Apr 1, 2009

முட்டாள்கள் தினம்- எங்களுக்கு தீபாவளி மாதிரில!

முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும்(அவ்வ்வ்வ்வ்வ்...) சென்ற ஆண்டு தொடங்கிய இந்த 'வியாதி' இந்த ஆண்டு வரை நீடிக்கிறது. சென்ற ஆண்டு ஒரே கதையை வைத்து 4 நண்பர்களை ஏமாற்றினேன். (இதலாம் ஒரு பொழப்பா அப்படின்னு நீங்க சொல்றது என் காதுல விழுந்தாலும்... விழாத மாதிரி இருந்துகிறேன்)


எத்தனையோ கதை எழுதுறோம்(ஓ... நீ எழுதுவதற்கு பெயர் கதையா.. சரி ரைட்டு), நமக்காக ஒரு கதைய அவிழ்த்துவிடுவோமே என்று ஆரம்பித்தேன். ஏப்ரல் 1ஆம் தேதி அன்று நிறைய பேர் உஷாராக இருப்பதால், ஒரு வாரத்திற்கு முன்பே என் வேட்டையை ஆரம்பித்துவிட்டேன். இப்போது எல்லாம் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று யாருமே ஃபோனைகூட எடுப்பதில்லை! ஹிஹி.... சரி நம்ம கதைக்கு வருவோம். இந்த வருடம் target அப்பாவி 5 நண்பர்கள்.


1) தோழனிடம் ஒரு வாரத்திற்கு முன் பேசி கொண்டிருந்தபோது, அவன் என்னை கிண்டல் செய்து பேசிய போது நான் சொன்னேன், " ஏய் இப்படி பேசாதே...என் bf கேட்டாருன்னா தப்பா நினைப்பார்." என்று பொய் சொன்னேன். அவன் அதிர்ச்சியாய், "என்னது bf? எப்போ இதலாம் நடந்துச்சு?" என்று ஆரம்பித்தவனிடம் ஒரு மெகா மகா பொய் கதையை கூறினேன். கொஞ்ச நாள்கள் கழித்து, bf என்னிடம் சண்டை போட்டதாகவும், நாங்க பிரிந்துவிட்டோம் என்பதாகவும் சொன்னேன். ஒரு வாரம் ஓடிய கதை, இன்று தான் உண்மையை போட்டு உடைத்து, இந்த உலகில் நீயும் ஒரு முட்டாள் தான் என்று மகுடம் சூடி பாராட்டினேன். :) பையன் கோபத்துல கொந்தளிச்சுகிட்டு இருக்கான்!!


2) வூட்டுல மாப்பிள்ள பாக்குறாங்கன்னு இன்னொரு கதை, இது சிட்னியில் படிக்கும் என் பள்ளி தோழிக்கு இமெயில் மூலம் அனுப்பினேன். பொண்ணு பயந்து, மிரண்டு போய், அட்வைஸ் மேல் அட்வைஸ் அனுப்பி அதன் பாச மழையை பொழிந்துவிட்டது. என்ன தான் சொல்லுங்க... நமக்கு ஒரு கஷ்டம் வந்தா... இந்த பாசக்கார புள்ளைங்க ரொம்ம்ப தவிச்சுடுறாங்கப்பா!! எப்படி ஓடியது என்பதை காண இங்க செல்லலாம்! இமெயில் கலாட்டா

பிறகு, அவளிடம் உண்மையை போட்டு உடைத்து, எனது இரண்டாவது சதத்தை அடித்தேன்.


3) இது மூன்றாவது பந்து, கண்டிப்பாக hatrick அடித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஆக, மேல் சொன்ன இரண்டாவது கதையை குறுந்தகவல் மூலம் அனுப்பினேன் ஒரு தோழியிடம்.அவளும் ஓரளவுக்கு ஏமாந்துவிட்டாள்.


4) குறந்தகவல், இமெயில்....ஒகே. யாரு யாரோ கண்டுபிடித்ததை பயன்படுத்தினாயே, ஏன் நான் கண்டுபிடித்ததை பயன்படுத்தவில்லை என்று alexander grahambell கேட்டுவிடகூடாது பாருங்க. ஆக, நேற்று என் கல்லூரி தோழியிடம் ஃபோன் செய்து , "என் ஆண்ட்டி ஒருத்தர் ஒரு film production company வச்சு இருக்காங்க. அவங்க ஒரு குறும்படம் எடுக்க போறாங்க. உன்னைய நியூ இயிர் பார்ட்டில பாத்தாங்க. உன் ஃபோட்டா காட்டுனாங்க. நான் சொன்னே இந்த பொண்ணு என் தோழி தானு. என்னைய உன்கிட்ட பேசி பாக்க சொன்னாங்க. அதுல உன்னைய நடிக்க கூப்பிடுறாங்க. அந்த படம் ஒரு இளையர பத்தி.' என்றேன். பொண்ணு ரொம்ப fitness conscious. ஒல்லியா இருப்பா. அதனால நான் சொன்னேன் ," இந்த படத்துக்காக நீ ஒரு 20 கிலோ வேட் போடனும்." என்றதும் ஆச்சிரியத்தின் உச்சிக்கு போய்விட்டாள்.

அதுக்கு அப்பரம் உண்மை தெரிந்தபிறகு, என்னை பாராட்டிய ஒரே ஜீவன் இவள் தான். சிரித்து கொண்டே அவள், "உனக்கு எப்படி இப்படிலாம் தோணுது. very innovative idea."

5) இன்னொரு கல்லூரி தோழியிடம் assignment due date நாளைக்கு என்றதும் பதறிவிட்டாள். அவள் எனக்கு பாராட்டு விழா எடுக்க போவதாக சொல்லியிருக்கிறாள். ஹிஹி...

ஆமா... எல்லாரையும் ஏமாற்றுகிறோமே. நம்மை ஏன் யாருமே ஏமாற்றுவதில்லை?? :)))

29 comments:

கார்க்கிபவா said...

சூப்பரா இருக்குங்க..




ஹலோ நான் உங்கள ஏமாத்த அப்படி சொல்லல.. நிஜமா நல்லாயிருக்கு

நாகை சிவா said...

:)))

"உழவன்" "Uzhavan" said...

முட்டாள்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக்கொண்டும், ஏமாறிக்கொண்டும் இருக்கிறார்கள்.. இதில் உங்களுக்கு ஒரு அல்ப சந்தோசம் வேறு. என்ன உலகமிது?

குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்; குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள் னு சொல்வாங்க. அப்படினா, ஏமாறுதல், ஏமாற்றுதல் இரண்டையுமே உலகம் அங்கீகரிக்கவில்லை என்றுதானே பொருள். அப்படியிருக்க நாம் ஏன் ஒருவரை ஏமாற்ற வேண்டும்?

mvalarpirai said...

என்னாது சின்ன புள்ள தனமா...விட்டா இங்க் பேனா எடுத்திட்டு போய் சட்டையில இங்க் அடிப்பீங்க போல ! :)

முரளிகண்ணன் said...

பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம ஏமாத்தலாம்னு பார்க்கிறேன்

ARV Loshan said...

இது என்ன சின்னப் புள்ளத் தனமா.. பெரியவங்களுக்கு கதை எழுதிட்டே இப்படியுமா?

பாவம் அந்தப் பையன்..

அளிசைக் கேட்டதா சொல்லுங்க.. (இவ்வளவு தான் பெண்கள் பாவிக்கிற கெட்ட வார்த்தைகளா? அதென்ன விஜயகாந்த்? ;))

//ஆமா... எல்லாரையும் ஏமாற்றுகிறோமே. நம்மை ஏன் யாருமே ஏமாற்றுவதில்லை?? :)))//

அதான் கார்க்கி ஆரம்பத்திலேயே சொல்லிட்டாரே.. போதாதுன்னா நானும் சொல்லிடறேன்..

கலக்கல் ;)

சந்தனமுல்லை said...

:-)))கலக்கல் !
திட்டறதுக்கு ஒரு புது வார்த்தை கண்டுபிடிச்சிருக்காங்க போல உங்க ப்ரெண்ட்! ROTFL! :-)))

FunScribbler said...

@கார்க்கி

//சூப்பரா இருக்குங்க..

ஹலோ நான் உங்கள ஏமாத்த அப்படி சொல்லல.. நிஜமா நல்லாயிருக்கு//

உஷ்ஷ்ஷ்... அன்னிக்கு வாங்கிட்ட வந்த ஷூவ எடுத்துட்டு வாங்க... ஐயோ உங்களுக்கு இல்லேங்க... என்னையே நான் அடிச்சுக்கு! எனக்கு வேணும் நல்லா....:)

FunScribbler said...

@உழவன்

//இதில் உங்களுக்கு ஒரு அல்ப சந்தோசம் வேறு//

என்னங்க...இப்படி சொல்லிட்டீங்க! இது எவ்வளவு பெரிய சந்தோஷம் தெரியுமா?

//அப்படியிருக்க நாம் ஏன் ஒருவரை ஏமாற்ற வேண்டும்?//

அன்பை பரிமாறி கொள்ள தான். இங்க பாருங்க... இதுக்கும் ஒரு வரையறை உண்டு. ஒரு எல்லை கோட்டை தாண்டத வரைக்கும், எல்லாமும் ஜாலியாக எடுத்து கொள்ளலாம். தெருவில் போகும் யாரையோ நாம் கிண்டல் செய்வதில்லை. நமக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே இந்த ஜாலியான விளையாட்டு. உண்மை தெரிந்தபிறகு, அவர்களுக்கே சிரிப்பு வருகிறது!

வரலாற்ற புரட்டி பாருங்க, அது நமக்கு கத்துகொடுத்தது ஒன்னே ஒன்னு தான்...சந்தோஷப்பட வைக்கனும்னா எப்படி வேணாலும் கலாய்க்கலாம்!

-அஜித் ரசிகர்கள் சங்கம்

FunScribbler said...

@வளர்

//என்னாது சின்ன புள்ள தனமா...விட்டா இங்க் பேனா எடுத்திட்டு போய் சட்டையில இங்க் அடிப்பீங்க போல//

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே சின்ன புள்ளத்தனம்னு. நாங்களாம் இப்படி சின்ன புள்ளத்தனமா செய்வதில்லை. எல்லாம் high level தான்! :)

FunScribbler said...

@லோஷன்

//அதென்ன விஜயகாந்த்? ;))//

watching a Vijaykanth movie is slow and extremely painful torture (mentally and physically...and visually)...and Vijaykanth is the provider of said torture.

ஹாஹா.. இது அவள் கொடுத்த விளக்கம்:)

FunScribbler said...

@சந்தனமுல்லை

//கலக்கல் !
திட்டறதுக்கு ஒரு புது வார்த்தை கண்டுபிடிச்சிருக்காங்க போல உங்க ப்ரெண்ட்!//

ஹாஹா... அத ஏன் கேட்குறீங்க? செம்ம காமெடியா போச்சு:)

Karthik said...

நான் முன்னாடியே சொல்லிட்டேன். இருந்தாலும் மறுபடியும் சொல்றேன்.

முடியல..! ;)

Divyapriya said...

super galaatta…naan ore orutharai thaan yemaathinen :)

Bhuvanesh said...

//"உனக்கு எப்படி இப்படிலாம் தோணுது. very innovative idea."//

யக்கா.. இந்த சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டரதுனா என்ன கா ?? :):)

தேவன் மாயம் said...

சிக்ஸரா அடிங்க!!
ஏமாற் ரெடியா இருக்கோம்

தேவன் மாயம் said...

குழந்தைத் தனம் மாறாது இருக்கவும்!!!

என்ன மச்சி !! ஒகேயா?

FunScribbler said...

@karthik

//முடியல..! ;)//

ஏதோ என்னால முடிந்த சமூக சேவை!

FunScribbler said...

@திவ்யாபிரியா

//super galaatta…naan ore orutharai thaan yemaathinen :)//

ஒன்னு தானா? அடுத்த வருஷம் இன்னும் நிறைய முயற்சி செய்யுங்க. ஐடியா வேணும்னா கேளுங்க. ஸ்டாக் நிறையவே இருக்கு!:)

FunScribbler said...

@புவனேஷ்

//யக்கா.. இந்த சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டரதுனா என்ன கா ?? :):)//

ஆட்டோ? நான் ஒட்டுனது national permit lorry இல்லையா?:)

FunScribbler said...

@thevanmayam

//குழந்தைத் தனம் மாறாது இருக்கவும்!!!

என்ன மச்சி !! ஒகேயா?//

ஒகே, டிரை பண்ணுறேன்:)

Revathyrkrishnan said...

ஹே நெஜமாவே எப்படி உங்களுக்கு இப்படில்லாம் தோணுது காயத்ரி? கலக்குறீங்க... சரி உங்கள் இரண்டாவது கதையில், உங்கள் தோழி அந்த பையனுக்காக தானே பரிதாபப்பட்டிருக்க வேண்டும்

Revathyrkrishnan said...

ஹே நெஜமாவே எப்படி உங்களுக்கு இப்படில்லாம் தோணுது காயத்ரி? கலக்குறீங்க... சரி உங்கள் இரண்டாவது கதையில், உங்கள் தோழி அந்த பையனுக்காக தானே பரிதாபப்பட்டிருக்க வேண்டும்

FunScribbler said...

@ரீனா

//எப்படி உங்களுக்கு இப்படில்லாம் தோணுது காயத்ரி?//

எல்லாருக்கும் மூளைக்குள்ள ஐடியா இருக்கும். எங்களுக்கு எல்லாம் ஐடியாக்களுக்குள்ளே தான் மூளையே இருக்கும்...:) அதான்

//உங்கள் தோழி அந்த பையனுக்காக தானே பரிதாபப்பட்டிருக்க வேண்டும்//

அவ்வ்வ்வ்... உங்க வீட்டுல பழைய செருப்பு இருக்கா?. என்னையே நான் அடிச்சுக்க....:):)

"உழவன்" "Uzhavan" said...

//அன்பை பரிமாறி கொள்ள தான். இங்க பாருங்க... இதுக்கும் ஒரு வரையறை உண்டு. ஒரு எல்லை கோட்டை தாண்டத வரைக்கும், எல்லாமும் ஜாலியாக எடுத்து கொள்ளலாம். தெருவில் போகும் யாரையோ நாம் கிண்டல் செய்வதில்லை. நமக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே இந்த ஜாலியான விளையாட்டு. உண்மை தெரிந்தபிறகு, அவர்களுக்கே சிரிப்பு வருகிறது!
வரலாற்ற புரட்டி பாருங்க, அது நமக்கு கத்துகொடுத்தது ஒன்னே ஒன்னு தான்...சந்தோஷப்பட வைக்கனும்னா எப்படி வேணாலும் கலாய்க்கலாம்! //

வரையறை உண்டு என்கிற பட்சத்தில், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். "முட்டாள்கள்" தினம் என்ற பெயரை நாம் மாற்ற முயற்சிக்கலாமா? இந்த பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை.

அன்புடன்
உழவன்

FunScribbler said...

@உழவன்

//"முட்டாள்கள்" தினம் என்ற பெயரை நாம் மாற்ற முயற்சிக்கலாமா? //

முயற்சிக்கலாமே! சரி..எப்படி மாற்றலாம்...ம்ம்ம்....

anti-smart fellows day?

Divyapriya said...

superaa irukku :)

FunScribbler said...

@திவ்யாபிரியா

நன்றி:)

அன்புடன் அருணா said...

:))enjoyed!!!
அன்புடன் அருணா