Mar 21, 2009

கொஞ்ச நாள் பொறு தலைவா-2

பகுதி 1

நேற்று ராகேஷ் "சொல்லு மா" என்று சொல்லியது எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது. ம்ம்ம்... பார்க்கவும் சரி பழகவும் சரி, நல்ல மனிஷனா தான் தெரிகிறார். தன் மனதில் பட்டதை தைரியமாக சொன்னது அழகாய் தெரிந்தது, மற்றவர்களின் மனதையும் புரிந்து கொள்ளும் கணவனை அடைய பாக்கியம் செய்திருக்க வேண்டும். நான் பாக்கியம் செய்தவள் போலும்.

ஒரு வாரம் சென்றது. ஒரு நாள், நான் இணையத்தில் சில சமையல் குறிப்புகளை தேடி கொண்டிருந்தேன். ராகேஷுக்கு கோழி என்றால் ரொம்ப இஷ்டம்.

"நித்யா, என்ன தீவிரமா இண்டர்நெட்ல பாத்துகிட்டு இருக்க." ராகேஷ் ஆபிஸ் முடிந்து வந்த களைப்பில் சோபாவில் விழுந்தான்.

"ஒன்னுமில்ல ராகேஷ்... உனக்கு பிடிச்ச கோழி ஐட்டம் ஏதாச்சு இருக்கா... அத எப்படி செய்றதுன்னு பாத்துகிட்டு இருக்கேன்?" பதில் அளித்தேன் நான்.

"ஆமா... சமையல உன்னோட speciality என்ன?" காற்று வாங்க, கழுத்தில் போட்டிருந்த tieயையும் சட்டையின் முதல் இரண்டு பட்டன்களையும் அவிழ்த்தான் ராகேஷ்.

பார்வையை கணினியின் மேல் வைத்தவாரே, "ம்ம்...சுடு தண்ணி சூப்பரா வைப்பேன் ராகேஷ்."

வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான் ராகேஷ். "என்ன நித்யா...காமெடிலாம் பிச்சு வாங்குறே?"

நான் அவனை பார்த்து, "இல்ல ராகேஷ்... உண்மையாகவே அவ்வளவு தான் எனக்கு தெரியும். கல்யாணத்துக்கு முன்னாடி, அதுக்குலாம் நேரம் கிடைக்கல. வேலை... வேலை முடிஞ்சா...training...அப்பரம் ரொம்ப tiredஆ போயிடும்... வந்து சாப்பிட்டு தூங்கிடுவேன்."

அவன் முகத்தில் குழப்ப மின்னல்கள் வெட்டின, "என்ன training நித்யா?"

அவன் எதிரே வந்து உட்கார்ந்தேன்.

"அத்தைகிட்ட நான் சொல்லியிருந்தேனே...உன்கிட்ட சொல்லலயா?" நான் மேலும் பேசியது அவனுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது.

தொடர்ந்தேன் நான், " நான் தமிழ்நாடு பெண்கள் boxing சங்கத்துல இருக்கேன். சின்ன வயசுலேந்து பாக்ஸிங் கத்துகிட்டு வரேன்..."

அவன் முகத்தில் குழப்பம் மறைந்து பயம் வந்துவிட்டது. "அப்ப.. நித்யா... நீ இன்னும் continue பண்ண போறீயா?" எச்சில் விழுங்க கஷ்டமா இருந்தது ராகேஷுக்கு.

"ச்சே ச்சே... இனி மேலு எதுக்கு, அதான் கணவன் இருக்காரே practice பண்ண?" நான் அடித்த ஜோக் அவனுக்கு 'பகீர்' என்றது. சிரிக்ககூட முடியாமல் தவித்தான்.

சிரித்தபடியே நான், "ஹாஹா... சும்மா சொன்னேன்.. பாக்ஸிங்கும் கிடையாது... ஒரு trainingகும் கிடையாது.."

"என்கிட்டயேவா...." அவனும் சிரித்தான்.

"சரி ராகேஷ் சொல்லு, என்ன வேணும் உனக்கு? ஹைதரபாத் கோழி பிரியாணி or செட்டிநாட்டு கோழி குழம்பு?" print out செய்து கையில் வைத்திருந்த தாட்களை அவனிடம் நீட்டினேன்.

"உன் இஷ்டம். நீ என்ன செஞ்சாலும்.... அது சுடு தண்ணி மாதிரி தான் இருக்கும்." என்று அவன் கிண்டலடித்தான். செல்ல கோபத்துடன் என் கையில் வைத்திருந்த தாட்களை அவன் தலையில் அடித்தேன்.

"சரி சரி....அடிக்காதே... ஹைதரபாத் கோழி பிரியாணியே செய்....நான் குளிச்சுட்டு வந்துடுறேன்." அவன் கிளம்பி அறைக்கு சென்றான். நான் சமையலறைக்கு சென்றேன். என்னை கூப்பிட்ட ராகேஷ்,

"நித்யா, எனக்கு ரொம்ப பசிக்குது... சீக்கிரம் ரெடி பண்ணு உன் ஹைதரபாத் சுடு தண்ணிய." என்று மறுபடியும் கிண்டல் அடித்துவிட்டு அறைக்குள் ஓடிவிட்டான்.

அவன் அருகே இருக்கும் நேரம், எனக்கு கொடுத்த சுதந்திரம், அவனுக்குள் இருந்த நகைச்சுவை உணர்வு எல்லாமே பிடித்திருந்தது.

------------------------------------------------------------------------------------------------------------------------

முதல் தடவ செய்த மாதிரியே இல்லை. நல்லாவே இருந்தது நித்யாவின் சமையல். சாப்பிட்டு முடித்துவிட்டு, தொலைக்காட்சி பார்க்க உட்கார்ந்தோம். அவள் சமையலை செய்து காட்டி அசத்திவிட்டாள். ஆக, என் பங்குக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று மனம் சொன்னது. கிரிக்கெட் சேனல் ஓடி கொண்டிருந்த டிவியில், நான் ஏதோ ஒரு சீரியல் சேனலுக்கு மாற்றினேன், அவளுக்கு பிடிக்கும் என்ற நோக்கத்தில்.

நான் மாற்றியதை கண்டு, கேள்வி எழுப்பினாள், "ஏன் மாத்துனே சேனல?"

"இல்ல... நீ சீரியல பார்க்க ஆசைபடுவேன்னு...." என்று இழுத்தேன்.

"நான் உன்கிட்ட சொல்லியிருக்கேனா... நான் சீரியல் பார்ப்பேனு..." அவள் சீறினாள்.

"பொண்ணுங்க normalஆ அதான் பாப்பாங்க..."

".ஏன் நாங்க கிரிக்கெட் பார்க்க மாட்டோமா...சீரியல் மட்டும் தான் பார்ப்போம்னு ஏதாச்சு சட்டம் இருக்கா என்ன?" அவளுக்கு கோபம் வந்தது. நான் சாதாரணமாக செய்த செயல் இப்படி வந்து முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

"ஏய் நித்யா...ரிலேக்ஸ்...சரி விடு. கிரிக்கெட் தானே பாக்கனும்...இந்தா பாரு." கூறினேன் நான்.

அவள் முணுமுணுத்தாள், " i hate people who stereotype girls...."
அவள் 'hate' என்ற வார்த்தையை பயன்படுத்தியது எனக்கு பிடிக்கவில்லை.

"so you hate me?நேரா சொல்ல வேண்டியது தானே...." எனக்கு கோபம் வந்தது.
அவள் அமைதியானாள். என் கோபத்தை சற்றும் எதிர்பார்க்காதவள் திடிக்கிட்டு போனாள்.

"அப்படி இல்ல ராகேஷ்.... நான் பொதுவா சொன்னேன்." அவள் பணிந்து போனாள். ஆனால், நான் விடுவதாக இல்லை.

"நமக்குள்ள ஒன்னுமே நடக்கல. அதுக்குல வெறுத்து போச்சா... ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்னு சும்மாவா சொல்லியிருக்காங்க..." என் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

(பகுதி 3)

6 comments:

Revathyrkrishnan said...

ஹை... நான் தான் ஃபர்ஸ்ட்:))))))))

Revathyrkrishnan said...

கதை மிக சுவாரசியமாக போகிற‌து காயத்ரி... என்ன அதுக்குள்ளேயே ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க ஆரம்பிச்சுட்டாங்க? ம்ம்ம்... அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறேன்

FunScribbler said...

@ரீனா

முதலாவதாக வந்தமைக்கு,உங்களுக்கு நித்யா செய்த கோழி பிரியாணி அனுப்பப்படும்!:)

//கதை மிக சுவாரசியமாக போகிற‌து காயத்ரி//

நன்றிங்கோ:)

Karthik said...

தொடர் கதையா? கலக்குங்க. :)

புதியவன் said...

//".ஏன் நாங்க கிரிக்கெட் பார்க்க மாட்டோமா...சீரியல் மட்டும் தான் பார்ப்போம்னு ஏதாச்சு சட்டம் இருக்கா என்ன?" அவளுக்கு கோபம் வந்தது. நான் சாதாரணமாக செய்த செயல் இப்படி வந்து முடியும் என்று எனக்கு தெரியவில்லை.//

குடும்பத்தில சண்டை இப்படியெல்லம் கூட ஆரம்பிக்குமா...?...உங்களுக்கு நிறைய டீவி சீரியல் பார்த்த அனுபவம் இருக்கு போல...

FunScribbler said...

@புதியவன்

//...?...உங்களுக்கு நிறைய டீவி சீரியல் பார்த்த அனுபவம் இருக்கு போல...//

ஆமா ஆமா வேற வேலை நமக்கு. காலையில ஆரம்பிக்கும் 'மகள்' தொடர் முதல் இரவு 'சிவசக்தி' தொடர் வரைக்கும் பார்ப்பேன்.

என்னங்க கிண்டலா?:)

சும்மா வெறும் டிவிய பாக்கவே நேரமில்ல. நான் எங்க போய் சீரியல் பாக்குறது?:)