Mar 2, 2009

பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்- 1

காலை மணி 8. தனது காலை உடற்பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பினாள் கவிநா. சூரியன் ஒளி ஜன்னல் வழி வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் பட்டது. வீட்டினுள்ளே நுழைந்தவள் curtain துணியால் ஜன்னலை மூடினாள். வாசலில் இருந்து கொண்டு வந்த செய்தித்தாளை மேசையில் போட்ட படியே,

"கிரீஷ், ஏந்திரி! இன்னும் என்ன தூக்கம்? ஏந்திரி டா"

சொல்லி கொண்டே, அறையினுள் நுழைந்தாள் கவிநா. ஜன்னலை எட்டி பார்த்தபடி கிரீஷ் நின்று கொண்டிருந்தான்.

"ஓ ஏந்திரிச்சுட்டியா.... சரி குளிச்சிட்டு வா... what do you want for a drink? coffee or tea?" கேட்டுகொண்டே கலைந்திருந்த போர்வையை சரி செய்து மெத்தையில் வைத்தாள்.

ஜன்னல் வெளியே விட்ட பார்வையை கவிநா பக்கம் திருப்பி, கேள்வியை மறுபடியும் சொல்லியபடி கிரீஷ், "coffee or tea?mmm...can i have a bit of u?" சிரித்தான்.

"what!" மெத்தையில் கிடந்த தலையணையால் கிரீஷை செல்லமாய் அடித்தாள்.


காலை உணவு சாப்பிட அமிர்ந்தான் கிரீஷ். அங்கிருந்த போட்டோ ஆல்பத்தை திறந்து அதன் முதல் படத்தை கண்சிமிட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான். சமையல் அறையிலிருந்து bread toastயையும் காபியையும் எடுத்து வந்த கவிநா அவன் நிலைமையை புரிந்து கொண்டாள்.

அவன் அருகே சென்று, "கிரீஷ், இது நான். கவிநா. இது ராஜேஷ். இவ லீனா. நம்ம எல்லாரும் காலேஜ் டூர் போன போது எடுத்த படம். நீ தானே இந்த படத்த எடுத்த...." என்று ஒரு குழந்தையிடம் பாடம் சொல்லி கொடுப்பது போல் ஒவ்வொன்றை மெதுவாய் அமைதியாய் சொன்னாள் கவிநா. கிரீஷ் அவளை பார்த்து ஒரு புன்னகை.

"சரி சாப்பிடு..." என்று கவிநா கிரீஷின் கையில் காபியை கொடுத்தாள். மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தவளை கிரீஷ் கூப்பிட்டு "கவி, இன்னிக்கு postman வந்திருந்தான்."

அன்று ஞாயிற்றுக்கிழமை.

கவிநா ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றாள்.

மதியம் 12 மணி அளவில் இருவரும் படம் பார்க்க தியெட்டர் கிளம்பினார்கள். கொஞ்சம் தூரமான பயணம் என்பதால் கிரீஷை காரை ஓட்டவிடவில்லை கவிநா. அவளே ஓட்டினாள். பக்கத்தில் அமைதியாய் வந்த கிரீஷ், திடீரென்று தனக்கு தானே பேசிகொண்டான்.

"ஆமாண்டா சொல்லு. நான் marsல தான் இருக்கேன். நீ எங்க இருக்க இப்போ... venusஆ?" என்று ஒரு நண்பனுடன் பேசுவது போல் அவன் பேச்சுகள் அமைந்தன.


ஒரு வினாடி கழித்து யாரோ ஒரு பெண்மணியிடம் பேசுவது போல் "இந்த ஏரியா இங்க இல்ல... நீங்க flight எடுத்து போகனும்." சிரித்தமுகத்துடன் தனது பேச்சுகளை தொடர்ந்தான் கிரீஷ்.

கவிநா தனது கவனத்தை சாலையிலும் வைத்திருந்தாள் அதே சமயம் கிரீஷ் மேலேயும் இருந்தது. பாதுகாப்பு கருதி கதவுகளை 'லாக்' செய்து கொண்டாள். அவன் இருக்கும் மனநிலையை புரிந்த கொண்ட கவிநா ஏதும் சொல்லாமல் இருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து, சுயநினைவுக்கு வந்தவனாய் அமைதியாய் மாறி போனான் கிரீஷ். சற்று நேரத்திக்கு முன் காணப்பட்ட கிரீஷுக்கும் இப்போது மாறிய கிரீஷுக்கும் நிறைய வேறுபாடு.


"ஏய் கவி, என்னமா ஒன்னுமே பேசாம வர...என்ன ஆச்சு?" கியரின் மேல் விழுந்த துப்பட்டாவின் மேல் கைவைத்து.

'ஒன்னுமில்ல' என்பதுபோல் அவனை பார்த்து புன்னகையித்தாள். "சும்மா...உன்னைய பத்தி நினைச்சுகிட்டு வந்தேன்." புன்னகை மாறாமல் சொன்னாள்.

"என்னைய பத்தி நினைச்சுகிட்டே இருக்க... நான் என்ன உன் காதலனா..i am your husband." அவன் அடித்த ஜோக்குக்கு அவனே சிரித்தான்.

முறைத்தாள் கவிநா.

"ஒகே சாரி... i will try a better one next time." என்றதும் வாய் விட்டு சிரித்தாள் கவிநா.

தியெட்டரை வந்து அடைந்தனர். கிரீஷுக்கு romantic படங்கள் ரொம்ப பிடிக்கும். 'அலைபாயுதே' படத்தை பார்த்து கொண்டிருந்தனர். இடைவேளையின் போது நிரம்பி வழிந்த கூட்டங்கள் கழிவறைக்கும் பாப்கார்ன் வாங்கவும் சென்றன.


"கவி, this movie reminds me of our college days. நம்ம காதல்ல ஜெயிக்க வைக்க எத்தன போராட்டம்?" குரலில் ஒரு கவலையுடன் கிரீஷ்.


தொடர்ந்தான் கிரீஷ், "ஐ லவ் யூ கவி." சீட்டின் கைபகுதியில் வைத்திருந்த கவிநாவின் கைகளை இறுக்க பிடித்து கொண்டு.




"மீ டூ." என்றாள் கவிநா அவனின் தலைமுடியை அழகாய் கலைத்துவிட்டு.

இடைவேளை முடிந்து பத்து நிமிடங்கள் வரை ரசித்து கொண்டிருந்த கிரீஷ், கவிநா காது அருகே சென்று "கவி, வா போவோம். படம் நல்லா இல்ல. எனக்கு பிடிக்கல."


சற்று குழம்பம் அடைந்த கவிநா "கிரீஷ், நீ தானே நல்லா இருக்குன்னு சொன்னேன் இப்போ..."

"பிடிக்கல....நீ வரியா இல்லையா?" சற்று குரலை உயர்த்தி அதட்டுவது போல் பேசினான்.

(பகுதி 2)

14 comments:

Karthik said...

//can i have a bit of u?

ah, there you go! romance is becoming your trademark these days? :)

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Karthik said...

ஓ, இது ரொமான்டிக் ஸ்டோரி இல்லையா? ஆனாலும் கவிநா(?), கிரிஷ் பேசிக்கிறது சூப்பர்ப். i am your husband. ha..ha. :))

ம்ம், பின்னாடி நிறைய வரப்போகுதுன்னு தெரியுது. அடுத்த பார்ட்ட கொஞ்சம் சீக்கிரம் போடுங்க.

ARV Loshan said...

மனதில் காதல் சாரல் தரும் மென்மையான எழுத்து நடை.. கலக்கல்.. தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.. :)

//romance is becoming your trademark these days? :)//

:)

Divya said...

Is GIRISH a mentally ill person??
or hv any health issues?

etho apdi irukra mathry thonichu athan ketein, let me wait and c........


good flow of writing Tamilmangani!

Keep going!

FunScribbler said...

@திவ்ஸ்,

//Is GIRISH a mentally ill person??
or hv any health issues?//

ஹாஹா அட கதையே அதாங்க...சரியா கண்டுபிடிச்சுட்டீங்க...

அத பத்தி வரும் அடுத்த பகுதியில்...

FunScribbler said...

@கார்த்திக்

//ah, there you go! romance is becoming your trademark these days? :)//

romance!?? ஓ ஒரு ஆஞ்ஜநயா பக்தையை பார்த்து எப்படி நீங்க இத கேட்கலாம்!:)

FunScribbler said...

@கார்த்திக்

//ம்ம், பின்னாடி நிறைய வரப்போகுதுன்னு தெரியுது//

கதை நல்லாயில்லேன்னா, கொலைமிரட்டல் வருமோ? :)

ஆதவா said...

நல்ல தொடக்கம்...... கதையோட்டம் ரொம்ப நல்லா இருக்கு... ஆனா சட்டுனு தொடரும் போட்டதுதான் புடிக்கல..

சீக்கிரமே அடுத்த பாகம் தாராட்டி, கொலை மிரட்டல் எல்லாம் வராது... கொலையே விழும்....

Divya said...

\\Blogger Thamizhmaangani said...

@திவ்ஸ்,

//Is GIRISH a mentally ill person??
or hv any health issues?//

ஹாஹா அட கதையே அதாங்க...சரியா கண்டுபிடிச்சுட்டீங்க...

அத பத்தி வரும் அடுத்த பகுதியில்...\\


haiya en guess correcta??

sorry Gayathri.......kathai oda knot aa ipdi tapaknu pottu odaichutein, so sorry

FunScribbler said...

@ஆதவா

//கொலையே விழும்....//

ஹாஹா...:)

FunScribbler said...

@திவ்ஸ்

//sorry Gayathri.......kathai oda knot aa ipdi tapaknu pottu odaichutein, so sorry//

அட இதுக்கு எதுக்கு சாரி எல்லாம்...it's ok man. no problem! readers could have guessed too!:)

"உழவன்" "Uzhavan" said...

கதையின் தலைப்பில் எதோ பிழை உள்ளது போல் இருக்கிறது. "பூகூட" அல்லது "பூவுக்குக்கூட" ?
கதை அமைந்த விதம் நன்று!

வாழ்த்துக்கள்!
உழவன்

FunScribbler said...

@உழவன்

//"பூகூட" அல்லது "பூவுக்குக்கூட" ?//

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் வந்த வரியை தான் அப்படியே எடுத்து தலைப்பாக வைத்துவிட்டேன். அந்த பாடலின் மெட்டோடு படித்து பார்க்கும்போது, நல்லா இருக்கும்! பாடி பாருங்களேன்.

அதற்காக தான் அப்படி வைத்தேன்:)