Jun 21, 2008

அம்மா, நான் schoolக்கு போகல...

இரண்டு மாசம் லீவு முடிஞ்சு திங்கள் கிழமை காலேஜ் ஆரம்பிக்க போகுது. ஐயோ மறுபடியும் காலேஜ் ஆரம்பிக்க போகுதேனு நினைச்சாவே, எனக்கு அழுகாச்சியா வருது. (இந்த வயசுல போய்.. ச்சி..உனக்கு அசிங்கமா இல்ல அப்படினு நீங்க சொல்றது என் காதுல கேட்குதுங்க..)

இருந்தாலும் என்ன பண்ண... அம்புட்டு assignments, projects, weekly tests, surprise quizzes, exams மறுபடியும் வர போகுதுன்னு நினைச்சா, எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரியாவே இருக்கு!! இந்த ஒன்னாவது படிக்கற பசங்க, 'நான் ஸ்கூலுக்கு போகலனு" சொல்றது போல என் மனமும் அடம்பிடிக்கிறது. பரவாயில்ல... சமாளித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கு.

இந்த லீவுல நான் 4 புதிய விஷயங்களை கத்துக்கனும்னு ஆசைப்பட்டேன். அதுல இரண்டு விஷயம் ஓரளவுக்கு நல்லாவே வந்துட்டு.

1) musical keyboard கத்துக்கனும்னு நினைச்சேன். இப்ப 6 lessons போயிட்டேன். எனக்கு திடீரென்னு ஆசை வந்தது ar rehman பேட்டிய பாத்த பிறகுதான். தமிழ் புத்தாண்டு அன்று 'காபி வித் அனு' நிகழ்ச்சியில் பேசிய போது பாத்தேன். ரொம்ப inspirational போச்சு!! உடனே முடிவு பண்ணேன். பக்கத்துல உள்ள musical schoolல இப்ப keyboard கத்துகிறேன். 6 lesson போனபிறகு, ஏதோ ஏ ஆர் ரகுமானுக்கே நம்ம தான் குரு மாதிரி ஒரு ஃபீல்.(ஹிஹி.. இந்த build-upக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...)

உருப்படியா கத்துக்கிட்ட முதல் விஷயம் இது. தினமும் வீட்டிலும் பயிற்சி செய்வேன்.


2) இரண்டாவதா hip-hop dance கத்துகிட்டேன். ( நிறைய பேரு விழுந்து விழுந்து சிரிக்குற சத்தம் எனக்கு கேட்குது...hoi!!)

ரொம்ப நாளா எங்க பாட்டி சொல்வாங்க, மாவு ஆட்ட கத்துக்கோன்னு. அவங்க சொல்றத நான் இப்ப செய்றேன். நான் hip-hop டான்ஸ் ஆடுறது மாவு ஆட்டுற மாதிரியே இருக்கும். நமக்கு கையும் காலும் ஒரே நேரத்தில் coordination வராது. நான் போய் டான்ஸ் ஆடிட்டாலும்....ம்ஹும்... ஏதோ கையும் காலையும் குளிர்ஜொரம் வந்த மாதிரி அசைச்சுகிட்டு வந்துடுவேன்.

சும்மா டைம் பாஸுக்காக போனேன். அவ்வளவுதான்!

3) சமைக்க கத்துக்கிட்டேன்.(இல்ல இல்ல.. அப்படி ஆசைப்பட்டேன்.)

அம்மா அடிக்கடி சொல்வாங்க "சமையல் கத்துக்கோ, சமையல் கத்துக்கோ! போற இடத்துல இதுகூட சொல்லி தரலியானு என்னை தான் சொல்வாங்க...".

என்னது போற இடமா?? அப்படின்னா? என்று நான் கேட்பேன்( பதில் தெரிந்திருந்தும்..ஹிஹி..) அம்மா பதில் சொல்லமாட்டாங்க... அதுக்கு எல்லாம் இன்னும் நிறைய வருஷம்ம்ம்ம்ம் இருக்கு. இருந்தாலும் டைம் பாஸுக்காக சமையலறைக்குள்ளே புகுந்து என் வேட்டையை ஆரம்பித்தேன்..

முதல் நாளே mutton fry, ரசம்! சாப்பிட்டோம்! அதுக்கு அப்பரம் எனக்கு 4 நாள் mouth ulcer வந்துட்டு! உணவினால் வந்த பிரச்சனையா? இல்ல..சும்மா coincidenceஆ நடந்ததானு தெரியல.. அதுக்கு அப்பரமும் நான் என் வேட்டையை நிறுத்தல. புறப்பட்டாள் காயத்ரி கோழி குழம்பு செய்ய. ஓரளவுக்கு நல்லா வந்துச்சு. இப்படி இரண்டே நாள் தான் சமைத்தேன். ஆனா, ரொம்ப bore அடித்துவிட்டது. நிறுத்திவிட்டேன்.

4) ஹிந்தி மொழி கத்துக்க நினைத்தேன். நிறைய ஹிந்தி படம் பார்த்தேன் (with english subtitles) ஹீரோக்களை ரசித்து பார்த்தேனே தவிர ஹிந்தி கற்று கொள்ள முடியவில்லை.

இப்படி ஏதோ என் லீவு 'லீவு' எடுத்து கொண்டது!! அவ்வ்வ்.... இந்த பதிவ எழுதும்போதுகூட என் மனம் "i don't wanna go college." என்கிறது.

23 comments:

ers said...

எங்கூர்ல சமைப்பது எப்படி... 30 நாட்களில் இந்தி ஈசியா பேசலாம் என்ற புத்தகங்கள் நிறைய கிடைக்குது. முடிஞ்சா வி.பி.பி. மூலமா அனுப்பி வைக்கிறேன். பார்சலை வாங்கிட்டு காசு கொடுத்திடுங்க...ஹி...ஹி... வேற என்னத்த சொல்ல.

FunScribbler said...

@தமிழ்சினிமா,

//எங்கூர்ல சமைப்பது எப்படி//

உங்க ஊர்ல சமைப்பது எப்படியா? சிங்கப்பூர்ல சமைப்பது எப்படின்னு புத்தகம் இருக்கா? ஹாஹா..

//30 நாட்களில் இந்தி ஈசியா பேசலாம்//

அதுக்கு அப்பரமும் பேச முடியுமா? அதான் என் கேள்வி! அவ்வ்வ்...

//பார்சலை வாங்கிட்டு காசு கொடுத்திடுங்க//

காசு நீங்க கொடுத்தீங்கன்னா, நான் உங்க புண்ணியத்துல புழைச்சுப்பேனுங்க!!யாரு பெத்த புள்ளையோ, நீங்க நல்லா இருப்பீங்க! ஹாஹா..

ers said...

யம்மாடி... யாத்தாடி... காச கண்ணுல பாக்கலையே... (பிளாக் மற்றும் இணையங்களில் சொல்கிறேன்) ஏதாவது கிடைச்சா உங்களுக்கு கொரியர் சேவை பண்ணலாம்னு இருக்கேன். நன்றி.

மங்களூர் சிவா said...

அம்மாடி ஹிப் ஹாப் டேன்ஸா?? பாத்து சிங்கப்பூர்ல நிலநடுக்கம் வரப்போகுது!!

:)))

மங்களூர் சிவா said...

ஸ்கூல்ல அழகழகா பசங்க இருப்பாங்களே போகலைனா சைட் அடிக்க முடியாதே !?!?!

:((

வினையூக்கி said...

காதல் ரோஜாவே கீ போர்ட்ல நல்ல முயற்சி வாழ்த்துகள் படிப்பிற்கு

Divya said...

காலேஜ் திறந்திடுச்சா பொண்ணுக்கு, ஐயோ பாவம்:(

Divya said...

ஹிந்தி கத்துக்கனுன்மா ஹிந்தி சினிமா பார்க்கபிடாது,
ஹிந்தில அழுகாச்சி சிரீயல் போடுவாங்க பாரு....அதப்பார்க்கனும்,

அப்போ தான் நடிக்கிறவங்கமேல கவனம் போகாம , அவங்க பேசுற மொழிமேல கவனம் போய்......புது மொழியும் கத்துக்கலாம்,
எப்படி இருக்கு என் ஐடியா?????

Divya said...

\\என்னது போற இடமா?? அப்படின்னா? என்று நான் கேட்பேன்( பதில் தெரிந்திருந்தும்..ஹிஹி..)\\

அட அட....புகுந்த வீடு எதுன்னு இப்போவே முடிவு பண்ணியாச்சா??

யாரு அந்த புண்ணியவான்????

Anonymous said...

முதல்ல சமையல் செய்ய கஷ்டமாத்தான் இருக்கும். போற இடத்துல ரங்கமணி சமையல் சாப்பிட முடியாம நீங்களே சமைக்க ஆரம்பிச்சுடுவீங்க பாருங்க - என்ன மாதிரி

FunScribbler said...

@சிவா,

//பாத்து சிங்கப்பூர்ல நிலநடுக்கம் வரப்போகுது!!//

என் நேரம்ய்யா!!

//ஸ்கூல்ல அழகழகா பசங்க இருப்பாங்களே போகலைனா சைட் அடிக்க முடியாதே !?!?//

அட நீங்க வேற, வயத்தெறிச்சல கிளப்பாதீங்க..என் காலேஜ், பசங்க விஷயத்துல 'பாலைவனம்' மாதிரி. ஒன்னும் இருக்காது. கொஞ்ச அழகான பசங்க sports department பசங்க தான். ஆனா, அவங்களோட campus area கொஞ்சம் தூரம். ஆக, அங்கயும் போறது ரொம்ப கஷ்டம்! :(

FunScribbler said...

@வினையூக்கி,

//காதல் ரோஜாவே கீ போர்ட்ல நல்ல முயற்சி வாழ்த்துகள் படிப்பிற்கு//

நன்றி!!

FunScribbler said...

@திவ்ஸ்,

//ஹிந்தில அழுகாச்சி சிரீயல் போடுவாங்க பாரு....அதப்பார்க்கனும்,//

//எப்படி இருக்கு என் ஐடியா?????//

உங்களுக்குள்ள இப்படி ஒரு 'ஐடியா மணி' இருக்கான்னா? :)) என்னால முடியலப்பா!

//அட அட....புகுந்த வீடு எதுன்னு இப்போவே முடிவு பண்ணியாச்சா??

யாரு அந்த புண்ணியவான்????//

அட நீங்க வேற, நான் ஏதோ ஒரு flowல எழுதினேன்.. அதுக்கு எல்லாம் இன்னும் நிறைய டைம் இருக்கு. புண்ணியவானை first கண்டுபிடிக்கனுமே! :))

FunScribbler said...

@அம்மிணி

//நீங்களே சமைக்க ஆரம்பிச்சுடுவீங்க பாருங்க - என்ன மாதிரி//

உங்க ஆசிர்வாதம் தேவைங்கோ!! நன்றி!:))

Divya said...

ஹே காயு, இப்பத்தான் விடீயோ பார்த்தேன், 'hear music' ஆ, இல்ல நோட்ஸ் பார்த்து play பண்ணினீங்களா????

ரொம்ப அழகா இருந்தது உங்க கீ போர்ட் விடீயோ...பார்க்க, கேட்க!!!

FunScribbler said...

@திவ்ஸ்,

//ரொம்ப அழகா இருந்தது உங்க கீ போர்ட் விடீயோ...பார்க்க, கேட்க!!!//

ரொம்ப நன்றி திவ்ஸ். notes வச்சுதான் முயற்சி செய்தேன்.. ஒரு 60% நல்லா வந்துடுச்சு! :))

Anonymous said...

//இரண்டு மாசம் லீவு முடிஞ்சு திங்கள் கிழமை காலேஜ் ஆரம்பிக்க போகுது. ஐயோ மறுபடியும் காலேஜ் ஆரம்பிக்க போகுதேனு நினைச்சாவே, எனக்கு அழுகாச்சியா வருது.//

4 வருஷத்துக்கு முன்னாடி எனக்கும் இப்படி தான் இருந்துச்சு... :(( மெய்யாளுமே

FunScribbler said...

@மதிகெட்டான்,

//4 வருஷத்துக்கு முன்னாடி எனக்கும் இப்படி தான் இருந்துச்சு... :(( மெய்யாளுமே//

what! நாலு வருஷமா? வரலாற்ற புரட்டி பார்த்தா பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடில போகுது..ஹிஹி..just kidding!

Anonymous said...

உங்க நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு :(

FunScribbler said...

@மதிகெட்டான்,

//உங்க நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு :(//

நான் குறைக்கனும்னு try பண்றேன்.

மங்களூர் சிவா said...

/
Thamizhmaangani said...

@மதிகெட்டான்,

//உங்க நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு :(//

நான் குறைக்கனும்னு try பண்றேன்.
/

நீங்க எதுக்கு 'குரை'க்கணும்!?!?!?
"குரை"க்காதீங்க!!

:)))))))

Karthik said...

//இப்படி இரண்டே நாள் தான் சமைத்தேன். ஆனா, ரொம்ப bore அடித்துவிட்டது.

நான் ஒருமுறைதான் சமைத்தேன். செம இன்டெரெஸ்டிங்கா இருந்தது.

FunScribbler said...

@கார்த்திக்

//நான் ஒருமுறைதான் சமைத்தேன். செம இன்டெரெஸ்டிங்கா இருந்தது.//

அந்த தோசைய தானே சொல்லுறீங்க. அத படிச்சபோது எனக்கே இண்டெரெஸ்டிங்கா இருந்துச்சு. அப்ப அத சாப்பிட்டு உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? ஹிஹி..:))