வானத்தில் வேகதடை இல்லாமல்
போகும்
காற்றின் வேகம்
என் காதலின் வேகம்
குளிர்கின்ற உடலுக்கு
நெருப்பின் வெப்பம் சுகும்
தவிக்கின்ற என் மனத்திற்கு
என் காதல் சுகும்
ஆகாயத்தில் பார்த்ததுண்டு
வானவில்லை
என் காதல் வானத்தில்
திடீரென்று
வந்தது தொல்லை
பூகம்பம் நேர்ந்தால்
பிளவுபடும் பூமி
என் காதல் இறந்தவுடன்
தேடிச் சென்று பார்த்தேன்
கோயிலில் சாமி
கோபத்தில் எல்லாவற்றையும்
சொல்ல நினைத்தேன்
கடவுளைக் கண்டதும்
கடகடவென்று வந்ததோ
வெறும் கண்ணீர்!!
1 comment:
//வானத்தில் வேகதடை இல்லாமல்
போகும்
காற்றின் வேகம்
என் காதலின் வேகம்//
வேகத்தடை என்று தானே இருக்க வேண்டும்? வேகத்தில் "த்" ஓடியிருக்கலாம் பரவாயில்லை, நல்ல வரிகள்.
//குளிர்கின்ற உடலுக்கு
நெருப்பின் வெப்பம் சுகும்
தவிக்கின்ற என் மனத்திற்கு
என் காதல் சுகும்//
சுகும் சரியா? சுகம் என்று தானே இருக்க வேண்டும். நான் திருத்தவில்லை. அறிந்து கொள்ள கேட்கிறேன்.
காதலே தவிப்பானால் என் செய்ய
என்று சிந்திக்க வைக்கும் வரிகள்
//ஆகாயத்தில் பார்த்ததுண்டு
வானவில்லை
என் காதல் வானத்தில்
திடீரென்று
வந்தது தொல்லை//
தொல்லைகளை வானவில்லோடு
ஒப்பிடுகிறீர்கள்
ஓ
காதல் தொல்லைகளை
ரசிக்கிறது காதல்
//பூகம்பம் நேர்ந்தால்
பிளவுபடும் பூமி
என் காதல் இறந்தவுடன்
தேடிச் சென்று பார்த்தேன்
கோயிலில் சாமி//
அது தான் காதல் சாமியோ
//கோபத்தில் எல்லாவற்றையும்
சொல்ல நினைத்தேன்
கடவுளைக் கண்டதும்
கடகடவென்று வந்ததோ
வெறும் கண்ணீர்!!//
கண்ணீர் என்ன
வெறும் கண்ணீரா
உண்மை ஊமையானால்
கண்ணீர் ஒரு மொழியாக
மாறுகிறது என்கிறார் திரு வைரமுத்து
வாழ்த்துக்கள்
Post a Comment