Mar 4, 2009

பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-3

பகுதி 1

பகுதி 2

"வாங்க அங்கிள், வாங்க...." வரவேற்றாள் கவிநா. பின்னாடியே ரிப்போட்டர் ரதி வந்தார். முதன் முறையாக சந்திப்பதால், ரதியும் கவிநாவும் கை குலுக்கி கொண்டனர்.
ஹாலில் கிரீஷ் இருக்கிறானா என்று சுற்றுபுரத்தை ஒரு முறை நன்கு பார்த்தபடி டாக்டர், "என்ன கவிநா...எங்க கிரீஷ்?"

வெளியே சென்றுவந்ததால் களைப்பாக உள்ளதாக சொல்லிவிட்டு உறங்கி கொண்டிருக்கிறான் கிரீஷ் என்ற விஷயத்தை கூறினாள் கவிநா. மூவரும் சோபாவில் உட்கார்ந்தனர்.

"எங்க பத்திரிக்கையில இந்த மாதத்தில ஒரு சிறப்பு கட்டுரை ஒன்னு போடுறோம். வித்தியாசமான தம்பதிகளை பத்தி.... அதான் உங்கள பத்தி எழுதலாமேன்னு வந்தேன்... don't worry kavina, we will keep your real names confidentially."

"உங்கள பத்தி... கிரீஷ பத்தி....?" நேரடியாக கேள்வியை கேட்க ஆரம்பித்தார் ரதி.

"yes... he is suffering from acute schizophrenia disorder." தழுதழுத்த குரலில் கவிநா.

"இது எப்படி.... கேள்விப்படாத ஒரு டிஸார்டர் மாதிரி இருக்கு... ஏன்? என்ன ஆச்சு அவருக்கு?" ரதி தனது பேனாவிற்கும் தாட்களுக்கும் வேலை வைத்தார்.

"இந்த டிஸார்டர் உலக ஜன தொகையில 1% மேல் இருக்கு. அமெரிக்காவுல மட்டும் 2.7 மில்லியன் மக்களுக்கு இந்த டிஸார்டர் இருக்கு. ஏன்... எப்படின்னு சரியான...ஒரு குறிப்பிட்ட காரணம் சொல்ல முடியாது.... மூளையின் பாதிப்பு, சின்ன வயசுல சரியான ஊட்டசத்து இல்லாதது, மனம் உளைச்சல்...இப்படி பல காரணங்கள் இருக்கலாம்..." என்று விளக்கினார் டாக்டர்.

அவர் தொடர்ந்து, " இப்படி உள்ளவங்க....பேசும் முறை, பாணி, சிந்தனை, அதை வெளிபடுத்தும் விதம்...இப்படி நிறைய வகையில பாதிப்பு இருக்கும்.... சில சமயங்களில் ஞாபக மறதி கூட வரும். ரொம்ப நேரத்துக்கு அவங்க அவங்களாவே இருக்க மாட்டாங்க. ஆனா... கொஞ்ச நேரம் கழிச்சு சரியா போயிடும்..."

"ஒரு விஷயம் நடந்த மாதிரி பேசுவாங்க... இன்னிக்கு பாருங்க சண்டே....போஸ்ட்மேன் வந்துட்டு போனான்னு சொன்னார் கிரீஷ்.... திடீரென்னு யாரோ மூளைக்குள்ள வந்த மாதிரி அவங்களிடம் பேசிகிட்டு இருப்பாரு... இன்னிக்குகூட கார்ல போகும்போது அப்படி இருந்தாரு.... கொஞ்சம் பயமாகவும் இருக்கும்...ஆனா பாவமாகவும் இருக்கும்." என்று கவிநா சொல்ல சொல்ல, அவள் கண்கள் சற்றே குளமாகின.

ரதி கேட்டார் இருவரையும் பார்த்து, "அப்போ, இது split personalityன்னு சொல்ல முடியுமா?"

டாக்டர் உடனே பதில் அளித்தார், "இல்ல ரதி, அப்படி சொல்ல முடியாது. split personalityக்கும் schizophrenia disorderக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. schizophrenia disorder patients face a psychotic state. இந்த நிலை மூளையை பெரிதம் பாதிக்கும்.A split personality has nothing to do with schizophrenia, but more with Multiple Personality Syndrome. split personality ஒருத்தரை பல அவதாரங்கள எடுக்க வைக்கும். ஒவ்வொரு அவதாரத்திற்கும் வெவ்வேறு செயல்பாடுகள் இருக்கும்."

"மருந்தால இத குணப்படுத்த முடியுமா டாக்டர்?" ரதி அடுத்த கேள்வியை வீசினார்.

"இதற்கு முழுமையான தீர்வு கிடையாது. ஆனா, பாதிப்பு அளவை குறைக்க முடியும். கிரீஷ்கூட முன்பு ரொம்ப முரட்டுத்தனமா நடந்துப்பான்.... ரொம்ப நேரம் கத்துவேன்....கோபம்கூட ரொம்ப நேரத்துக்கு நீடிக்கும்...now he is under medication. அதனால...இப்ப ரொம்ப மாறிகிட்டு வறான்....am i right, kavina?" கவிநாவை பார்த்தார் டாக்டர்.

"ஆமா அங்கிள், இப்போ கொஞ்ச பெட்டர்..... நீங்க
கொடுத்த மருந்துகளை, சாதாரண vitamin supplement tabletsன்னு சொல்லி கிரீஷ்கிட்ட கொடுத்துட்டு வறேன்...மாற்றம் இருக்கு..." நன்றியுணர்வுடன் கவிநா.

"இப்படி ஒருவரை கல்யாண பண்ணிக்க...." கேள்வியை கேட்கலாமா இல்லை வேண்டாமா என்ற ஒரு தோரணையில் இழுத்தார் ரதி. புரிந்து கொண்ட கவிநா,

"மூனு வருஷ லவ்...எப்படிங்க அப்படியே விட்டுட முடியும்... இந்த ஒரு காரணத்துனால...அவர வேண்டாம்னு சொல்ல எனக்கு மனசு வரல....காலேஜ் முதல் ரெண்டு வருஷம்...he was normal...அதுக்கு அப்பரம் தான் மூணாவது வருஷம் தான் எனக்கு தெரிய வந்துச்சு..."

"தனக்கு இப்படி ஒரு டிஸார்டர் இருக்குன்னு கிரீஷுக்கு...." கேள்வியை ரதி முடிப்பதற்குள்,

கவிநா முடித்தாள்- "கிரீஷுக்கு தெரியாது!"

டாக்டர், "பொதுவா இந்த டிஸார்டர் உள்ளவங்களுக்கு, தான் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறோம்ன்னு தெரியாது...."

அவர் சொல்வதை வேகமாய் தாளில் கிறுக்கினாள் ரதி. "முழு நேரமும் அவர்கூடவே இருக்கனுமே....கஷ்டமா இல்லையா? நீங்க வேலைக்கு போகும்போது எல்லாம்.....எப்படி?"

சிரித்துகொண்டே கவிநா, "that's what makes me love him more and more. அவர்கூட இருக்கறது தான் எனக்கு சந்தோஷம். அவரை முழு நேரம் கவனிக்க வேணும் என்பதால், நான் நைட் ஷிப்ட் வேலை பாக்குறேன். ராத்திரி 9 மணிக்கு எல்லாம் தூங்க வச்சுடுவேன் கிரீஷை...அதுக்கு அப்பரம் தான் வேலைக்கு கிளம்புவேன்."

ரதி, டாக்டர் சொன்னவற்றையும் கவிநா சொன்னவற்றையும் குறிப்பு எடுத்து கொண்டார்.

கவிநா, "கிரீஷுக்கும் வேலைக்கு போகனும்னு ஆசை தான். ஆனா...அவரால மத்தவங்ககிட்ட வேலை பாக்க முடியல. அதான்...freelance photographer இருக்காரு...படம்கூட அழகா வரைவார் கிரீஷ்..." என்றவள் ஹாலின் சுவரில் இருந்த ஒரு அழகான படத்தை காட்டி,

"இது அவர் பண்ணுன work தான்." பெருமிதத்தோடு.

சிறு புன்னகையுடன் ரதி, கவிநாவை பார்த்து, "you are unique indeed."

ரதியின் புன்னகைக்கு பதில் புன்னகை அளித்து சொன்னாள் கவிநா, "that's because, i am not surviving but rather living every moment of life with krrish."

கவிநா சொன்ன வார்த்தைகள் பிடித்துபோய் அதை உன்னிப்பாய் கவனித்து எழுதி கொண்டாள் ரதி.

"ரொம்ப நன்றி டாக்டர்....ரொம்ப நன்றி கவிநா. ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள பாத்ததில்... " கவிநாவும் ரதியும் கைகுலுக்கி கொண்டனர். ரதி விடைபெற்று கொண்டாள். டாக்டர் கிளம்பும் முன்,

"கிரீஷ பாத்துக்கோ.... மாற்றம் தெரிஞ்சாலும்...ஜாக்கிரதையா இரு கவிநா..எந்த ஒரு major relapse வராம பாத்துக்கோ...ஏதாவுதுன்னா...எனக்கு உடனே call பண்ணு." அக்கறையுடன் சொன்னார்.

இரவு வேலைக்கு கிளம்பும் நேரம் வந்தது. கவிநா ஆபிஸுக்கு கிளம்பும்முன், கிரீஷ் உறங்கி கொண்டு தான் இருக்கிறானா என்பதை ஒரு முறை அறை கதவை திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டாள்.

ஆபிஸை வந்து அடைந்த நேரம் 945 pm. அன்று வேலை அதிகம் இல்லை. தினம் பார்க்க வேண்டிய ரிப்போர்ட்டுகளை பார்த்து கொண்டிருந்தாள், கைபேசி மணி ஒலித்தது.

மறுமுனையில் கிரீஷ்,

"கவிநாஆஆஆஆஆஆ!!!" அலறினான்.

(பகுதி 4)

12 comments:

Karthik said...

wow, this part is really nice.
:)

cant hang on suspence for a long. next part please.

mvalarpirai said...

"கவிநா " பெயர் அருமை ! கிரிஷ்க்கு சங்கீதாவோட கல்யாணம் ஆயிருச்சுருங்க பொறாமையில disorder நாயகனுக்கு அவரு பேரை வச்சீட்டிங்க போல !

இந்த பகுதியின் endla ஒரு சீரியல் டஸ் இருக்கு ! தொடருங்க !

FunScribbler said...

@karthik

கொஞ்சம் வேட் பண்ணுங்க.. அடுத்த பகுதி வந்துகிட்ட்ட்டே இருக்கு...

FunScribbler said...

@valar

//"கவிநா " பெயர் அருமை//

நன்றி.

//கிரிஷ்க்கு சங்கீதாவோட கல்யாணம் ஆயிருச்சுருங்க பொறாமையில//

கிரிஷ பிடிக்கும்... ஆனா பொறாமை எல்லாம் கிடையாது! கிரிஷுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்!!:)

//இந்த பகுதியின் endla ஒரு சீரியல் டஸ் இருக்கு //

பின்ன இருக்காதா...10000 சீரியல பாக்குறோம். இதகூட சரியா செய்ய முடியலைன்னா...எப்படி!:)

Divya said...

Intha part attagasama eluthirukireenga tamilmangani:))

Hats off:))

Keep going.........waiting for the next part!

Divyapriya said...

கேள்விப்படாத வித்தாயசமான வியாதி மட்டும் இல்லை, கதையும் அப்படி தான் இருக்கு...இது வரைக்கும் படிக்காத வித்யாசமான கதையா இருக்கு...

"உழவன்" "Uzhavan" said...

ஐயோ.. கிரீஸ் பாக்குறதுக்கு சிம்பு மாதிரியிருப்பாரோ?? அதனல தான் பாவம் இப்படி... :-)

கதை போகிற விதம் நல்லாயிக்குங்க.. வாழ்த்துக்கள்!

முடிந்தால் விகடன்ல வந்த என் இந்த கவிதையை படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க :-)

http://youthful.vikatan.com/youth/uzhavanpoem030309.asp


அன்புடன்,
உழவன்

FunScribbler said...

@திவ்ஸ்,

//Intha part attagasama eluthirukireenga tamilmangani:))//

நன்றி திவ்ஸ்:)

FunScribbler said...

@திவ்யாபிரியா

//கதையும் அப்படி தான் இருக்கு...இது வரைக்கும் படிக்காத வித்யாசமான கதையா இருக்கு//

நிஜமாவா! நன்றி உங்களது ஆதரவுக்கும் பாராட்டுக்கும்!:)

FunScribbler said...

@உழவன்

//ஐயோ.. கிரீஸ் பாக்குறதுக்கு சிம்பு மாதிரியிருப்பாரோ//

ம்ம்...பாடகர் கிரீஸ் சிம்புவைவிட கொஞ்சம் அழகு கம்மி தான்:)

தமிழன்-கறுப்பி... said...

\\
"that's because, i am not surviving but rather living every moment of life with krrish."
\\

அப்படின்னா என்ன?

FunScribbler said...

@தமிழன் - கறுப்பி

//\\
"that's because, i am not surviving but rather living every moment of life with krrish."
\\

அப்படின்னா என்ன?//

நம்ம நிறைய வாழ்க்கையில பிழைச்சுகிட்டு இருக்கோம், வாழாம. அதான் கவிநா சொல்லுறா...அவ மத்தவங்க மாதிரி பிழைச்சுகிட்டு இல்ல, கிரீஷ் இருக்குறதால, வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு. :)