Mar 26, 2009

நானும் இசையும்

indian classical keyboard கற்று கொண்டு 3 மாதங்கள் ஆகிவிட்டன(அதற்கு முன்னால் western கற்று கொண்டிருந்தேன்..) இந்த 3 மாதங்களில் ரொம்ப முன்னேற்றம் அடைந்துவிட்டேன் என்றே சொல்லவேண்டும். அதற்கு காரணம் சொல்லி கொடுக்கும் குரு. நன்றி குருவே!:)

இந்த மே மாதம் 1st grade பரிட்சை எழுதலாம் என்றார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 3 மாதங்களில் இப்படி ஒரு வாய்ப்பு! இன்று என்னொரு சந்தோஷமான செய்தியும் சொன்னார். ஆக்ஸ்ட் மாதம் எனக்கு கச்சேரியில் வாசிக்க வாய்ப்பு தரப்படும் என்றார். அதற்கு 'முகுந்தா முகுந்தா' பாடலை கற்று கொடுத்தார். வகுப்பில் அவர் சொல்லி கொடுப்பதை தவிர்த்து, நானே இணையத்தில் பாடல்களின் keyboard notesகளை தேடி, வாசித்து பார்ப்பேன். அப்படி வாசிக்க கற்று கொண்டதுதான்... வசீகரா பாடல்.



அப்பரம் 'நெஞ்சுக்குள் பெய்திடும்...' பாடலும் ஓரளவுக்கு முயற்சி செய்திருக்கிறேன்.

6 comments:

Divyapriya said...

vaseegara s good...

FunScribbler said...

@தேவிபிரியா

நன்றி:)

Karthik said...

i heard vaseegara, the other day, in facebook. it was really nice. will hear nenjukkul later and comment.

keep rocking. :)

FunScribbler said...

@கார்த்திக்

thanks for your encouragement.:)

mvalarpirai said...

நல்லாயிருக்கு தமிழ்...

ஆமா இத்த ..ரண்டு கையில வாசிக்க மாட்டாங்க ... :)
(வசூல் ராஜா வில் ஸ்டதஸ் கோப்பை காதில் வச்சு கேட்பாங்கனு கமல் சொல்லுவாரே ..அந்த மாதிரி படிங்க )

பி.கு : நமக்கு சங்கீதத்திற்கும் ரொம்ப தூரம்ங்க.....ஞானசூனியம்னு திட்டாதிங்க ..:)

FunScribbler said...

@வளர்

//ஆமா இத்த ..ரண்டு கையில வாசிக்க மாட்டாங்க ... :)//

அதுக்கு பெயரு left hand chords. ஒத்த கையினால வாசிக்கவே, ரொம்ம்ப கஷ்டமா இருக்கு எனக்கு. ரெண்டு கையினால வாசிப்பது கொஞ்ச கஷ்டம் என்னைய பொருத்தவரை. அதுக்கு இன்னும் கொஞ்ச நாளாகும். நான் மட்டும் இப்ப இரண்டு கையினால வாசிச்சேன், அப்பரம் வசீகரா... டப்பாங்குத்து பாட்டு மாதிரி வந்தாலும் வந்துடும்! அந்த பாவம் எனக்கும் வேண்டாம்ய்யா!!