Jun 13, 2008

என் அறைக்கும் கடவுள் வருவாரா?

'அறை எண் 305ல் கடவுள்' படத்தை இரண்டு நாளைக்கு முன்னாடி தான் பார்த்தேன். ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவில் இல்லாவிட்டாலும், ஒரு சில கருத்துகள் எனக்கு பிடிச்சிருந்தது.


பிரகாஷ்ராஜ் கடவுள் வேடத்தில் நல்லாவே செய்துள்ளார். அவர் சொன்ன ஒரு விஷயம்- கடவுள் இதை செய்யனும் அதை செய்யனும் என்று மனிதர்களிடம் ஒரு போதும் சொன்னதில்லை. ஆனால், நாம் தான் தேவையில்லாமல் பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். கடவுளிடம் நான் கேட்க விருப்பப்படும் சில கேள்விகள்...


*வெள்ளிக்கிழமை ஏன் சைவமாக இருக்கனும்?


*சித்திரை மாதத்தில் பிள்ளை பிறந்தால் ஆகாது என்கிறார்களே, அது ஏன்?

*செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு புது காரியத்தை தொடங்கவேண்டாம் என்கிறார்களே, அது ஏன்?


*ஏன் புரட்டாசி மாதம் சைவமாக விரதம் இருக்கனும்?


என்னை பொருத்த அளவில், இதில் பல விஷயங்கள் மனிதர்களே உருவாக்கி கொண்டவை. ஆனால், அதற்கு ஏன் கடவுளுக்கு செய்கிறோம் என்கிறார்கள்? கடவுள் இப்படி செய்ய சொன்னாரா? என்பது தான் என் கேள்வி.


வெள்ளிக்கிழமை சைவமாக இருந்து கோயிலுக்கு சென்று வழிபட்டால், மனதிருப்தி கிடைக்கும், மனம் சந்தோஷம் அடையும் என்கிறார்கள் பலர். இது இவர்களின் நம்பிக்கை.


அதே போல, அதே வெள்ளிக்கிழமை, ஒரு அஞ்சப்பர் கடைக்கு சென்று ஒரு கோழி பிரியாணி உண்டால், எனக்கு மனதிருப்தி வருகிறது. மனம் சந்தோஷம் அடைகிறது. அப்ப, சந்தோஷம் இருக்கும் இடம் கடவுள் என்றால், இதுவும் கடவுள் இருக்கும் இடம் தானே!! இது என் நம்பிக்கை.


என் ஆதங்கம், என்னவென்றால், அவரவருக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஒருவரின் நம்பிக்கையை இன்னொருவரின் மேல் திணிக்கவேண்டாம் என்பதே என் ஆசை. வீட்டுல இதை சொன்னால், பல கருத்து வேறுபாடுகள் வெடிக்கும். :))


நான் ஒரு பயங்கரமான அசைவ பிரியர். ஆனா, கொடுமை பாருங்க, நான் பிறந்தது புரட்டாசி மாதத்தில். வீட்டில் புரட்டாசி விரதம் இருப்பார்கள். சுத்த சைவமாக இருப்பார்கள். நான் பிறந்தது முதல் இன்றுவரை, எனக்கும் விருப்பமான உணவை(அசைவ உணவு) என் பிறந்தநாள் அன்று சாப்பிட்டதே இல்ல!! சிறு வயதாக இருந்தபோது, இதை நினைத்து ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கேன். இதை பத்தி சொல்லும்போது, நிறைய பேர் நினைக்கலாம் "இதலா சின்ன விஷயம்.. இதுக்கு போய்.. "




ஆனா, நினைத்து பாருங்க, நமக்கென்ற ஒரு நாள்(பிறந்த நாள்), அன்றுகூட விருப்பமான உணவை உண்ணமுடியவில்லை என்றால், விரதம் எதற்கு?? கடவுளின் பெயரால் விரதம் எதற்கு??


இப்படி பல கேள்விகளை வீசி, கடவுளிடம் பதில் வாங்க வேண்டும். அறை எண் 305ல் கடவுள் படத்தை பார்த்த பிறகு, என் மனதில் எழுந்த ஒரு கேள்வி,


"என் அறைக்கும் கடவுள் வருவாரா?"


படத்தில் பிரகாஷ்ராஜ் கடவுள் வேடத்தில் வந்தார் படத்தில், ஆனால் என் அறைக்கு வருவது என்றால், இந்த உருவத்தில்







அல்லது இந்த உருவத்தில் வரவேண்டும்! ஒகே கடவுளே? ஹிஹி..


17 comments:

துளசி கோபால் said...

நோ சான்ஸ்(-:

thamizhparavai said...

//அதே வெள்ளிக்கிழமை, ஒரு அஞ்சப்பர் கடைக்கு சென்று ஒரு கோழி பிரியாணி உண்டால், எனக்கு மனதிருப்தி வருகிறது. மனம் சந்தோஷம் அடைகிறது. அப்ப, சந்தோஷம் இருக்கும் இடம் கடவுள் என்றால், இதுவும் கடவுள் இருக்கும் இடம் தானே!! இது என் நம்பிக்கை.//
எனது நம்பிக்கையும் கூட..

Shwetha Robert said...

both of them are handsome,good choice Gayathiri:)

FunScribbler said...

@துளசி,

//நோ சான்ஸ்(-://

ஆஹா.. :))

FunScribbler said...

@thamizhparavai

//எனது நம்பிக்கையும் கூட//

ஓ, வாங்க வாங்க, நீங்க நம்ம கட்சியா! மகிழ்ச்சி மகிழ்ச்சி! :))

FunScribbler said...

@ஸ்வேதா,

//both of them are handsome,good choice Gayathiri:)//

நன்றி! உங்க அறைக்கும் வர சொல்றேன்.. யாம் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெறட்டும்!!:))

Dreamzz said...

எல்லாத்துக்கும் கடவுளே வர முடியுமா! சிலதுக்கு நாம தான பதில் சொல்லனும்...

'வெள்ளிக்கிழமை ஏன் சைவமாக இருக்கனும்?'

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு கூட ஒரு நாளாவது விரத கட்டுப்பாடு வேண்டும் என்பதால்...

'சித்திரை மாதத்தில் பிள்ளை பிறந்தால் ஆகாது என்கிறார்களே, அது ஏன்?''
சித்திரை வெயில் - தண்ணீர் தட்டுப்பாடு - தண்ணீர் வழி பரவும் நோய்கள் அதிகம் உள்ள காலம் என பல காரணங்கள்.

'செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு புது காரியத்தை தொடங்கவேண்டாம் என்கிறார்களே, அது ஏன்?''
'ஏன் புரட்டாசி மாதம் சைவமாக விரதம் இருக்கனும்?'

இதை எல்லாத்தையும் கடவுள் கிட்ட கேட்கறீங்களே.. இதை என்ன கடவுளா உங்க கிட்ட சொன்னார்? யார் சொன்னாங்களோ அவிக கிட்ட கேளுங்கப்பு!(சரி.. பதில் தெரியலைனு சமாளிக்கிறேன்.. விடுங்க)


// இதில் பல விஷயங்கள் மனிதர்களே உருவாக்கி கொண்டவை./
ஓ அப்ப சில விஷயங்கள் கடவுள் உருவாக்கினார்னு நம்பறீங்களா... அந்த சில என்ன?


//ஆனா, நினைத்து பாருங்க, நமக்கென்ற ஒரு நாள்(பிறந்த நாள்), அன்றுகூட விருப்பமான உணவை உண்ணமுடியவில்லை என்றால், விரதம் எதற்கு?? கடவுளின் பெயரால் விரதம் எதற்கு??
/
சுத்தம்! ஏம்மா எது எதுக்கெல்லாம் கடவுளை சண்டைக்கு இழுப்பதுனு இல்லையா..

இதை ஏன் இப்படி எடுக்க கூடாது..

உன் பிறந்த நாள் அன்று, நீ உணராமலயே, பிற உயிர்களை கொன்று தின்னாமல் உன்னை
செம்மை படுத்துகின்றார் என்று :P

FunScribbler said...

@dreamz,

//எல்லாத்துக்கும் கடவுளே வர முடியுமா!//

வந்தா, தப்பில்லையே!:))

//கட்டுப்பாடு வேண்டும் என்பதால்...//

கட்டுப்பாடு என்பதே திணிக்கப்படும் ஒன்றாக அல்லவா தெரியுது!

//சித்திரை வெயில் - தண்ணீர் தட்டுப்பாடு - தண்ணீர் வழி பரவும் நோய்கள் அதிகம் உள்ள காலம் என பல காரணங்கள்.//

ஹாஹா.. இது எத்தனை பேருக்கு தெரியும்? இம்மாதத்தில் பிறந்தால், ஏதோ குத்த செயல் செஞ்சமாதிரி பாக்குறாங்க.. ம்ம்..

//ஓ அப்ப சில விஷயங்கள் கடவுள் உருவாக்கினார்னு நம்பறீங்களா//

இல்ல நான் அப்படி சொல்லவரல்ல.

//சுத்தம்! ஏம்மா எது எதுக்கெல்லாம் கடவுளை சண்டைக்கு இழுப்பதுனு இல்லையா..//

ஹாஹா.. சும்மா கேள்வி கேட்டாகூட சண்டை என்று சொல்வதா?

// பிற உயிர்களை கொன்று தின்னாமல்//

அப்படி பார்க்க போனால், சைவம்கூட ஒருவகையில் உயிர்களை கொல்வதற்கு சமம்.

(ஆஹா..அப்ப எதையுமே சாப்பிடமுடியாது போல இருக்கே! அவ்வ்வ்)

Anonymous said...

//அதே போல, அதே வெள்ளிக்கிழமை, ஒரு அஞ்சப்பர் கடைக்கு சென்று ஒரு கோழி பிரியாணி உண்டால், எனக்கு மனதிருப்தி வருகிறது. மனம் சந்தோஷம் அடைகிறது. அப்ப, சந்தோஷம் இருக்கும் இடம் கடவுள் என்றால், இதுவும் கடவுள் இருக்கும் இடம் தானே!!//

கரெக்ட்டுங்க...

வாரத்துல ஒரு நாள் மாசத்துல ஒரு நாள் என்று சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க...அதான் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை என்று குறிப்பா சொல்லி வச்சிட்டாங்க...

//என்னை பொருத்த அளவில், இதில் பல விஷயங்கள் மனிதர்களே உருவாக்கி கொண்டவை. ஆனால், அதற்கு ஏன் கடவுளுக்கு செய்கிறோம் என்கிறார்கள்? கடவுள் இப்படி செய்ய சொன்னாரா? என்பது தான் என் கேள்வி.//

கடவுளையே மனுசங்க தான் உருவாக்கி வச்சிருக்காங்க...கடவுள் எப்பிடிங்க சொல்லுவார்?

=

சித்திரை மாதம் பிள்ளை பிறக்க கூடாது என்பதற்காக தான் ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைக்கிறார்களாமா?

FunScribbler said...

@சிந்தாநதி,

//கடவுளையே மனுசங்க தான் உருவாக்கி வச்சிருக்காங்க...கடவுள் எப்பிடிங்க சொல்லுவார்?//

உண்மைதான்!

//சித்திரை மாதம் பிள்ளை பிறக்க கூடாது என்பதற்காக தான் ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைக்கிறார்களாமா?//

கடவுள் வந்தார்ன்னா கேட்டு சொல்லுறேன்.:))

Sathiya said...

சித்திரை மாதம் பிள்ளை பிறக்க கூடாது என்பதெல்லாம் வெயிலுக்காகனு நினைக்கிறேன். கடவுளை உருவாக்கினது மனிதன் தான் ஆனால் அதற்கு ஒரு காரணம் உள்ளது. பலர் இப்போது கடவுள் இருந்தாலும் இருப்பார், தப்பு செஞ்சா தண்டனை கிடைப்பது உறுதின்னு பயப்படறாங்களே அதற்காக தான். அப்படி கடவுள் என்று ஒருவரை உருவாக்கவில்லை என்றால் அவனவன் அவுத்து விட்ட கன்னுகுட்டி மாதிரி திரிவான். இப்போவே எத்தனை கொலைகள், கொள்ளைகள்? யோசிச்சு பாருங்க.

எங்க வீட்டுல கூட இந்த வெள்ளிக்கிழமை எல்லாம் மாமிசம் சாப்பிட கூடாதுன்னு சொல்லுவாங்க, போம்மா என்று சொல்லிவிட்டு மிலிட்டரி ஹோட்டல் போயி ஒரு பிடி பிடித்து விடுவேன்;) ஆனால் தங்கமணி வந்தப்புறம் மீர முடியல:(

எல்லாம் சரி, ஆனால் கடைசியா ரெண்டு போட்டோ போட்டீங்க பாருங்க அது கொஞ்சம் ஓவர்;)

Sathiya said...

//அண்ணாத்த, நான் கடவுள் இல்லை என்று ஒருபோதும் சொல்லவில்லை//
சரி சரி அப்போ கடவுள் இருக்காருன்னு சொல்றீங்க. நான் கடவுள் இருந்தாலும் இருப்பாரு ரகம். தசாவதாரதுக்கப்புறம், "இருந்தா நல்லா இருக்கும்".

FunScribbler said...

@சத்யா,

//தசாவதாரதுக்கப்புறம், "இருந்தா நல்லா இருக்கும்".//

கேட்டபிறகு,தியேட்டர்ல செம்ம விசில் அடிச்சோம்ல:))

ஜி said...

//ஒருவரின் நம்பிக்கையை இன்னொருவரின் மேல் திணிக்கவேண்டும் என்று தான் சொன்னேன்.:))
//

thinikkanumaa?? vendaama?? :)))

appo nambikkaina epdinga varum?? yaaro oruththanga ethavathu sollumpothuthaane namakku nambikkai varum... appadi nambikkai varanumnuthaan appadi ellaam solraangalo ennavo... aana varalainaa athukku avunga enna panna mudiyum?? ada.. naamathaan enna panna mudiyum???

FunScribbler said...

@சத்யா,

@சத்யா,

//அப்படி கடவுள் என்று ஒருவரை உருவாக்கவில்லை என்றால் அவனவன் அவுத்து விட்ட கன்னுகுட்டி மாதிரி திரிவான். இப்போவே எத்தனை கொலைகள், கொள்ளைகள்? யோசிச்சு பாருங்க.//

அண்ணாத்த, நான் கடவுள் இல்லை என்று ஒருபோதும் சொல்லவில்லை. கடவுளை வழிபாடு செய்யும் முறைகளை பற்றி தான் கேள்வி. அதிலும் எது சரி எது தவறு என்று நான் கூறவில்லை. ஒருவரின் நம்பிக்கையை இன்னொருவரின் மேல் திணிக்கவேண்டாம் என்று தான் சொன்னேன்.:))

//ஆனால் தங்கமணி வந்தப்புறம் மீர முடியல:(//

ஐயோ பாவம்ஸ், உங்க கஷ்டம் புரியது அண்ணாத்த.

//எல்லாம் சரி, ஆனால் கடைசியா ரெண்டு போட்டோ போட்டீங்க பாருங்க அது கொஞ்சம் ஓவர்;)//

ஆசைய அடக்க முடியலையே!:))

FunScribbler said...

@ஜி

//thinikkanumaa?? vendaama?? :)))//

sorry. spelling mistake in my comment. "திணிக்கவேண்டாம்"**

priyamudanprabu said...

எல்லம் சரி
கடைசிய எதற்க்கு வினய்??