May 4, 2009

மலர்களே மலர்களே, இது என்ன கனவா-1

அவளை தனியாக பார்த்து பேச வேண்டும் என்ற ஆவல். சந்திக்க முடியுமா என்று குறுந்தகவல் அனுப்பினான் செல்வம். ஆனால், அனுப்பி வைத்த பிறகு தான் பயம் வந்தது. அவள் தவறாக எண்ணிவிடுவாளோ, கல்யாணத்திற்கு முன் இப்படி சந்திப்பது தவறு என்ற நினைப்பாளோ என்ற பயம் கவிகொண்டது. ரொம்ப டென்ஷனாக இருந்தான் செல்வம்.

அஷ்விதாவிடமிருந்து பதில் வந்தது.

'ஒகே செல்வம், மீட் பண்ணலாம். 7pm @ taaksha point."

படித்து முடித்தவுடன் தான் உயிர் வந்தது போல் இருந்தது. குறுந்தகவலை பார்த்து புன்னகையித்தபடி தனது பாக்கேட்டில் போட்டான் கைபேசியை. சந்தோஷ ரேகைகள் செல்வம் முகத்தில் பரவ, அதை கவனித்த வாசு,

"என்னடா மச்சி, ஆபிஸ் வந்தப்ப ஒரு மாதிரியா இருந்த.. இப்ப சந்தோஷமா இருக்க... இனிக்கு பாஸ் ஆபிஸுக்கு வரலையா என்ன?" என்று பாஸின் அறையை எட்டி பார்த்தான்.

"ஒன்னுமில்ல டா, அஷ்விதாவ தனியா பார்த்து பேசனும்னு நினைச்சேன். கல்யாணத்துக்கு முன்னாடி இதலாம் வேண்டாம்னு... என்னைய தப்பா நினைச்சுடுவாளோன்னு பயந்தேன்.. ஆனா ஒகேன்னு சொல்லிட்டா டா.. அதான்...." அசடு வழிந்தான் செல்வம்.

"ஆஹா... நிச்சயதார்த்தம் பண்ணி இப்ப தான் 3 வாரம் ஆகுது... அதுக்குள்ள இப்படி போகுதா கதை? ஏன்... நிச்சயதார்த்தம் அன்னிக்கு பேசவிடலையாக்கும்? வீட்டுல தெரியுமா இன்னிக்கு மீட் பண்ண போற விஷயம்? " சிரித்தான் வாசு. மடிகணினியை திறந்து தனது இமெயிலை பார்த்து கொண்டே பதில் அளித்தான் செல்வம்,

"ம்ஹும்.... எங்க பேசுனோம்? கொஞ்சம் நேரம்.. அதுவும் 5 நிமிஷம் தான்... அவ்வளவு கூட்டம்... ஒன்னும் ஃபிரியா பேச முடியல்ல...வீட்டுக்கு? ஐயோ... எங்க அம்மா ஒரு மெகா சீரியலே ஓட்டிடுவாங்க. போககூடாது, கட்டுபாடு, கலாச்சாரம், மத்தவங்க பாத்தா என்ன நினைப்பாங்க... அது இதுன்னு சொல்லி என்னையும் சேத்து குழப்பிடுவாங்க" சொல்லிகொண்டே தேவையில்லாத இமெயில்களை டிலிட் செய்தான்.

"ஓ... அப்ப...திருட்டுத்தனம் இப்பவே ஆரம்பிச்சுட்டீயா. வெரி குட். இப்படி தான் எல்லாம் ஆரம்பிக்கும். எஞ்ஜாய் மச்சி! அப்பரம்.. என்ன gift கொடுக்க போற?" வினாவினான் வாசு.

"யாருக்கு?" முழித்தபடி வாசுவின் முகத்தை பார்த்தேன் செல்வம்.

"டேய்.. இன்னிக்கு அஷ்விதாவ முதன் முதல வெளியே கூப்பிட்டு இருக்க...அவள பாக்க போற... பரிசு ஒன்னும் வாங்கி வைக்கலையா?" வாசு பதில் அளித்தான்.

"டேய்... சுத்தமா மறந்துட்டேண்டா... இப்ப என்ன செய்ய?" மறுபடியும் டென்ஷன் ரேகைகள் அவன் முகத்தில் மின்னல்கள் போல் தோன்றியது. தொடர்ந்தான் செல்வம்,

"flower bouquet வாங்கிட்டு போவா? how about chocolates... or.... why not just a simple card?" செல்வத்தின் உளறல்களை பார்த்து ரசித்தான் வாசு.

"ஓய்... நிறுத்து. என்னது சாக்கெலட்டா? .. இன்னிக்கு சுதந்திர தினமா என்ன? டேய் மச்சி... இந்த பூ கொடுக்குறது... கார்ட் கொடுக்குறது எல்லாம் ஒன்னாவது போற பசங்களே செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம ரேஞ்சுக்கு... சூப்பரா ஒன்னு செய்யனும் மேன்?" உட்கார்ந்து இருந்த செல்வத்தின் தோளை தட்டினான்.

"நீயே சொல்லேன்...?"

"ஒரு நிமிஷ வேட் பண்ணு.." என்று சொல்லிவிட்டு வாசு தனது கேபினுக்குள் சென்று ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வந்தான்.

செல்வம் நெற்றியில் கைவைத்து என்ன பரிசு வாங்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தபோது, புத்தகத்தை செல்வம் மேசையில் வைத்தான். "girls & fantasies" என்று எழுதியிருந்தது.

எதிரில் நின்று கொண்டிருந்த வாசு, "பக்கம் 27க்கு திருப்பு, அதுல மூணாவது paragraphஅ படி." கடகடவென்று படித்த செல்வம்,

"ஓ மை காட்.... what nonsense is this vasu? bullshit!" புத்தகத்தை மூடி வாசுவின் கையிலேயே திணித்தான்.

"ஏய்... கூல் டவுன் கூல் டவுன். எதுக்கு இந்த ஓவர் ரியேக்சன்? அதுல போட்டுருக்க மாதிரி செய்... the best unforgettable gift! நானும் இப்படி செஞ்சு தான் என் மனைவிய impress பண்ணேன்!" வாய்விட்டு சிரித்தான் வாசு.

"ஏய்.... நான் யாருக்கும் தெரியாம அவள பாக்குறதே அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ... அதுல... இப்படி செஞ்சா? நல்ல ஐடியா கொடுத்த போ... கல்யாணம் ஆகாமலே எனக்கு divorce வாங்கி கொடுத்துடுவ போல...." சலித்து கொண்டான் செல்வம்.
செல்வம் பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியை இழுத்து அவன் எதிரே உட்கார்ந்தான் வாசு. மெல்லிய குரலில் வாசு, "it's just a kiss. what's wrong? இது தான் மச்சி, தி பெஸ்ட்டா இருக்க முடியும்?"

"என்ன ராங்கா? போடா போங்கு!!? நீயும் உன் ஐடியாவும்.... நான் எதாச்சும் மல்லிப்பூவோ அல்வாவோ வாங்கிட்டு போறேன். உன் ஐடியா ஒன்னும் வேணாம்?" மறுபடியும் தனது பார்வையை மேசையில் இருந்த கோப்புகளின் மீது திருப்பினான் செல்வம்.

அவனை தன் பக்கம் இழுத்தான் வாசு.

"என்னது மல்லிப்பூவும் அல்வாவுமா?? ஹாஹாஹா...." சத்தம் போட்டு சிரித்தான் வாசு. தொடர்ந்தான் தனது நக்கல் பேச்சை,

"டேய்... அதலாம் சின்ன வீடு வச்சுருக்குறவன் வாங்கிட்டு போற ஐட்டம் டா... ஹாஹா.... நீ மட்டும் அத அஷ்விதாகிட்ட கொடுத்தே... அவ்வளவு தான் உனக்கு ஒரு சின்ன வீடு இருக்குன்னு confirm பண்ணிடுவா... ஹாஹா.."

"ஐயோ.... என்னைய என்னடா செய்ய சொல்ற?

"just listen to me. sweet decent கிஸுக்கு நாலு இடம் இருக்கு. கை,நெத்தி, கன்னம்,லிப்ஸ். கையில....நோ நோ.. அது சரிபட்டு வராது... ஏதோ சின்ன புள்ளத்தனமா இருக்கும். நெத்தில கொடுக்குறது.... அது after marriage! லிப்ஸ்....ம்ம்ம்....." யோசித்தவாறு செல்வத்தை ஒரு முறை தலை முதல் கால் வரை பார்த்தான்.

வாசு, "ஹாஹா... லிப்ஸ்...ம்ஹும்... நீ ரொம்ப பயந்துடுவே! so, cheek is the only option."

தொடர்ந்தான், "rightல கொடு...அதான் girls' psychology படி தி பெஸ்ட்."

"டேய்... எனக்கு பயமா இருக்குடா?" மழையில் நனைந்து கோழி போல் உதறினான் செல்வம்.

"பயமா இருந்தா இப்பவே practice பண்ணிக்கோ... நம்ம கிளார்க் அஞ்சல ஆண்ட்டிகிட்ட!" என்று கிண்டல் செய்தான்.

"டேய்... ஏண்டா நீ வேற!" ஆழ்ந்த சிந்தனையில் செல்வம்.

"it is not merely an innocent display of affection. It is a display of passion machi! இங்க பாரு...கிஸ் பண்ணும்போது, நமக்குள்ள இருக்கும் neurotransmitters ரிலீஸ் ஆகி மூளைக்கு போகும். அப்படி போகும்போது, நமக்குள்ள ஒரு புத்துணர்ச்சி வரும். அந்த புத்துணர்ச்சி 'இவன் என்னுடையவன்; இவனுக்கு என்னை பிடிச்சுருக்கு' அப்படின்னு அவள் மூளைக்கு மெசேஜ் போகும். இந்த biological processல உங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல chemistry work out ஆகும். அப்படி ஆச்சுன்னா...for every action, there is an equal and opposite reaction நடக்கும். அஷ்விதாவும் மறுபடியும் உனக்கு கொடுப்பா. அதுக்கு வாய்ப்பு இருக்கும். இது physics! இப்படி biology, chemistry, physicsனு.... டேய் மச்சி, எஞ்ஜாய் டா!" சிரிக்க ஆரம்பித்தான் வாசு.

"இந்த ஆர்வத்த நீ உன் வேலையில காட்டியிருந்தே... உனக்கு எப்போவோ promotion கொடுத்து இருப்பாங்க?" வாசுவின் lectureயை கேட்டவிட்டு சொன்னான் செல்வம்.

"அட போ டா... வேலை கிடக்குது. எனக்கு என் நண்பன் வாழ்க்கை தான் முக்கியம்." புன்னகையித்தான் வாசு. அச்சமயம் ஆபிஸுக்குள் பாஸ் நுழைந்ததால், வாசு தனது கேபினுக்குள் ஓடுவதற்குள் செல்வத்தின் காது அருகே, "டேய் நான் சொன்ன மாதிரி செய். ஆல் தி பெஸ்ட்"

அன்று முழுவதும் செல்வம் சற்று குழப்பத்துடன் இருந்தான். மாலை 6 மணி ஆனது. வாசு வீட்டிற்கு செல்வதற்கு முன் செல்வத்திடம் "டேய் மச்சி, results என்னான்னு இன்னிக்கு நைட் ஃபோன் பண்ணி சொல்லு!" கண் சிமிட்டியபடி கண்ணாடி கதவை திறந்து வீட்டிற்கு புறப்பட்டான்.

செல்வம் 6.45pm சொன்ன இடத்தில் காத்திருந்தான். கொஞ்சம் பயம், கொஞ்சம் பரபரப்பு,கொஞ்சம் சந்தோஷம், வெளியே காட்டி கொள்ளாமல் இருந்த அதிகபடியான வெட்கம் என்று பல உணர்ச்சிகளால் செல்வம் நின்று கொண்டிருந்தான். தனக்கு பிடித்த வெள்ளை நிறத்தில் உடை அணிந்து வருவாள் என்று கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான்.

அஷ்விதா வந்தாள். பிங் நிறத்தில் ஒரு சட்டை, சாதாரண ஜீன்ஸில். தனது கற்பனை நனவாகவில்லை என்று சற்று ஏமாற்றம் அடைந்தான் செல்வம்.

கையசைத்தபடி அவனை நோக்கி வந்தாள் அஷ்விதா. அவன் முகத்தில் படர்ந்த ஏமாற்றத்தை கண்டு கொண்டவள் புன்னகையித்தபடி,

"என்ன ஆச்சு செல்வம்? யாரடி நீ மோகினி படத்துல நயன்தாரா introduction scene மாதிரி...வெள்ளை சுடிதார்ல வருவேன்னு நினைச்சீங்களா..நினைச்சீயா?" என்றாள்.

அவள் வெளிப்படையாக பேசியது அவனின் ஏமாற்றத்தை போக்கியது. புன்னகையித்தான். ஒரு உற்சாகம் பிறந்தது. அவள் இயல்பாய் 'நினைச்சீங்களா' என்பதிலிருந்து 'நினைச்சீயா' என்று மாற்றியது, உரிமை எடுத்து கொண்டது செல்வத்திற்கு ஏதோ ஒரு சந்தோஷத்தை கொடுத்தது. அவர்களுக்கிடையே இருந்த இடைவெளி குறைந்ததுபோல் உணர்ந்தான்.

தொண்டைக்குள் வார்த்தைகள் பிறந்து தவிழ ஆரம்பித்தது செல்வத்திற்கு, "ஹாய்.. ஓ அப்படி ஒன்னுமில்ல!" எச்சில் முழுங்கினான்.

"சரி செல்வம், இப்ப எங்க போகலாம்? this place is really big ah?" என்று சுற்றும்முற்றும் பார்த்தாள் அஷ்விதா. அவள் இவ்வளவு நெருக்கத்தில் இருந்தது அவன் வயிற்றுக்குள் பறந்த பட்டாம்பூச்சிகளுக்கு புதிதாய் மீசை முளைத்ததுபோல் உணர்ந்தான்.

"எங்காச்சும்...உன் விருப்பம்?" அவன் பதில் அளித்தான்.

"சரி... இங்க நிறைய restuarants இருக்கு. அங்க போவோம்?" என்று சொல்லியபடி நகர்ந்தார்கள்.

"பரிச கொடுக்க மறந்துடாத!" மனசாட்சிக்கு பதில் வாசுவின் குரல்தான் செல்வத்துக்குள் ஒலித்தது. "சரி சரி.." என்று தனக்குள்ளே சொல்லி கொண்டான் செல்வம்.

தம்ரானா நார்த் இந்தியன் உணவகத்திற்குள் சென்றனர். கஸல் இசை ஒலிக்க, வெளிச்சம் அதிகமாய் இல்லாமல், நிறைய இந்திய ஓவியங்கள், சிற்பங்கள், அலங்காரங்கள் என உணவகம் ஒரு ரம்மியமான சூழலில் இருந்தது. ஓர் இடத்தில் உட்கார்ந்தார்கள்.

"நீ என்ன சாப்பிடுற?" அஷ்விதா கேட்டாள்.

மெனு கார்ட்டை பார்த்தபடி செல்வம்,

"ம்ம்... cheese naan with butter masala chicken."

"nice choice.." என்று புன்னகையித்தாள்.

"ஆம். உன்னைய மாதிரியே." என்று சொல்ல தைரியம் இல்லாமல் ஒரு புன்னகை மட்டும் வீசினான்.

தனது ஆர்டரை கொடுத்தாள் அஷ்விதா,

"plain naan with chilli prawns.... and one glass of lime juice....mm..2 glasses please." என்று கண்களாலே செல்வத்திற்கு தண்ணீர் வேண்டுமா என்று கேட்டு இரண்டு கிளாஸ் ஆர்டர் செய்தாள்.

கொஞ்சம் நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். அஷ்விதா என்ன செய்வது என்று தெரியாமல் மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்தாள். செல்வத்திற்கு..ம்ஹும்ம்... சொல்லவே தேவையில்லை. நிறைய பேச வேண்டும் என்று நினைத்து வந்தவன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். தனது கைபேசியை மேசையில் வைத்துவிட்டு,

"excuse me..." என்றுபடி கழிவறைக்கு சென்றான் செல்வம்.

(பகுதி 2)

18 comments:

Raju said...

"மரியாதை" யா ஓட்டு போடவா?
நீங்க என்ன தே.மு.தி.க. வா?

வந்தியத்தேவன் said...

கலக்கல் கதை தொடரும்போடாமல் முடிவைச் சொல்லுங்கள்

கார்க்கிபவா said...

ஆன்னா ஊன்னா தொடரும் போட்டிடுவீங்களே

FunScribbler said...

@டக்ளஸ்

//நீங்க என்ன தே.மு.தி.க. வா?//

இல்ல இல்ல... நான் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. நான் மக்களில் ஒருத்தி! :)

FunScribbler said...

@வந்தியத்தேவன்

//கலக்கல் கதை தொடரும்போடாமல் முடிவைச் சொல்லுங்கள்//

பாராட்டுகளுக்கு நன்றி. இன்னும் யோசிக்கல்ல எப்படி போகும்னு..:)

FunScribbler said...

@கார்க்கி

//ஆன்னா ஊன்னா தொடரும் போட்டிடுவீங்களே//

சீரியல் பாத்து வளர்ந்தோம்ல!! அதான் இப்படி:)

Anonymous said...

என்னுடைய வலைதளத்திற்கு வாங்க.
என்னன்னு அங்க வந்து தெரிஞ்சுக்கோங்க.

Anonymous said...

கதை கலக்கலா இருக்கு. சீக்கிரம் அடுத்த தொடரைப் போடுங்க.

புதியவன் said...

வழக்கம் போல கலகலப்பா கதையை ஆரம்பிச்சிருக்கீங்கள் தொடருங்கள் காத்திருக்கிறோம்...

புதியவன் said...

//cheese naan with butter masala chicken//

//"plain naan with chilli prawns.... and one glass of lime juice....mm..2 glasses please."//

இந்த மெனு கார்டு அடிக்கடி உங்க கதையில வருதே...அது தான் மெயின் கேரக்டரா...?

ivingobi said...

Tamil channels la mega serials pakkathinga nu sonna kaetka maattingala ?
aana Tv mathiri illama nijamavae oru thrilling a thodarum poattu irukkinga Nice...

Divyapriya said...

நடக்கட்டும் நடக்கட்டும் :)

Divya said...

title superrrrrrr:)


Asusuall kathai kalakalsa start agiruku, continue .........waiting for the next part:)

FunScribbler said...

@மகா, புதியவன், கோபி, திவ்ஸ், திவ்யாபிரியா,

பாராட்டுகள் கூறிய அனைவருக்கும் என் நன்றிகள்:)

FunScribbler said...

@புதியவன்

//இந்த மெனு கார்டு அடிக்கடி உங்க கதையில வருதே...அது தான் மெயின் கேரக்டரா...?//

ஆம்! எப்படி விக்ரமன் படங்களில் வரும் 'லல்லலா' தீம் மியூசிக்கை தவிர்க்க முடியாதோ, எப்படி கௌதம் மேனன் படங்களில் ஆங்கில வசனங்களை தவிர்க்க முடியாது, அதே மாதிரி என் கதையில் இந்த மெனு கார்ட்டு விஷயத்தை தவிர்க்க முடியவில்லை. எல்லாம் கதையிலும் வரும்! செண்ட்டிமெண்ட் கதாபாத்திரம்!அவ்வ்வ்...:)

Karthik said...

நல்ல ஆரம்பம். :)

//பக்கம் 27க்கு திருப்பு, அதுல மூணாவது paragraphஅ படி.

இந்த முழுசும் எனக்கு தெரிஞ்சாகனும். நான் புக் எல்லாம் வாங்க முடியாது. ;)

//girls & fantasies

டைட்டிலே சரியில்லையே! ஹி..ஹி. ;)

Anonymous said...

Part 2 is missing yaar

Bhuvanesh said...

கலக்கல் கதை..

நாங்க மரியாதையா ஓட்டு போடறது இருக்கட்டும்.. நீங்க மரியாதையா அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க!!