Dec 25, 2006

கல்யாண வாழ்த்துகள்

கல்யாண வாழ்த்துகள்

நிலவு நண்பனுக்கு
இன்று ஒரு நிலவுதோழி கிடைக்கபோகும்
பொன் நாள்

வசந்தத்தின் வாசலில்
நின்று இனி
வரவேற்கும் வருங்காலம்
தன்னால்...

உங்கள் கனவுகளுக்கு
ஓர் அர்த்தம் பிறக்கபோகிறது
என்று சொன்னால்..

அது மிகையில்லை
என்ற பதில் வந்துவிடும்
உங்கள் கண்ணால்...

நேரடியாக வந்து வாழ்த்த
முடியவில்லை
என்னால்...

இருப்பினும் இந்த வாழ்த்துகளை
சமர்ப்பிக்கிறேன்
உங்கள் முன்னால்..


பிரியமுடன்
தமிழ்மாங்கனி

1 comment:

N Suresh said...

என்றொ என் தம்பிக்கு சொன்ன வாழ்த்துக்கள் இவை!
அவனுக்கு பிறந்த மகளாவது நன்றி சொல்லட்டுமென்று காத்திருப்பதை
அறிந்தேன்.

வாழ்த்துக்களே
உன்னை நன்றியோடு வாழ்த்துகிறேன்
நான்
நிலவு நண்பனின்
அண்ணன்