மறுபடியும் கிரீஷுக்கு ஃபோன் செய்து பார்த்தாள் கவிநா. ரீங் போனாலும் யாரும் எடுக்கவில்லை. பயம் அவளை கவிக்கொண்டது. உடல் முழுக்க வேர்வை துளிகள். உடனே எல்லாம் வேலையை போட்டுவிட்டு, காரில் ஏறி வீட்டிற்கு சென்றாள்.
செல்லும் வழியில், டாக்டருக்கு ஃபோன் செய்ய முயற்சி செய்தபோது அவள் கைபேசியில் பெட்ரி இல்லாமல் போனது.
மனம் படபடக்க என்ன செய்வது என்று தெரியாமல் காரை வேகமாக ஓட்டினாள். அவள் எண்ணம் கிரீஷை பற்றியே இருந்ததால் சாலையை சரியாக கவனித்து ஓட்டமுடியவில்லை. சாலையில் கிடந்த ஒரு பெரிய பலகையை கவனிக்காமல் அதன் மேல் ஏறி சென்றது கார்.
அடுத்த நொடி, காரின் முன் டயர் கிழிந்துவிட்டது. அவளின் பயம் அதிகரித்து அவளை பிடிங்கி திண்ண ஆரம்பித்தது. அழுகை ஒரு புரம், காரின் மேல் கோபம் ஒரு புரம்- இப்படி அவள் பல உணர்ச்சிகளின் நடுவே பந்தாடப்பட்டாள். 'கால் டெக்சிக்கு' அழைத்தாள். அரை மணி நேரம் கழித்து தான் வந்தது டெக்சி.
வீட்டை அடைந்தாள்.பணத்தை எண்ணகூட நேரத்தை வீணாக்காமல், பணநோட்டுகளை ஓட்டுனர் கையில் திணித்துவிட்டு வீட்டை நோக்கி ஓடினாள். அவள் கண்களில் கண்ணீர் வழியும் வேகத்தைவிட அவளின் கால் ஓடிய வேகம் அதிகம். மின்தூக்கி இடத்திற்கு சென்றால் 'out of order' என்று எழுதப்பட்டிருந்தது. அவளின் இதயதுடிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஏழு மாடி ஏறினாள். வீட்டு கதவு அருகே வந்தபோது, ஆச்சிரியம்!
கதவு திறந்து இருந்தது.உயிர் போவதுபோல் இருந்தது கவிநாவுக்கு. கதவை திறந்துகொண்டே கிரீஷை சத்தம் போட்டு கூப்பிட்டாள். பதில் எதுவும் வரவில்லை. ஒரே இருளாக இருந்ததால் அவள் ஹாலிலுள்ள விளக்கை போட switchயை தேடினாள்.
ஏதோ ஒரு switchயை அழுத்த,வெளிச்சம் வந்தது. அதே நேரம் அவள் மேல் வண்ணபூக்கள் கொட்ட ஆரம்பித்தன. அதே சமயம் ஒரு உருவம் அவள் பின்னாடியிலிருந்து கட்டிபிடித்தது.
"surprise!!!" என்றான் கிரீஷ். அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே ஒரு நிமிடம் ஆனது.
"என்ன இது கிரீஷ்?" அழுகையின் நடுவே கவிநா.
"ஏன்? சாரி கவி... உனக்கு surprise பண்ணதான்...சாரி."
"இது என்ன விளையாட்டு... i was so shocked to hear your trembling voice over the phone. நான் எவ்வளவு பயந்துட்டேன்...தெரியுமா? you stupid fellow....." அவன் நெஞ்சில் முகம் புதைத்து கதறி அழுதாள்.
"ஏய்...என்ன கவி இது... இதுக்கு போய்.. சாரி... சாரி....நீ இவ்வளவு பயப்படுவேன்னு தெரிஞ்சு இருந்தா...நான் செஞ்சு இருக்க மாட்டேன்..." என்று கவிநாவின் கூந்தலை வருடிகொண்டே மன்னிப்பு கேட்டான்.
"இனிமேலு இப்படி செய்ய மாட்டேன்." அவன் குரல் சோர்வானது. கிரிஷுக்கு ஒன்றுமில்லை என்ற நிம்மதி அவளை சாந்தப்படுத்தியது. கண்களை துடைத்து கொண்ட கவிநா அவன் முகத்தை பார்த்து கேட்டாள்,
"இனிமேல்... ப்ளீஸ் இப்படி செய்யாதே.... ஆமா, எதுக்கு கிரீஷ் இந்த surprise?"
கவிநா தனனை மன்னித்துவிட்டாள் என்ற உற்சாகத்தோடு கிரீஷின் முகம் பொலிவானது.
அப்போது மணி 12 ஆனாது. சுவரில் இருந்த கடிகாரம் ஒலி எழுப்பியது. இருவரும் அதை பார்த்தனர். அச்சமயம் கிரீஷ் கவிநா காது அருகே
"happy birthday dear!" என்று சொல்லியவாறு, தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சின்ன பரிசு பொருளை கொடுத்தான் கிரீஷ்.
ஆச்சிரியத்துடன் அதை வாங்கி கொண்ட கவிநா அதை திறந்து பார்த்தாள். platinum necklace with a heart-shaped dollar.
"ஏற்கனவே ஒரு முறை என் இதயத்தையே கொடுத்துவிட்டேன். இது இரண்டாவது முறை." என்று சிரித்த படியே கிரீஷ் கவிநாவை டைனிங் அறைக்கு அழைத்து சென்றான்.
மெழுகுவர்த்திகள், பூக்கள், பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது மேசை. அதன் மேல் ஒரு கேக். கேக்கில் ரோஸ் வண்ண கீரிமால் எழுதியிருந்தது
'happy birthday to my darling." ஆனந்தத்தால் அவளுக்கு வார்த்தையே வரவில்லை. கேக் வெட்டிமுடித்தபின் கவிநா,
"எதுக்குடா இதலாம்.... "
பதில்- கண்களாலே ஐ லவ் யூ சொன்னான்.
"இன்னும் இருக்கு நிறைய... வா..." என்றவன் கவிநாவை படுக்கை அறைக்கு அழைத்து சென்றான். படுக்கையில் அழகிய ரோஜாக்கள் கிடந்தன. அதை கண்டு பூரிப்பு அடைந்தவள் படுக்கையில் உட்கார்ந்து ஆனந்த கண்ணீரில் மூழ்கினாள். தன் மூகத்தை கைகளால் மூடி கொண்டு அழுத கவிநாவின் கைகளை விலக்கினான் கிரீஷ். இன்னொரு பரிசு ஒன்றை தந்தான். அவளையே ஓவியமாய் வரைந்த ஒரு படம்- அதன் கீழே ஒரு கவிதை.
ஒரு கவிதையே
என் கவிதையை
படிக்க நான் தவம்
செய்திருக்கவேண்டும்.
ஒரு ஓவியத்தையே
நான் ஓவியமாய்
வரைய வரம்
பெற்றிருக்கவேண்டும்!
அவள் படித்து முடிக்கும் வேளையில் படுக்கையில் இருந்த ஒரு ரோஜாவை எடுத்து அவளிடம் நீட்டி,
"you are always my angel" என்றான் மன்றாடும் தோரணையில். கிரீஷை மார்போடு அணைத்தபடி அவன் கழுத்தில் இதழ் பதித்தாள் கவிநா.
எல்லாவற்றையும் ரசித்தாள் அவனுக்காக,
அன்று உண்மையாகவே அவள் பிறந்தநாள் இல்லை என்றபோதிலும்!
**முற்றும்**

29 comments:
முதல் பகுதிலருந்து படிச்சு முடிச்சுட்டு வந்திருக்கேன்..!
வரிகளுக்காக எழுதப்பட்ட கதை...
கதைக்காக எழுதப்பட்ட வரிகள்...
எதுவாயிருந்தாலும் உங்க டச் ஒவ்வொரு வரியிலும் இருந்தது...
ஆமா இந்தப்படம் எப்ப வரும்..?
:)
எனக்கும் ரொமான்டிக் ஸ்டோரிதான் பிடிக்கும் அதனால இந்தக்கதை
நல்ல கதை... :)
@தமிழன் -கறுப்பி
//முதல் பகுதிலருந்து படிச்சு முடிச்சுட்டு வந்திருக்கேன்..!//
உங்களுக்கு பொறுமை ரொம்ப அதிகம்தான் போங்க:)
//
எதுவாயிருந்தாலும் உங்க டச் ஒவ்வொரு வரியிலும் இருந்தது...//
உங்க ஆதரவு என்னை உற்சாகப்படுத்துகிறது. மிக்க நன்றி:)
//ஆமா இந்தப்படம் எப்ப வரும்..?
:)//
தயாரிப்பாளர் நீங்களாக இருந்தால், நாளைக்கு பூஜைய போட்டுவிடலாம். என்ன சொல்றீங்க?:)
@தமிழன் - கறுப்பி
//எனக்கும் ரொமான்டிக் ஸ்டோரிதான் பிடிக்கும்//
எனக்கு உருப்படியா வரது அந்த ஒன்னு தான்! என்னைய சீரியஸா எழுத சொன்னீங்கன்னா... உலகம் முடிஞ்சதுன்னு அர்த்தம்!:)
உங்களது பின்னோட்டங்களுக்கு நன்றி
ரொம்ப நல்லா இருந்ததுங்க :-) வாழ்த்துக்கள்!
//அவள் கண்களில் கண்ணீர் வழியும் வேகத்தைவிட அவளின் கால் ஓடிய வேகம் அதிகம்.//
அருமையான வரிகள்.
//மின்தூக்கி
switchயை தேடினாள்//
மின்தூக்கி என்று சொல்லியிருக்கிற நீங்கள், switchயையும் தமிழ்ப் படுத்தியிருக்கலாமே...
//"ஏற்கனவே ஒரு முறை என் இதயத்தையே கொடுத்துவிட்டேன். இது இரண்டாவது முறை." //
ரசிக்கக்கூடிய வார்த்தைகள்.
//எல்லாவற்றையும் ரசித்தாள் அவனுக்காக,
அன்று உண்மையாகவே அவள் பிறந்தநாள் இல்லை என்றபோதிலும்!//
எப்படிங்க உங்களால மட்டும் இப்படி முடியுது :-) wow.. super
ஆனால், முற்றும் னு பார்த்தவுடனே, மனது கொஞ்சம் வாடியது.
ஆமா.. உங்களிடம் ஒரு கேள்வி.. "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் கதை இதுதானோ???
அன்புடன்,
உழவன்
நாலு பார்ட் படிச்ச மாதிரியே இல்லை. Superb flow ya!
தமிழ், ஒன்னு சொல்லட்டுமா? கடைசி வார்த்தையை நான் எதிர்பார்க்கவே இல்லை. சூப்பர்ப்...!
:)
//தமிழன்-கறுப்பி... said...
ஆமா இந்தப்படம் எப்ப வரும்..?
Danny Boyle கேட்டிருக்கார். பேசிட்டிருக்கோம். டீல் ஓகே ஆனா கண்டிப்பா சொல்றோம் ஓகே??
:))
Good End ! :) simbuku eppa thelium?:)
@உழவன்
//ரொம்ப நல்லா இருந்ததுங்க :-) வாழ்த்துக்கள்!//
நன்றி உழவன்.
//மின்தூக்கி என்று சொல்லியிருக்கிற நீங்கள், switchயையும் தமிழ்ப் படுத்தியிருக்கலாமே...//
சரியாய் சொன்னீங்க. எழுத்துகளில் அதிகபடியான ஆங்கிலம் வருவதை நானும் கவனித்து வருகிறேன். அடுத்த முறை குறைத்துகொள்கிறேன். நன்றி:)
@உழவன்
//எப்படிங்க உங்களால மட்டும் இப்படி முடியுது :-) wow.. super//
எல்லாம் புகழும் இறைவனுக்கே!:)
//ஆமா.. உங்களிடம் ஒரு கேள்வி.. "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் கதை இதுதானோ???//
கண்டிப்பா இல்லை. ஆனா, இந்த கதை தான் படத்தின் கதை என்றால், கௌதம் மேன்னனிடம் copyrights charges வாங்குவேன். :)
@கார்த்திக்
//தமிழ், ஒன்னு சொல்லட்டுமா? கடைசி வார்த்தையை நான் எதிர்பார்க்கவே இல்லை. சூப்பர்ப்...!//
அப்படியா!? :) படித்து மகிழ்ந்தமைக்கு நன்றி:)
@கார்த்திக்
//Danny Boyle கேட்டிருக்கார். பேசிட்டிருக்கோம். டீல் ஓகே ஆனா கண்டிப்பா சொல்றோம் ஓகே??//
danny boyleஆ? தம்பியே, என் வயித்துல பால்ல boil பண்ணிட்டே! ஹாஹா... அப்படி ஒன்னு நடந்துச்சுன்னா... அடுத்த ஆஸ்காருக்காக இப்பவே நல்ல dress வாங்க போறேன்.
@மலர்
//simbuku eppa thelium?:)//
கவிநா இன்னும் treatment எடுத்துகிட்டு இருக்காங்க..:)
நல்ல கதை...அதிலும் கடைசி ரெண்டு வரி பஞ்ச் சுத்தமா எதிர்பாக்கவே இல்லை..கலக்கிட்டீங்க
அசத்தலான முடிவு தமிழ்மாங்கனி!!!
ரொம்ப நல்லா இருந்தது இந்த தொடர்கதை:)))
@திவ்ஸ், திவ்யாபிரியா
எனது நன்றிகள்!:)
ஹலோ மேடம் சான்சே இல்ல.. கடைசி ஒரு வரியில கலக்கிட்டீங்க போங்க.. அங்க தான் நிக்கிறீங்க...:)))
@ரீனா
//ஹலோ மேடம் சான்சே இல்ல.. கடைசி ஒரு வரியில கலக்கிட்டீங்க போங்க.. அங்க தான் நிக்கிறீங்க...:)))//
மேடமா? யாரு நானா...வாழ்க்கையில என்னைய அப்படி கூப்பிட்ட முதல் ஆளு நீங்க தான்..அவ்வ்வ்வ்..நீங்க ரொம்ப நல்லவங்க ரீனா!அவ்வ்வ்...
வாழ்த்துகளுக்கு நன்றி!:)
என்னம்மா பொண்ணூ நீ செத்த கோழி திரிசா படம் போட்டிருக்க :((((
/
தமிழன்-கறுப்பி... said...
வரிகளுக்காக எழுதப்பட்ட கதை...
கதைக்காக எழுதப்பட்ட வரிகள்...
எதுவாயிருந்தாலும் உங்க டச் ஒவ்வொரு வரியிலும் இருந்தது...
/
ஆமா இந்த டெம்ப்ளேட் நல்லா இருக்கே
ரிப்பீட்டேய்
ஹாய் காயத்ரி... எப்படி படிக்காம விட்டேன் இந்த கதையை.. ???
Just another Master Piece from U..!! :))))
காயத்ரி வர வர சூப்பரான காதாசிரியை ஆய்ட்டு வர்றே...!! :))))
ரசிச்சி படிச்சேன்...!!!
சயின்டிஃபிக் டச்சோட காதல் கதை.. அவ்ளோ அழகு...!!
வாழ்த்துக்கள் காயத்ரி...!!
@நவீன்
//காயத்ரி வர வர சூப்பரான காதாசிரியை ஆய்ட்டு வர்றே...!! :))))//
நன்றி நன்றி
//சயின்டிஃபிக் டச்சோட காதல் கதை.. அவ்ளோ அழகு...!!//
நன்றி நன்றி:)
அருமையான கதை..
முடிவு மனசைத் தொட்டுடுச்சு...
சூப்பர்..
@கௌரி
//அருமையான கதை..
முடிவு மனசைத் தொட்டுடுச்சு...
சூப்பர்..//
நன்றி:)
Hi there i am kavin, its my first time to commenting anyplace, when i read this article i thought i could also make comment due to this sensible piece of writing.
Here is my page - web page []
Post a Comment