May 13, 2009

ஜஸ்ட் சும்மா(13/5/09)

காலேஜ் இருக்கும்போது, அம்புட்டு வேலை இருக்கும். ஆனா எழுதுறதுக்கு 1008 விஷயங்கள் தோணும். இப்போ லீவு தானே.. ஆனா இந்த (மர)மண்டையில ஒரு மண்ணும் தோண மாட்டேங்குது... அது ஏன்னு தெரியல.... லீவுல தான் நிறைய எழுதுறதுக்கு நேரம் கிடைக்கும்.ஆனா ஒன்னுமே எழுத தோணல...எழுத வரல...அதான் இப்படி ஜஸ்ட் சும்மா....

ஆனந்த தாண்டவம் படத்தில் இடம்பெற்ற கனா காண்கிறேன் பாடலை ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல கேட்குறேன். சமீப காலத்தில் வந்த பாடல்களில் என்னை கவர்ந்த ஒரு பாடல் இதுவே!! பாடல் வரிகள் ரொம்ம்ப நல்லா இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------

biggest loser என்ற அமெரிக்கா நிகழ்ச்சி ஒன்று, அதை தினமும் பார்த்து கொண்டு வருகிறேன். இந்த நிகழ்ச்சி குண்டா இருப்பவர்கள் 15 வாரங்களில் எப்படி தங்களது இடையை குறைக்கிறார்கள் என்பதை பற்றி. ஒவ்வொரு ஆளும் எடுக்கும் முயற்சியை பார்க்கும்போது ரொம்ம்ப வியப்பா இருக்கும். என்னையே நான் பார்த்த மாதிரி ஒரு உணர்வு... ஏன் என்றால் ஒரு காலத்தில் நானும் குண்டா இருந்து, நிறைய கஷ்டப்பட்டு 13 கிலோ குறைத்தேன். அந்த 'இரத்த கண்ணீர்' கதையை விரைவில் எழுதுகிறேன்:(
----------------------------------------------------------------------------------------

1988 ஆம் ஆண்டு சச்சின் 10வது வகுப்பு தேர்வில் தோல்வி. ஆனால் 2008 பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முதல் பாடமே சச்சினை பற்றி தான்! முயற்சியே பலம்- இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது. அன்றே சச்சின்- ஒரு சுனாமியின் சரித்திரம் என்னும் புத்தகத்தை இரவல் வாங்கி படித்தேன். ஓ மை காட்ட்ட்ட்ட்ட்ட்ட், சச்சின் இஸ் சிம்பிலி சூப்ப்ப்ப்ப்ப்ர்ப்ப்!! எத்தன சங்கடங்கள், சோதனைகள், சாதனைகள், கஷ்டங்கள், கேப்டனாக தோல்வி, சக விளையாட்டர்களின் பொறாமை, பகைமை, கிரிக்கெட் வாரியம் செய்தவை.... அவரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியது அப்புத்தகம். அதை படித்தவுடன் ஏதோ ஒரு புத்துணர்ச்சி!!
-------------------------------------------------------------------------------------

நேற்று சன் டிவில காதல் படத்த போட்டான். நானும் அக்காவும் பார்த்து கொண்டிருந்தோம். சந்தியாவின் வண்டி கோளாறு ஆனவுடன் பரத் கடைக்கு எடுத்து செல்வார்கள். அப்போது சந்தியாவின் தோழி, "வண்டிய நீங்க தான் பாக்கனுமா? வண்டி ஆசைப்படுது." என்பாள். ஆனால் நேற்று 'வண்டி ஆசைப்படுது' என்ற ஷாட்டை கட் செய்துவிட்டான்.
நான் உடனே, "அக்கா, ஒரு டயலாக்க கட் பண்ணிட்டான் பாவி பய."

அக்கா ஒரு மாதிரியாய் என்னை பார்த்து, "ஆமா.. நீ எத்தன தடவ இந்த படத்த பாத்துருக்க... இவ்வளவு கரெக்ட்டா சொல்றே."

நான் அசட்டு சிரிப்பு சிரித்தேன்:)
---------------------------------------------------------------------------------------
பசங்க படத்தை பார்க்கனும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா எங்க ஊர்ல இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆன்லைனிலும் தேடி பார்த்தேன். ஒன்றும் சரியா கிடைக்கவில்லை.:(
---------------------------------------------------------------------------------------

குறிப்பு: அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார்கள். நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் அப்படி வைத்தால், சீனியர்களை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக மக்கள் நினைக்கலாம். ஆகவே தான் தலைப்பை மாற்றினேன்:)

13 comments:

Divya said...

\\நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். \\

LOL:))

Divya said...

\\லீவுல தான் நிறைய எழுதுறதுக்கு நேரம் கிடைக்கும்.ஆனா ஒன்னுமே எழுத தோணல...எழுத வரல...\\

:(((

Holidays la neenga nerya ezuthuveenganu nanum ethirparthein Gayathri:))

free time la.........oru sooper dooper thodar kathai ezhuthungalein:)

ச.பிரேம்குமார் said...

//நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன்//
அடங்கப்பாஆஆஆஆஆ

Prabhu said...

\\நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். \\////
நான் கூட இது மாதிரி என்ன கொடும சார்னு ஒரு சீரிஸ் ஆரம்பிக்கிறேன். ஏற்கனவே போட்டதுல கூட சில இந்த கேட்டகரில வருது.

உங்க வீடு அடிக்கடி ஈரமாகாதா? இப்படி சித்தார்த்த பாத்து ஜொள்ளு விடுறீங்க!

Vijay said...

Try this link for Pasanga Movie - http://www.movielanka.com/video/pasanga/

FunScribbler said...

@திவஸ்

//Holidays la neenga nerya ezuthuveenganu nanum ethirparthein Gayathri:))

free time la.........oru sooper dooper thodar kathai ezhuthungalein:)//

முயற்சி உடையா இகழ்ச்சி அடையார், சாந்தோம், மயிலாப்பூர், கோடம்பாக்கம்...

i will try my level best guru!:)

FunScribbler said...

@pappu

//உங்க வீடு அடிக்கடி ஈரமாகாதா? இப்படி சித்தார்த்த பாத்து ஜொள்ளு விடுறீங்க!//

இல்ல.. என் ரூம் மட்டும் தான்...:)

FunScribbler said...

@KVR

நன்றி நன்றி! படத்த உடனே பாத்துவிடுகிறேன்:)

sri said...

//அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார்கள். நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் அப்படி வைத்தால், சீனியர்களை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக மக்கள் நினைக்கலாம். ஆகவே தான் தலைப்பை மாற்றினேன்:)//

LOL :)) stressful ana day la ungay padhivu dhaan padikkanum. Leave dhaaney enjoy pannunga , appuram ezhidhikalam. Writing is like rain, sometimes it comes when we dont want it - heavily and sometime we need to wait :)
(avvvu.. sri ennama thathuvam solra daa)

sri said...

//அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார்கள். நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் அப்படி வைத்தால், சீனியர்களை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக மக்கள் நினைக்கலாம். ஆகவே தான் தலைப்பை மாற்றினேன்:)//

LOL :)) stressful ana day la ungay padhivu dhaan padikkanum. Leave dhaaney enjoy pannunga , appuram ezhidhikalam. Writing is like rain, sometimes it comes when we dont want it - heavily and sometime we need to wait :)
(avvvu.. sri ennama thathuvam solra daa)

Karthik said...

கலக்கல்ஸ்.. நானே சொல்லலாம்னு இருந்தேன்.. :)))

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

Divyapriya said...

நல்லா இருக்கு உங்க பொறியல் :)