Mar 2, 2009

பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-2

பகுதி 1அவள் வேறு எதுவும் சொல்லவில்லை. அவன் பின்னாடியே சென்றாள். காரில் ஏறியவன் இரண்டு நிமிடம் கழித்து,

"படம் முடிஞ்சுட்டா அதுக்குள்ள?". அவனின் தேவையில்லாத கோபம் நீடித்தது 5 நிமிடங்களுக்கு மட்டுமே. கோபம் குறைந்த சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், ஏதோ ஒரு வருத்தம், கவலை, பயம் அவள் மனதில் ஒட்டி கொண்டது.

"ஆமா...படம் முடிஞ்சுட்டு" என்றாள் கவிநா.

"ஓ அப்படியா...ம்ம்ம்...கடைசில என்ன ஆச்சு. சாரி கவிநா...மறந்துட்டேன்"

"they live happily ever after." என்றாள் கவிநா காரை ஓட்டியபடி.

"ஓ...நம்ம காதல் மாதிரி." கிரீஷ் அவளைப் பார்த்து சொன்னான்.

வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த வழியில், அவர்கள் ஒரு பூங்காவை கடந்து சென்றனர். உடனே கிரீஷ்,

"கவி, கொஞ்ச நேரம் பார்க்ல உட்காந்து இருந்துட்டு போலாமா?" கெஞ்சினான்.

அவன் கெஞ்சலுக்கு முடியாது என்று சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. இருவரும் பூங்காவிற்கு சென்றனர். மெல்லிய குளிர் காற்று. வெயில் இல்லை. இயற்கையை ரசிக்க அருமையான தருணம். மேகங்களை உடைத்து கொண்டு மழைத்துளிகள் எந்நேரமும் கீழே விழ தயாராக இருந்தன. ஆனால், இந்த காதல் ஜோடியை பார்த்த பிறகு அவை சற்று நேரம் காத்திருந்தன.

ஒரு மரத்தடிக்கு பக்கத்தில் சிறு பெஞ்ச்.அங்கே அமர்ந்தனர் கவிநாவும் கிரீஷும். அவ்வளவாக கூட்டமில்லை. பூங்காவில் சில குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. அவர்களை பார்த்து கிரீஷ், "எனக்கும் இந்த மாதிரி இரண்டு குட்டி ஏஞ்சல் வேணும்."

குழந்தைகள் வேண்டும் என்று குழந்தைபோல் அவன் கேட்பதை ரசித்தாள். அவனை பார்த்து கேட்டாள்," என்னைய மாதிரி அழகா வேணுமா? இல்ல கொஞ்ச அழகு கம்மியா வேணுமா?"

"உன்னைய மாதிரியே வேணும்."என்றவன் கவிநாவின் உள்ளங்கையை பிடித்து,

"இங்க பாத்தியா... இந்த சின்ன ரேகையும்....இங்க இருக்குற பெரிய ரேகையும் மீட் பண்ணிக்குது. அப்ப கண்டிப்பா நமக்கு இரண்டு பொண்ணுங்க தான் பொறக்கும்.. நான் நினைச்ச மாதிரியே."

அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு ஏதோ ஒரு ஆனந்தத்தை கொடுத்தது. அவள் தொடர்ந்தாள், "ஏன், இரண்டு பொண்ணுங்க மட்டும்? பசங்க வேண்டாமா...."

"இல்ல பொண்ணுங்க...தான், அவங்க அப்பாவ நல்லா பாத்துப்பாங்க.... girls are really very precious."

கவிநா அவன் முகத்தை பார்த்து சிரித்தபடி, "அப்ப என்னைய பாத்துக்க....?"

"நான் இருக்கேன்..." என்று கிரீஷ் சொன்னபோது அவன் தோள் மீது சாய்ந்துகொண்டாள்.

"நான் உன் மேல வச்சுருக்க காதல் அதிகம்னா நமக்கு பெண் குழந்தை பொறக்கும். நீ என் மேல வச்சுருக்கு காதல் அதிகம்னா பசங்க பொறக்கும்....you wanna bet?" என்றான் உற்சாகத்தோடு.

கவிநா, "இரண்டு காதலும் சமமா இருந்தா..?" புருவங்களை சுருக்கி.

ஒரு வினாடி யோசித்தவன், "இரட்டை குழந்தைங்க தான். ஒன்னு பொண்ணு. இன்னோன்னு ஆண் குழந்தை." என்று பதில் சொன்னவனின் கண்களை பார்த்து வெட்கப்பட்டாள். இந்த பொழுது இப்படியே இருக்கவேண்டும். உலகில் வேறு எதுவும் வேண்டாம். இவன் பேசுவதை வாழ்நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கவேண்டும் என்று உள்ளூர ஆசைகள் பெருக்கெடுத்து ஓடின கவிநாவின் மனதில்.
"கவி, பசிக்குது எனக்கு... அங்க...காபி ஷாப் இருக்கு. எதாச்சு சாப்பிடலாமா?" என்று கேட்டான் கொஞ்ச தூரத்திலுள்ள கடையை காட்டி.

இருவரும் அங்கு சென்று உணவை ஆர்டர் செய்தனர். எதிர் எதிரே உட்கார்ந்து இருந்தனர் கவிநாவும் கிரீஷும்.


கலைத்துவிட்டு விளையாட தூண்டும் பஞ்சு போன்ற மூடி, படர்ந்த நெற்றி, வசீகரிக்கும் காந்த கண்கள், அப்பாவித்தனமாய் முகம், விரல்களால் சீண்ட துடிக்கும் அவன் மூக்கு, உதடுகளுக்கு குடைபோல் விரிந்து இருக்கும் அவன் மீசை, மெத்தைக்கு பதில் அதன் மேல் விழுந்துகிடக்க வேண்டும் என்று ஆசைப்பட வைக்கும் உதடுகள், புன்னகை மாறாத முகம்-

கிரீஷின் அழகை கண்களாலே அளவு எடுத்து கொண்டிருந்தாள் கவிநா. குழந்தையின் பிஞ்சு விரல்கள் போல் மிருதுவாய் இருக்கும் அவனது விரல்களை தொட்டு,

"ஏய், கீரிஷ்.....நீ ரொம்ப அழகா இருக்கே...." என்றாள் கவிநா. ஆண்கள் வெட்கப்படுவதை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். கவிநா கொடுத்து வைத்தவள். அவன் வெட்கப்பட்டு அவளது கையை தடவி கொடுத்தான்.

கவிநாவின் கைபேசி ஒலித்தது. caller idயில் பெயர் தெரிந்தது- டாக்டர் ரவிராஜ். கைபேசியை எடுத்தாள், அப்போது அங்க வந்த சர்வரிடம் கிரீஷ் பேசி கொண்டு இருந்தான். வேறு பக்கம் திரும்பி, அமைதியான குரலில் கவிநா,

"ஹலோ அங்கிள், சொல்லுங்க." கவிநாவின் அப்பாவின் நண்பர் டாக்டர் ரவிராஜ்.

மறுமுனையில் டாக்டர், "ஹாய் கவிநா, எப்படி இருக்க? நான் இன்னிக்கு வீட்டுக்கு வரலாமா?......ஆண்ட்...என்கூட ஒருத்தர் வருவாரு...அவங்க மிஸ் ரதி...youngsters of today பத்திரிக்கையின் ரிப்போட்டர்....உங்கள பத்தி...." என்றவர் முழுவதையும் சொல்லி முடித்தார்.

சற்று யோசனைக்கு பிறகு கவிநா, "வாங்க அங்கிள். நோ problem."

டாக்டர், "how is krrish?இப்ப...பரவாயில்லையா?" என்று வினாவினார்.

12 comments:

Divya said...

Romba nalla irukku Gayathri!

Divya said...

\\"இல்ல பொண்ணுங்க...தான், அவங்க அப்பாவ நல்லா பாத்துப்பாங்க.... girls are really very precious."\\


YES ..........YES........YES!!!!!

Divya said...

\\நமக்கு பெண் குழந்தை பொறுக்கும். நீ என் மேல வச்சுருக்கு காதல் அதிகம்னா பசங்க பொறுக்கும்\\


பொறுக்கும் -> ippadi oru word irukkka ????

Thamizhmaangani said...

@திவ்ஸ்,

நன்றி!

typo error.//பொறுக்கும்//

சரி செய்துவிட்டேன். நன்றிங்கோ.

Thamizhmaangani said...

@திவ்ஸ்

//Romba nalla irukku Gayathri!//

நன்றி திவ்ஸ்:)

ஆதவா said...

எப்படிங்க படங்களை செலக்ட் பண்றீங்க... கதை எழுதி முடிச்சுட்டா... இல்ல படம் செலக்ட் பண்ணினத்துக்கு அப்ப்பறம் கதையா...

நீங்க சொல்லவந்ததைப் பார்த்தா, க்ரிஸ் முன்னமே ஏதாவது (நோய்?) ஒண்ணுக்கு ஆளாகியிருப்பான்னு நினைக்கிறேன்..

நல்லா போகுது.... நடை அருமை!!!

Karthik said...

சூப்பர்ப்...!
:))

டென்ஷன் பில்டப் ஆகுறதுக்குள்ள அடுத்த பார்ட்ட போட்டுடுங்க. :)

Thamizhmaangani said...

@ஆதவா,

//எப்படிங்க படங்களை செலக்ட் பண்றீங்க... கதை எழுதி முடிச்சுட்டா... இல்ல படம் செலக்ட் பண்ணினத்துக்கு அப்ப்பறம் கதையா...//

இப்படி ஒரு கதை எழுதனும்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி யோசிச்சு வச்சுருந்தேன். அப்பரம் 'விண்ணை தாண்டி வருவாயா' பட stillகள் வெளிவந்தன. பார்த்தவுடனே, அட நல்லா இருக்கே...நம்ம கதை கொஞ்சம் மாத்தி இந்த படங்களை போட்டா நல்லா இருக்கும் என்று நினைத்து செஞ்சேன்.:)

Thamizhmaangani said...

@ஆதவா

//நீங்க சொல்லவந்ததைப் பார்த்தா, க்ரிஸ் முன்னமே ஏதாவது (நோய்?) ஒண்ணுக்கு ஆளாகியிருப்பான்னு நினைக்கிறேன்..//

சரியாக சொன்னீங்க!:)

Thamizhmaangani said...

@ஆதவா

//
நல்லா போகுது.... நடை அருமை!!!//

நன்றிங்கோ:)

mvalarpirai said...

நல்லாயிருக்கு story !

சிம்பு நல்ல சாய்ஸ் ! :) (சிம்பு இப்ப பரவாயில்லையா இன்னும் தெளியலையா ? ) just kidding :)

Thamizhmaangani said...

@வளர்

//நல்லாயிருக்கு story !//

நன்றிங்கோ:)