாற்போல் 120 மணி நேரம் நான் என் வலைப்பூவில் பதிவுகளை அள்ளி வீசலாம் என்று எண்ணியுள்ளேன். எப்படி?

why? why? ஏன் எல்லாரும் அழுவுறீங்க!! நோ நோ! சரி சரி சரி... நான் எழுதல!

நாலு பேரு நல்லா இருக்கனும்னா இந்த நாயகன்(நாயகி) எதையும் செய்வாள்.(பின்னாடி நாயகன் தீம் மியூசிக் கேட்குதா...)

13 comments:

முகுந்தன் said...

//why? why? ஏன் எல்லாரும் அழுவுறீங்க!! //

வேணாம் வலிக்குது (:-

Shwetha Robert said...

சரி சரி சரி... நான் எழுதல!

---------
habbada thapichom:-)

தமிழன்-கறுப்பி... said...

///நாலு பேரு நல்லா இருக்கனும்னா இந்த நாயகன்(நாயகி) எதையும் செய்வாள்.(பின்னாடி நாயகன் தீம் மியூசிக் கேட்குதா...)///

(இல்ல நான் அழுகிற சத்தம் கேக்குதே புரியலை...)

ரசிக்கும் படியா எழுதுறிங்க காயத்ரி:)

Anonymous said...

சத்தியமா கேட்குதுங்கோ :))

FunScribbler said...

@முகுந்தன்,

//வேணாம் வலிக்குது (:-//

மருந்து போடுங்க!

என்னது?

நான் இன்னொரு பதிவ போடுவதே மருந்து போட்ட மாதிரியா! ஆஹா.. ரொம்ப பாசக்கார பயப்புள்ளைங்களா தெரியுதே!!:))

FunScribbler said...

@ஸ்வேதா,

//habbada thapichom:-)//

வா மா மின்னல்! என்ன அடிக்கடி same சைடு கோல் போடுறே! ஹிஹிஹி...

FunScribbler said...

@தமிழன்,

//ரசிக்கும் படியா எழுதுறிங்க காயத்ரி:)//

பாராட்டுகள் என்னை உற்சாகப்படுத்திவிட்டன! நன்றி!:)

FunScribbler said...

@மதிகெட்டான்,

//சத்தியமா கேட்குதுங்கோ :))//

அது! :)

முகுந்தன் said...

//என்னது?

நான் இன்னொரு பதிவ போடுவதே மருந்து போட்ட மாதிரியா! ஆஹா.. ரொம்ப பாசக்கார பயப்புள்ளைங்களா தெரியுதே!!:))//

இன்னொரு பதிவா.....(விவேக் ஸ்டைலில் படிக்கவும்)

அம்ம்ம்மா....(வடிவேலு ஸ்டைல்....)

மங்களூர் சிவா said...

/
இச்செய்தியை படித்தபிறகு, எனக்கும் சாதனை பண்ணவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. தொடர்ந்தாற்போல் 120 மணி நேரம் நான் என் வலைப்பூவில் பதிவுகளை அள்ளி வீசலாம் என்று எண்ணியுள்ளேன். எப்படி?
/

என்னது? சதாம் உசேன கொன்னுட்டாங்களா?????????

FunScribbler said...

@சிவா சித்தப்பு,

//என்னது? சதாம் உசேன கொன்னுட்டாங்களா?????????//

சித்தப்பு, வேணாம்! அழுதுடுவேன்!:)

Vijay said...

ஒரு தனி இருட்டறையில் ஒரே ஒரு தடவை ஈவில் டெட் (Evil Dead Part - 1) பார்க்கட்டும், நான் ஒப்பொக்கொள்கிறேன், இவர் செய்தது உலக சாதனையென்று.

FunScribbler said...

@விஜய்,

//ஒரு தனி இருட்டறையில் ஒரே ஒரு தடவை ஈவில் டெட் (Evil Dead Part - 1) பார்க்கட்டும், நான் ஒப்பொக்கொள்கிறேன், இவர் செய்தது உலக சாதனையென்று.//

அவ்வளவு தூரம் போகவேண்டாம், நம்ம 'வீராசாமி' படத்த பார்க்கட்டும்.. நானே அவருக்கு உலகம் எங்கும் சிலை வைக்குறேன்!!:))