Jun 17, 2008

சொல்ல மறந்த க(வி)தை

மறைக்கமுடியாத சோகத்தை
மறைத்துவைத்தது ஏனோ?
புரிந்துகொள்ளாத
சொந்தங்களை
பிரிந்து நிற்பது
சரி தானோ?


மற்றவன் சொல்படி
வாழ்க்கை வாழ்ந்து
முடிந்துபோகையில்
உன்
சொந்த வாழ்க்கை
உன்னைப் பார்த்து
"என்னை ஏன் வாழ மறந்தாய்?"
என்று கேட்கையில்
மற்றவன் இருக்கமாட்டான்.
தோற்றவனாய் நீ
நிற்பாய்!


போலியாய் வாழ்ந்தாய்!
உன் தன்மானம்
தினம் தினம்
தற்கொலை
செய்துகொண்டது.

ஆறுதல் கூற
ஆளில்லை
அழுத புரள
நேரமில்லை!

காலம் தான்
மருந்தாம்!
மருந்து காயத்தை
குணப்படுத்தும்
வலியை குணப்படுத்துமா?

11 comments:

Divya said...

எழுத்தின் மெருகு கூடியிருக்கிறது காயு, தேர்ந்த எழுத்தாளரைப் போன்ற எழுத்துக்கள்.....சூப்பர்!!

Anonymous said...

என்னை ஏன் வாழ மறந்தாய்?"
என்று கேட்கையில்
மற்றவன் இருக்கமாட்டான்.
தோற்றவனாய் நீ
நிற்பாய்!

yes..... enakkum ithu nernthathu...

enna panna ponathu ponathu thaan

en vazhkkaiyin ottu motha munnertamae adiyodu ponathu..
ippa feel pannee enna panna...

manathai varudum varikal..ninaithu paarkka vaikkum unmaikal

FunScribbler said...

@திவ்ஸ்,

//எழுத்தின் மெருகு கூடியிருக்கிறது காயு,//

நன்றி திவ்ஸ்!

FunScribbler said...

@anonymous,

//manathai varudum varikal..ninaithu paarkka vaikkum unmaikal//

நன்றி! :))

முகுந்தன் said...

ஒவ்வொரு வரியும் அற்புதம்....

FunScribbler said...

@முகுந்தன்,

//ஒவ்வொரு வரியும் அற்புதம்....//

நன்றி முகுந்தன்..

Divya said...

ஹே காயு, ப்ரோஃபல் இருக்கிற ஃபோட்டாவில் இருக்கிற பொண்ணு நீங்களா????????

இப்பத்தான் பார்த்தேன்....கண்ணாடி போட்டுண்டு ஸ்டைலா ஒரு பொண்ணு ஃபோட்டோ, நீங்கதானா??

FunScribbler said...

@divz,

//ஹே காயு, ப்ரோஃபல் இருக்கிற ஃபோட்டாவில் இருக்கிற பொண்ணு நீங்களா????????//

நான் தான்ங்க! :)))

ஜி said...

Kaayam gunamaachunna appuram vali irukaathulla??

eppadi porutpilai kandupudichenaa?? ;))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

thats right! good one :)

FunScribbler said...

@sathish,

//thats right! good one :)//

நன்றி கவிதையை படித்தமைக்கு.:)