Mar 23, 2009

கொஞ்ச நாள் பொறு தலைவா-4

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

ஃபோன் செய்து பார்த்தேன். அவள் எடுக்கவில்லை. புரிந்துவிட்டது! 6 மாதம் முடிய இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது. அதற்குள்ளே நான் ரொம்ப அவசரப்பட்டுவிட்டேன். அவளை சமாதானப்படுத்த என்ன செய்வது என்று புரியவில்லை. பக்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த நண்பனிடம்,

"மச்சான்.... பொண்டாட்டி கோபப்பட்டால்... அவள எப்படி சமாதானம் படுத்துவது?"

நண்பன், "அடுத்த தெரு அண்ணாச்சியா இருந்தா, மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு போ. அனில் அம்பானினா, helicopterரோ விமானமோ வாங்கிட்டு போ. நீ எந்த வகை மச்சான்." என்றான் அவன். நேற்று அவன் அடித்த போதை இன்னும் இறங்கவில்லை என்பது அவன் பேச்சிலிருந்தே தெரிந்தது. மாலை 6 ஆகிவிட்டது. வீட்டிற்கு போக பயமாகவும் இருந்தது, அதே சமயம் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனம் வேண்டியது.

வீட்டிற்குள் நுழைந்தேன். அவள் துணிகளை iron செய்து கொண்டிருந்தாள். நான் எதுவும் பேசவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. என் பையை மேசையில் வைத்துவிட்டு, balconyயில் உள்ள சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தேன். தலையில் கைவைத்து யோசித்து கொண்டிருந்தபோது, ஒரு உருவம் என் அருகே வந்தது. அது நித்யா தான்!

அவளது கைகளால் என் முகத்தை திருப்பி, அவள் உதடுகளை என் முகம் அருகே கொண்டு வந்தாள். ஒரு வினாடி அவள் என் கண்களை பார்த்தாள். மறுநொடி, அவள் 'இச்' என்று ஒரு முத்தம் வைத்தாள் என் உதடுகளில்.

"sorry for the late reply" என்று கண்களை சிமிட்டினாள். அவளை என் மடியில் உட்கார வைத்தேன்.

"நீ கோபமா இருப்பீயோன்னு நினைச்சேன்... ரொம்மப கவலையா போச்சு நித்ஸ்.." என்றேன்.

அவள் வசீகர சிரிப்பை வீசி, "கோபமா?... இதுக்கா? கேட்குறது உன் உரிமை, கொடுக்குறது என் உரிமை. கொஞ்ச சஸ்பென்ஸா இருக்கட்டும்னு தான் ஒன்னுமே பதில் அனுப்பல..." அவள் விரல்கள் என் தலைமுடியோடு விளையாடின.

"ம்ம்... நல்ல பேச கத்துக்கிட்ட நித்ஸ்." என்றேன் நான்.

"பின்ன... உன்கூட 6 மாசம் குப்ப கொட்டி இருக்கேன். இதகூட கத்துக்கலன்னா எப்படி?" அவள் மறுபடியும் சிரித்தாள்.

"ஏய் நித்ஸ்... நம்ம போட்டோமே 6 மாசம் கண்டிஷன்.... அது 6 மாசமா... நல்ல யோச்சி பாரு... 5 மாசம் 29 நாள் சொன்ன மாதிரி ஞாபகம்."

"ஏய்.. ஜொள்ளா....nothing doing. 6 மாதம் முடிய இன்னும் ஒரு நாள் தானே இருக்கு. அதுக்குள்ள என்ன... நம்ம இதுவரைக்கும் சந்தோஷமா வாழ்ந்த வாழ்க்கைக்கு இன்னொரு முழுமையான அர்த்தம் கிடைக்கபோகுது... அதனால நாளைக்கு காலையில கோயில் போயிட்டு வந்துடுவோம். ஓகேவா?" என் கன்னத்தை கிள்ளினாள்.
--------------------------------------------------------------------------

தரிசனம் முடித்துவிட்டு கோயிலில் சிறிது நேரம் உட்கார்ந்தோம்.

"நித்ஸ், சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?" ராகேஷ் கேட்டான் என்னிடம்.

"எத்தன ஜன்மம் எடுத்தாலும்... நீ தான் எனக்கு கணவனா வரனும்னு வேண்டிகிட்டேன்." என்று பதில் அளித்தேன்.

"நீ என்ன வேண்டிகிட்ட?" நான் கேட்டேன்.

அதற்கு ராகேஷ், "நீ வேண்டி கேட்டதற்கு எதாச்சு பரிகாரம் இருக்கனும்னு வேண்டிக்கிட்டேன்." அவன் சிரித்தான்.

"ஏய்.. உத வாங்குவே." என்ற நான், அவன் நெற்றியில் இட்டிருந்த திருநீரை சரிப்படுத்தினேன். திடீரென்று என் கைவிரல்களை பிடித்து முத்தம் கொடுத்துவிட்டான்.

"oh my god, என்ன செய்யுற ராகேஷ். இது பொது இடம்." நான் முறைத்தேன்.

"என்ன மா...... நீ தானே சொன்னே, இன்னிக்கு நமக்கு ஒரு புது அர்த்தம் கிடைக்கபோகுது. அதுக்கு கடவுள்கிட்ட வேண்டிக்கனும்னு. அதான் இப்ப புள்ளையார் சுழி போட்டேன். தப்பா?" என்று கூறினான் குழந்தைபோல் முகபாவனை செய்து. அவனின் சாமர்த்தியமான பதில் என்னை சிரிக்க வைத்தது. கொஞ்சம் வெட்கப்பட வைத்தது. வீட்டிற்கு திரும்பும் வேளையில் என் மேனேஜர் ஃபோன் செய்தார்.

"சார்... முடியாது...சாரி... இன்னிக்கு என்னால போக முடியாது." அவரிடம் 1 மணி நேரம் வாதிட்டேன்.

"என்ன ஆச்சு மா?" ராகேஷ் கேட்தற்கு,

" ராக்ஸ், மேனேஜர் திடீரென்னு ஒரு வேலை கொடுத்துட்டாரு. ஒரு conference. அதுக்கு இன்னொரு டீம் லீடர் தான் போகனும். அவங்கனால போக முடியல கடைசி நேரத்துல. அதனால என்னை போக சொல்றாரு. 4 நாலு பெங்களூர்ல...இன்னிக்கு மதியமே கிளம்பனும்."

மிகவும் எதிர்பார்த்த பாகிஸ்தான் - இந்தியா கிரிக்கெட் போட்டி மழையினால் ஒத்திவைப்பு என்று சொல்லும்போது ஒரு ஏமாற்றம் வருமே, அதே ஏமாற்றத்தை கண்டேன் ராகேஷ் முகத்தில்.

"சாரி டா.... மேனேஜர் ரொம்ப insist பண்றாரு... நான் போய் தான் ஆகனும். சாரி ராக்ஸ்...." நான் அவன் கன்னத்தில் கைவைத்து கெஞ்சினேன்.

"பரவாயில்ல நித்ஸ். போயிட்டு வா....நீ என்ன பண்ணுவ... ஆபிஸ் நிலைமை அப்படி. நாலு நாள் தானே... it's ok." அவன் புன்னகையித்தான். இந்நிலைமையிலும் அவன் என்னை புரிந்து கொண்டது அவன் மேல் உள்ள காதலை அதிகப்படுத்தியது.

call taxi வந்து நின்றது வீட்டருகே. டிரைவர் சிகரெட் பிடிக்க கொஞ்ச தூரம் தள்ளி சென்றான். என் பெட்டிகளை வண்டியினுள் வைத்தான் ராகேஷ். அவனை பார்த்து நான், "ராக்ஸ்... ஒன்னு சொல்லட்டா...."

அவன் ஆவலாய் என் பதிலுக்காக காத்திருந்தது அவன் கண்களில் தெரிந்தது.

"ஐ லவ் யூ ராகேஷ்." என்றேன்.

"மீ டூ.... i am really going to miss you lots." என்றவன் என் கன்னம் அருகே வந்தான் ஏதோ ஒன்றை கொடுக்க. அச்சமயம் டிரைவர் சீட்டில் கிடந்த செல்போன் ரிங்டோன் பாடியது

"கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி இங்க வருவா கண்ணிரெண்டில் போர் தொடுப்பா அந்த வெண்ணிலவைத் தோற்கடிப்பா".

எங்களது சூழ்நிலையை படம்பிடித்து காட்டிய செல்போன்னை பார்த்து நாங்கள் சிரித்தோம்.

*முற்றும்*

15 comments:

mvalarpirai said...

என்னைங்க இப்படி பொசுக்குனு முடிச்சுபுட்டீங்க ! :) :)

நல்ல இளமையான் கதை கலக்கீரீங்க!

புதியவன் said...

//"அடுத்த தெரு அண்ணாச்சியா இருந்தா, மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு போ. அனில் அம்பானினா, helicopterரோ விமானமோ வாங்கிட்டு போ. நீ எந்த வகை மச்சான்."//

ஹா...கலக்கல் ஐடியா...

Revathyrkrishnan said...

//"நீ வேண்டி கேட்டதற்கு எதாச்சு பரிகாரம் இருக்கனும்னு வேண்டிக்கிட்டேன்." //

ராகேஷோட நகைச்சுவை உணர்வு அருமை:))) இயல்பா இருக்கு உரையாடல்கள்

//"sorry for the late reply" //
highly romantic gaayu...

FunScribbler said...

@வளர்

//என்னைங்க இப்படி பொசுக்குனு முடிச்சுபுட்டீங்க ! :) :)//

ஹாஹா... இதுக்கு மேல போனுச்சுன்னா உலகம் தாங்காதுங்க:)

//நல்ல இளமையான் கதை கலக்கீரீங்க!//

நன்றி வளர்:)

FunScribbler said...

@புதியவன்

//ஹா...கலக்கல் ஐடியா...//

நன்றி:)

FunScribbler said...

@ரீனா

////"sorry for the late reply" //
highly romantic gaayu...//

ஹாஹா... நன்றிங்கோ உங்களது ஆதரவுக்கு:)

sakthi said...

மரியாதையா ஓட்டு போட்டு போங்க
kandipa

sakthi said...

nice story ma

sakthi said...

"அடுத்த தெரு அண்ணாச்சியா இருந்தா, மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு போ. அனில் அம்பானினா, helicopterரோ விமானமோ வாங்கிட்டு போ. நீ எந்த வகை மச்சான்."//

ஹா...கலக்கல் ஐடியா...

nice idea too

Karthik said...

this is the best part, i feel. really nice! :))

//"அடுத்த தெரு அண்ணாச்சியா இருந்தா, மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு போ. அனில் அம்பானினா, helicopterரோ விமானமோ வாங்கிட்டு போ. நீ எந்த வகை மச்சான்."

ha..ha. :)

FunScribbler said...

@sakthi

//nice story ma//

நன்றி சக்தி!:)

நவீன் ப்ரகாஷ் said...

கலக்கலான கதை காயத்ரி... இப்போதான் எல்லா பாகங்களைபும் படிச்சேன்...
வாவ்வ்வ்வ்வ்..... என்னா ஒரு flow...!!! என்னா ஒரு ரொமான்ஸ்...!! சான்ஸே இல்லை....!!

நவீன் ப்ரகாஷ் said...

கதையிலே எந்த ஒரு இடத்திலயும் தொய்வே இல்லாம... இரண்டே இரண்டு காரெட்டர்களை வச்சுகிட்டு... அதுவும் ரெண்டு பேர் பார்வையிலே கதையை நகர்த்தியிருக்கிறது மிகவும் அழகா... அருமையா இருக்கு..!!

மிகவும் ரசித்த கதையிது காயத்ரி...!! :)))

வாழ்த்துக்கள்...!!

Divya said...

Google readerla post padikirathala ingey blog la vanthu comments poda maranthutein Gayathri, sorry:((

இந்த தொடர்......சூப்பர்ப்:))

டயலாக்ஸ் எல்லாமே அல்டிமேட்!!!

ரொம்ப ரொம்ப......நல்லாயிருக்கு:))

வாழ்த்துக்கள் காயத்ரி!!

FunScribbler said...

@நவீன், திவ்ஸ்

வாழ்த்துகளுக்கு நன்றி:)