Dec 24, 2006

உடைந்தபோன கண்ணாடி

திரிந்தோம் நண்பர்களாய்
பிரிந்தோம் எதிரிகளாய்
தவறை எடுத்துக் கூறியது
தவறா?
உன் நலம் நினைத்துச்
சொன்னேன்
அதைக் குற்றம் என்று
சொன்னாய்
உடைந்து போனேன்
செய்யாத தவறுக்கு
நான் கேட்ட மன்னிப்புக்ள்
உதறப்பட்ட போது
சுக்குநூறாய் ஆனேன்
மனதில் ஊசி குத்திய வலி
கூடவே கண்ணீர்
இப்போதும் பார்க்கிறோம்
ஒரு புன்னகைக்குக் கூட உன்
உதடு மறுக்கிறது
நாட்கள் கடந்ததில்
காயம் மறைந்தது
ஆனால், வலிகள் மட்டும்
எப்போதும் என்னுடன்
மறப்போம் மன்னிப்போம்
எல்லாவற்றையும்
மறக்கிறேன்
உன்னையும் சேர்த்தே!!!!

3 comments:

Karthik said...

//உன்னையும் சேர்த்தே!!!!

This bottom line does all the magic.

FunScribbler said...

@karthik,

//This bottom line does all the magic.//

நன்றி கார்த்திக். தூசி தட்டிபோயிருந்த என் முதல் கவிதைக்கு முதலில் ஒரு கருத்து சொன்னதற்கு. :)

தமிழ்குறிஞ்சி said...

தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்