காரில், தினமும் காலையில் அம்மாவை அவர் வேலை இடத்தில் விடுவேன். அதற்கு அப்பரம் தான் கல்லூரிக்கு செல்வேன். நேற்று வழக்கம்போல் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் எந்த ஒரு indicatorரையும் போடாமல் திடீரென்று என் கார் சென்று கொண்டிருந்த laneக்குள் நுழைந்தது. ஒரு நொடி கவனமாக இல்லை என்றால், இரு வண்டியும் சுக்குநூறாகி இருக்கும்.
வந்த கோபத்தில், 20 வினாடிகள் தொடர்ந்து 'horn' அடித்தேன். ஒரே சத்தம்! பக்கத்து தடத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் எல்லாம் பயந்துவிட்டனர். பக்கத்தில் அமர்ந்திருந்த என் அம்மா, "பொறுமையா போ. ஹார்ன் அடிக்காதே."
நான்: நான் பொறுமையா போனுமா? முன்னாடி போறானே அவன்கிட்ட போய் சொல்லுங்க.
அம்மா: சரி விடு.... ஏதோ பழமொழி சொல்வாங்களே...என்ன அது...ஆஆ...நாய் குரைச்சா திருப்பி குரைக்ககூடாது....
நான்: நாய் குரைச்சா பரவாயில்ல? கடிச்சா? நம்மள கடிக்க வந்தா....?
அம்மாவிடமிருந்து பதில் இல்லை.
நான்: சொல்லுங்கம்மா....கடிக்க வந்தா என்ன பண்ணுவீங்க?
அம்மா: கம்ப எடுத்துகிட்டு போய் அடிக்க போவேன்.
நான்: ஹாஹா...அப்ப மட்டும் பொறுமை தேவையில்லையா?
அம்மா என்னை பார்த்து முறைத்தார். "இந்த புள்ளக்கிட்ட பேசி வெல்ல முடியாது!" என்பதே அவரின் முறைப்புக்கு அர்த்தம் :) ஹிஹிஹி....
16 comments:
காலேஜ்க்கே கார்லே போரீங்க ! பெரிய இடத்து பிள்ளை போல !
நாய் கொஞ்சம் சின்னதா இருந்த கம்பு எடுத்து அடிக்கலாம்..அல்சேசனா கணக்கா ஆள் உசரத்துக்கு இருந்துனு வைச்சுகங்க .பின்னாகல் பிடரி அடுச்சு ஒடுற மான் கராத்தே தான் best -னு நினைக்கிறேன் ! என்ன சொல்றீங்க !
( Horn மேட்டரை விட்டுட்டு நாய் மேட்டருக்கு மட்டும் இந்த comment ! )
@வளர்
//காலேஜ்க்கே கார்லே போரீங்க ! பெரிய இடத்து பிள்ளை போல !//
அப்படியலாம் ஒன்னும் இல்லேங்க. கார் குடும்ப தேவைகளுக்கு தான் வாங்கினது. ஆனால், என் காலேஜ் ரொம்ம்ப தூரம். அதனால் தான் இப்படி!:)
//அல்சேசனா கணக்கா ஆள் உசரத்துக்கு//
ஹாஹா...அப்ப விடு ஜூட்!!!
அடுத்த டிராக் மாறி நீங்க அந்த காரை சேஸ் பண்ணி ஒரு கட் அடிச்சு வெண்ணெய் எங்களுக்கும் இது எல்லாம் தெரியும், அடக்கி வாசி னு காட்டுங்க அடுத்த தடவை. ஆனால் கவனமா பண்ணனும். என்ன பண்ணினாலும் வண்டி உங்க கட்டுபாடு ல இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே.
என்ன சொல்ல வருகிறீர்கள் மாங்கனி? பொறுமை வேணுமா வேண்டாமா?
உங்களுக்கு எந்த ஊருனு தெரியல? சென்னைக்கு வாங்க; இங்க வந்து வண்டி ஓட்டுங்க..தானாக பொறுமை வந்துவிடும். :-)
ஹலோ காயூ...
இது இரண்டாவது முறை... இனியொரு பதிவு இதுபோன்று வேண்டாமென்று பிரார்த்திக்கிறேன்.
பொறுமை பொறுமை பொறுமை...
(இது அவனுக்கும் சேத்துதான்:)
சென்னையில் மட்டுமல்ல இங்கும் எல்லாப் பக்கமும் மிகுந்ந்தகவனத்துடனே செல்லவும்... அதிலும் குறிப்பாக காலை நேரம், விரைவுச்சாலையில் எல்லாருக்குமே அவசரம்:(
@அன்பு
//இது இரண்டாவது முறை... இனியொரு பதிவு இதுபோன்று வேண்டாமென்று பிரார்த்திக்கிறேன்//
என் கையில் இல்ல இது, மற்ற கார் ஓட்டுனர் கையிலும் காலிலும் உள்ளது! :)
@உழவன்
//சென்னைக்கு வாங்க; இங்க வந்து வண்டி ஓட்டுங்க//
சென்னை போக்குவரத்தை பார்த்து இருக்கிறேன். அங்க இங்க ஓட்டுவது... நேரிசலில் வண்டியை நகர்த்து மட்டுமே முடியும்:)
@நாகை சிவா
//அந்த காரை சேஸ் பண்ணி ஒரு கட் அடிச்சு வெண்ணெய் எங்களுக்கும் இது எல்லாம் தெரியும்//
அம்மா பக்கத்தில் இருந்தால் இந்த சாகசம் எல்லாம் செய்ய முடியாது. அப்பரம் இரவு டிபன் கட் ஆயிடும்!:)
//அம்மா பக்கத்தில் இருந்தால் இந்த சாகசம் எல்லாம் செய்ய முடியாது. //
இது நியாயமான பாயிண்ட்...
//அப்பரம் இரவு டிபன் கட் ஆயிடும்!:)//
ஆனா இது என்ன எல்லாம் ஒரு மேட்டரா? ஒரு வேளை உணவு தானே போன போகுதுனு விட வேண்டியது தானே! (உணவா உணர்வா??) (இது மாதிரி ஏத்தி விட உங்கள மாதிரி ஒருத்தர் இருந்தா போதும் நான் முன்னேறினாப்பல தான் என்று சொல்லுறது இங்க கேட்குது ;))
@நாகை சிவா
//உணவா உணர்வா??) //
உணவு தான்!!:)
:)))))))))))))))))))))
stay this way.
Dropping mom to work.. intha kaalathil ippadi oru pillaya... kan kalanguthu... he he... Romba practicalaga irukkureengal... unavu endu sonnathukku...
இவ்வளவு பேசியுமா உங்களுக்கு கார் தராங்கா??
@புவனேஷ்
//இவ்வளவு பேசியுமா உங்களுக்கு கார் தராங்கா??//
ஏங்க, நீங்களே வீட்டுல சொல்லிடுவீங்க போல..ஹிஹி.:)
Post a Comment