சிவா மனசுல சக்தி மற்றும் வெண்ணிலா கபடி குழு ஆகிய இரண்டு படங்களை பார்த்தேன் நேற்று.
சிவா மனசுல சக்தி- என் மனசுல கொலைவெறி.
ஒரே வாக்கியத்தில் இந்த படத்தை பற்றி சொல்லிட்டேன். எனக்கு செலவு அதிகமாய்கிட்டே போகுது. அதுக்கு காரணம், இந்த மாதிரி சொந்த செலவுல சூன்யம் வச்சுகிறதால.... ஐயோ என்ன பண்ண.... சரி விடுங்க.. என் சோக கதை என்கூடவே போகட்டும்.
என்னடா இது இப்படி பண்ணிட்டோமேன்னு நினைக்குற நேரத்துல வெண்ணிலா கபடி குழு படத்தை பார்த்து...மெய்சிலர்த்துவிட்டேன்.
வெண்ணிலா கபடி குழு- வெற்றி குழு
சுப்பரமணியபுரம், சென்னை 28 ஆகிய படங்களின் சாயல் மாதிரி படம் இருந்தாலும், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பார்த்தேன். உலக புகழ் பெற்ற சச்சினாக இருக்கட்டும் இல்ல தெருமுனையில் கில்லி விளையாடும் சின்ன பசங்களாக இருக்கட்டும்....எல்லாரும் விளையாட்டளர்கள் தான்! அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு வலியும்,வேதனையையும் இயல்பாய் காட்டிய இயக்குனருக்கு சபாஷ்!!
ஹீரோ உண்மையிலேயே ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை அறிந்தேன். நல்லாவே நடித்து இருக்கிறார். தமிழில் இனி வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை... ஆனா அவரை பார்க்க தெலுங்கு ஹீரோ போல் இருப்பதால்... தம்பி, நீங்க அந்தரா பக்கம் போங்க! அப்பரம் ஹீரோயின்... சொல்லவே வேண்டாம்....டாப்! (சுப்பரமணியபுரம் சுவாதியைவிட பல மடங்கு பெட்டர்)
நகைச்சுவை, சோகம், விறுவிறுப்பு- இப்படி பலவற்றின் கலவையாய் நம் டைரியின் இன்னொரு பக்கமாய் உருவம் பெற்றுவிட்டது இப்படம்.
*ஒரு பேருந்தை முந்த(அதில் ஹீரோயின் இருப்பார்) ஹீரோ வேகமாக சைக்கிளை ஓட்டுவார். அவனுக்காக விட்டுகொடுத்த பேருந்து ஓட்டுனர் சொல்வார் "நம்ம சின்ன வயசுல எத்தன வண்டிய முந்தி இருப்போம்...அவன் முகத்துல சந்தோஷத்த பாருய்யா" என்பார் பக்கத்தில் உள்ளவரிடம்.
*ஹீரோ கண்களை கட்டி கொண்டு உரி அடிக்க முயற்சிப்பார். அவருக்கு உதவியாய் ஹீரோயின் தன் கால்கொலுசு சத்தத்தை வைத்து கொண்டு, சிங்கனல் காட்டுவார், சரியான இடத்தில் நிற்க.
*"நான் நல்லா இருக்குன்னு சொன்னா... எல்லாம் கறியையும் எனக்கு கொடுத்துடுனும் ஆத்தா...அதான் நல்லா இல்லேன்னு சொன்னேன்." என்று ஹீரோ அம்மா மீது வைத்திருக்கும் பாசம்..
இப்படி ஏகப்பட்ட காட்சிகளை ரசித்தேன். கிளைக்மெக்ஸ், அழகிய காதல் காவியம்...
இதுக்கு மேல என்ன.... போய் படத்த பாருங்கல!:)
12 comments:
இப்போத்தான் இந்த படங்கள் பாக்குறீங்களா.. ஓகே ஓகே.. வெண்ணிலா கபடிக்குழு உண்மையிலேயே சூப்பர் படம்.. sms பத்தி பேசாம இருக்குறது தான் நல்லது..
வெண்ணிலா படம் அருமை!! புது இயக்குனர் என்று சொன்னால் தான் தெரிகிறது!! பின்னணி இசையும் அருமை!!
எல்லாம் சரி.. படம் ஆரம்பிக்கும்போது இதற்க்கு நெகடிவ் எண்டிங் என்று முடிவு செய்து விட்டார்கள் போல!! கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் வரும் அந்த முடிவு என்னை கவரவில்லை!!
. நல்லாவே நடித்து இருக்கிறார். தமிழில் இனி வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை...
ஆம் அவர் பஞ்ச் டயலாக் பேசவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கு!!
கபடி விளையாடும் போது எதிர் அணி கோட்டுக்கு போய் "நான் மூச்சு பிடிச்சு வந்தா உன் மூச்சு நின்றும்" என்று மூச்சு பிடிச்சுகிட்டே பேசிருந்தா நல்லா இருந்திருக்கும்!!
//ஆனா அவரை பார்க்க தெலுங்கு ஹீரோ போல் இருப்பதால்... தம்பி, நீங்க அந்தரா பக்கம் போங்க!
இப்போ பத்திரிகைகளில் வரும் அவர் புகை படத்தை பார்க்கவில்லையா??
@பாண்டியன்
//இப்போத்தான் இந்த படங்கள் பாக்குறீங்களா//
என்னப்பா செய்ய, நான் ஒரே பிஸிசி!
- கவுண்டர் பேத்திகள் சங்கம்.:)
@புவனேஷ்
//கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் வரும் அந்த முடிவு என்னை கவரவில்லை!!//
அட என்னங்க இப்படி சொல்லிப்புட்டீங்க... முடிவு தான் என்னை ரொம்ப கவர்ந்தது.
//சிவா மனசுல சக்தி- என் மனசுல கொலைவெறி.//
நான் சொல்ல நினைத்த நீங்க சொல்லிடீங்க
நாலு வரில சொன்னாலும் நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க..ரசித்தேன்!
ஓட்டும் போட்டுட்டேன்! :-)
@சந்தனமுல்லை
//ஓட்டும் போட்டுட்டேன்! :-)//
ஓட்டு போட்டாச்சா அக்கா, நன்றி! உங்க வீட்டுக்கு கலர் டீவி வரும். :)
எஸ்.எம்.எஸ் ஹீரோயின் பத்தி ஒன்னும் சொல்லவே இல்லையே?? வெ.க.கு பார்க்கலைங்க.
@karthik
ஹீரோயினா?? அந்த கொடுமையலாம் பத்தி பேச என் உடம்புல சக்தி இல்லடாப்பா!:)
naanum intha(vennila kabadi kulu) parthen.. Enaku romba pidichu irunthuthu.. But en friends ellarukkum pidikkala... Avungaluku attam pattam appadina than pidikkum..... alagana kathal kathai....
Post a Comment