அந்த மூன்று எழுத்து
வார்த்தை
நெஞ்சில் புகுந்தது.
சொல்ல முடியாத இன்பம் !!
தொண்டைக்கும்
வயிற்றுக்கும்
உருவமில்லாத உருண்டை
உருளுதடி என்று
வைரமுத்துவின்
பாடலைப் கேட்டபோது
அர்த்தம் புரியவில்லை.
அனுபவபூர்வமாக
உணர்ந்தபோது
சுகம் தாங்கமுடியவில்லை!
காதல் நோயால்
தாக்கப்பட்டேன்!
நினைவு எல்லாம் அவன்.
உள்ளம் அவனை மட்டும்
சிந்திக்கிறது
உதடு அவன் பெயரை மட்டும்
உச்சரிக்கிறது.
ஏன் வந்தது? எப்படி வந்தது?
தெரியவில்லை!
புரிந்துகொண்டேன். . .
காதலுக்குக்
காரணமிருக்காது
அப்படி காரணம் இருந்தால்
அது
காதலாக இருக்காது!
காதல் என்னைப்
பைத்தியமாக்கியது.
அவன் மேல்
பைத்தியமாக்கியது.
அதிசயமாக இருந்தது.
காதல் எட்டாவது அதிசயமாகத்
தெரிந்தது.
என்னுள் உள்ள பெண்மையை
எனக்கே தெரியாமல்
எனக்கு அறிய வைத்தான்.
நாணத்தால் வெட்கப்பட்டேன்
என்னை அறியாமலேயே!!
என் இதயத்தைத் திருடியவன்
அவன்
தண்டனையை அனுபவிப்பவள்
நான்.
காதல் என்பது ஆயுள்
தண்டனையா?
இல்லை இல்லை
அது மரண தண்டனை!
1 comment:
காதல்
தண்டணையென்றால்
அது சுகமான தண்டணை
காதல் எதுவாக
பாவித்தாலு
அத்தனையிலும் ஒரு சுகமுண்டு
காதலில் விரகம் கவலை தான்
ஆனால் அவளை நினைப்பதில்
இருக்கும் சுகம் அவளை
காண்பதை விட முந்தியிருக்கிறதே
என்று எழுத வைக்கும் உங்களின் கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்
உங்களை எழுதவைத்த பாக்கியசாலிக்கு என் இனிய வாழ்த்துக்கள்
Post a Comment