பகுதி 1
பகுதி 2
"என்ன ராகேஷ் இது... தேவையில்லாம என்னனெம்மோ பேசுறே." அவள் குரலில் சோகம் தலைதூக்கியது.
"ஓ ஓஹோ... நான் பேசுறது உனக்கு தேவையில்லாத மாதிரி தெரியுதா... தேவையில்லாதத பேச நான் என்ன பைத்தியமா?" கையில் இருந்த ரிமோட் controlலை பக்கத்தில் இருந்த காபி மேசையில் போட்டேன்.
நான் பேச பேச, அவள் அமைதியாக இருந்தாள்.
"இந்த பொண்ணுங்களே இப்படி தான்....ச்சே.." நான் சலித்து கொண்டேன்.
"இப்ப ஏன் எல்லாம் பொண்ணுங்கள இழுக்குற? உனக்கு என் மேல மட்டும் தானே கோபம்.. அதுக்கு ஏன் எல்லாரையும் நீ தப்பா பேசுற." அவள் அமைதியாக கூறினாள்.
"ஓ இவங்க பெரிய மகளிர் சங்க தலைவி. பொண்ணுங்கள பத்தி சொன்னவுடனே... கோபம் வந்துடுச்சோ.... நீங்க மட்டும் பொதுவா பேசலாம்...stereotyping girls அது இதுன்னு..... நாங்க பேசுனா மட்டும் தப்பா?"
நித்யாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவள் கண்கள் குளமாகியதை கண்டேன். இரவு 1030 மணிக்கு ஆரம்பித்த சண்டை 12 மணி வரைக்கும் நீடித்தது. கை கடிகாரத்தை பார்த்தேன் மணி 12.01 என்று காட்டியது. உடனே நான்,
"ஹாஹா..... happy april fools' day!" என்று வாய்விட்டு சத்தம் போட்டு சிரித்தேன்.
"what!" நித்யாவுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. நான் சும்மா தான் அவளிடம் சண்டை போட்டேன், உண்மையான கோபம் ஒன்றுமில்லை, எப்படி அவளை april fools' day அன்று ஏமாற்றுவது என்று தெரியவில்லை, அவளாகவே மாட்டி கொண்டாள் என்ற முழுவிவரத்தையும் சொன்ன பிறகு நித்யா,
"you idiot!" சோபாவில் இருந்த cushion pillowவை எடுத்து என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.
"நான் உண்மையாவே பயந்துட்டேன் தெரியுமா... ப்ளீஸ்.. இனிமேலு இப்படி பண்ணாத...i got a shock out of my life." அவள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் பேசினாள்.
"மேடம் மட்டும், பாக்ஸிங்.. அப்படின்னு என்னைய கலாய்க்கலாம்... நாங்க பண்ணகூடாதா?" என்றேன் நான்.
அவளுக்குரிய அந்த வசீகர சிரிப்பைச் சிரித்தாள்.
-----------------------------------------------------------------------------------
நாட்கள் வாரங்கள் ஆயின. வாரங்கள் மாதங்கள் ஆயின. ராகேஷுக்கு செல்ல பெயர் வைத்து கூப்பிட்டேன்- ராக்ஸ். அவனும் எனக்கு செல்ல பெயர் வைத்தான் - நித்ஸ். அவனது காலேஜ் புகைப்படங்களை ஒரு நாள் புரட்டி பார்த்து கொண்டிருந்தேன். பார்த்தபடியே அவனிடம் கேட்டேன்,
"ராக்ஸ், இந்த வீக்கெண்ட் எங்கயாச்சு outing போவோமா... நம்ம ஃபிரண்ஸ் எல்லாரையும் அழைச்சுகிட்டு. how about shirvas resort. பக்கத்துலே கடற்கரை. ஒரு நாள் தங்கியிருந்து வரலாம். it will be great you know."
"நித்ஸ், great idea." உற்சாகம் அடைந்தான் ராகேஷ்.
"ஏய்... அது என்ன எல்லா காலேஜ் போட்டோஸ்ல பொண்ணுங்க கூடவே நிறைய படம் எடுத்து வச்சுயிருக்கே... என்ன மன்மதன்னு நினைப்போ?" நான் சிரித்துகொண்டே அடுத்த படத்தை பார்த்தேன்.
"அப்படியலாம் ஒன்னுமில்ல... சும்மா தான்... என் கிளாஸ்ல அப்போ கொஞ்ச பேரு தான் பசங்க. மத்தவங்க எல்லாம் பொண்ணுங்க தான்..." ராகேஷ் பதில் அளித்தான்.
"ஓ really... சரி எல்லாரையும் கூப்பிடு... நிறைய பேரு வந்தா தான் அவுட்டிங் ஜாலியா இருக்கும்."
"பெண் தோழிகளுமா? உனக்கு ஒன்னும்....objection இல்லயா?" அவன் தயக்கத்துடன் கேட்டேன். பொதுவாக மனைவிகள் தங்களது கணவனுக்கு பெண் தோழிகள் இருப்பது பிடிக்காது. அது அவர்களின் விருப்பம். ஆனால், என்னை பொருத்தவரை, அப்படி பாகுபாடு எல்லாம் கிடையாது. நட்புக்கு எந்த ஆண் பெண் வேதமும் கிடையாது.
"உனக்கு ஃபிரண்ஸ்ன்னா... எனக்கும் அவங்க தோழிகள் தானே.. இதுல என்ன objection.....அது மட்டும் இல்ல.... அவங்ககிட்ட உன் வண்டவாளம் எந்த தண்டவாளம் வரைக்கும் போனுச்சு பத்தி எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கலாம் பாரு"
ராகேஷ் சிரித்துகொண்டே, " அப்படியலாம் நான் இல்ல... நான் ரொம்ம்ம்ப நல்ல பையன். பொத்திவச்ச மல்லிகை மொட்டு மாதிரி நான்.... வானத்தகூட அனாந்து பாக்க மாட்டோன். காலேஜ் முடிஞ்சா.... வீடு..." என்று அப்பாவியாய் முகத்தை வைத்து பேசியது எனக்கு சிரிப்பை வரவழைத்தது.
அவன் தொடர்ந்தான், " நீயும் உன் ஆண் நண்பர்களை கூப்பிடு... அவங்ககிட்டயும் நான் உன் தண்டவாள கதை பத்தி கேக்கனும்."
நான்," அதுக்கு சான்ஸே இல்ல... நான் படிச்சது எல்லாம் பெண்கள் பள்ளிகூடம், காலேஜ் தான்."
ராகேஷ் பதிலாய், "அதுக்கு என்ன... அவங்கிட்டயும் கேக்கலாமே.... இப்பலாம் அதான் நித்ஸ் இன்னும் interestingஆ இருக்கும்... fire படம் பார்த்ததுல?"
"அட ச்சி...naughty ராக்ஸ்"
----------------------------------------------------------------------------------
எனது தோழிகளையும் அவள் நண்பர்களாய் பார்க்கும் மனபக்குவம் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. எல்லாரும் காதல் செய்து கல்யாணம் செய்து கொள்வார்கள். நாங்கள் கல்யாணம் முடிந்து பிறகு தான் காதலர்களாகவே மாறினோம்.
ஒரு வெள்ளிக்கிழமை காலை அன்று ஆபிஸ் கிளம்பும்போது, நான் பரபரப்பாக ஒரு முக்கியமான presentationக்காக தயார் செய்து கொண்டிருந்தேன். கொஞ்ச டென்ஷனாகவும் இருந்தது. எல்லாவற்றையும் எடுத்து கொண்டோமா என்று என் ஆபிஸ் பையை பலமுறை சரி பார்த்தேன். என் நிலையை அறிந்தவள் என் அருகே வந்து,
"என்ன ஆச்சு ராக்ஸ், are you alright?" என்றாள்.
"i am ok. நான் சொன்னேன்ல, இன்னிக்கு ஆபிஸ்ல ஒரு important presentation... அதான் கொஞ்ச டென்ஷன்." வார்த்தைகள் நடனமாடின.
"ராக்ஸ்... don't worry. all the best." என் நெற்றியில் முத்தமிட்டாள் நித்யா.
என் மனைவி எனக்கு கொடுத்த முதல் முத்தம். நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் இந்த நேரத்தில். என் உயிர்நாடி ஒரு நிமிடம் சொர்க்கத்திற்கு சென்று வந்தது போல் இருந்தது. அவள் சொன்ன வார்த்தையும் , அவள் கொடுத்த முத்தமும் , என்னை presentation meeting போது அதிக உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. பேசி முடித்தபின் எல்லாரும் என்னை பாராட்டினர்.
மதிய உணவு இடைவேளை போது அவளுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினேன்.
'ஏய் நித்ஸ், இன்னிக்கு presentation சூப்பரா பண்ணிட்டேன்."
நான் அனுப்பிய பதில் குறுந்தகவல் அனுப்பினாள், "நான் தான் சொன்னேன்ல, உன்னால நிச்சயம் நல்லா பண்ண முடியும்னு. வாழ்த்துகள்."
அடுத்த குறுந்தகவலை ஏன் அப்படி அனுப்பினேன் என்று தெரியவில்லை, மனம் துடித்தது. அது விரல்களுக்கு தெரிந்துவிட்டது. என் மூளையிடம் கேட்பதற்குள் குறுந்தகவலை அனுப்பிவிட்டது என் விரல்கள்.
'நித்ஸ், நீ காலையில ஒன்னு கொடுத்தியே... i wish i could get one on my lips right now. :)'
எப்போதுமே உடனுக்குடன் பதில் அனுப்பும் நித்யா இதற்கு பிறகு அனுப்பவில்லை. அவசரப்பட்டுவிட்டோமோ என்று மனம் பந்தாடியது. ஒரு சாரி குறுந்தகவலை அனுப்பி பார்ப்போமா என்று மூளை கேட்ட கேள்விக்கு மனம் அளித்த பதில்- 'நீ எதுக்கு சாரி கேட்கனும். அவளாவே தான் வந்து கொடுத்தா, அதுக்கு அப்பரம் தானே என்னைய இப்படி நினைக்க வச்சே. அவ சும்மா இருந்திருந்தா, நீயும் சும்மா இருந்திருப்பே. உன் மேல தப்பு இல்ல. நான் சொல்றது சரியான்னு என் ஃபிரண்ட் ஈகோகிட்ட கேட்டு பாரு'
குழப்பமாக இருந்தது எனக்கு. அவளுக்கு ஃபோன் செய்ய முடிவெடுத்தேன்.....
(பகுதி 4)
8 comments:
"April Fool" - நல்ல trick . இப்ப கதை more Intersting ..அடுத்த பகுதி romance தானு நினைக்கிறேன் ! பார்ப்போம்
//"நான் உண்மையாவே பயந்துட்டேன் தெரியுமா... ப்ளீஸ்.. இனிமேலு இப்படி பண்ணாத...i got a shock out of my life." அவள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் பேசினாள்.//
எங்களுக்கும் அதிர்ச்சியாத்தான் இருக்குது...
ஹே காயத்ரி... சண்டை எல்லாம் சும்மா உல்லுலாயிக்கா? தேறிட்டான் இந்த ராகேஷ்ப்பய... பட்டப்பேர் வேற வெச்சுக்கிட்டாச்சா? ரொமான்ட்டிக்கான பகுதி... வாழ்த்துக்கள்... அதுவும் அந்த குறுந்தகவல்... சான்சே இல்லமா...
@வளர்
//அடுத்த பகுதி romance தானு நினைக்கிறேன்//
கொஞ்சாம் அப்படி தான் முடிக்கபோறேன்:)
@புதியவன்
//எங்களுக்கும் அதிர்ச்சியாத்தான் இருக்குது...//
advance happy april fool's day wishes!:)
@ரீனா
//ரொமான்ட்டிக்கான பகுதி... வாழ்த்துக்கள்... அதுவும் அந்த குறுந்தகவல்... சான்சே இல்லமா//
நன்றி ரீனா.
இப்பதான் முதல் முத்தமா? ஏன் தமிழ் இந்த கொலைவெறி? ;)
அந்த April Fool trick எதிர்ப்பார்க்கலை.
Lolz. :)))
@கார்த்திக்
//அந்த April Fool trick எதிர்ப்பார்க்கலை.//
அது தான் தமிழ்மாங்கனி:)
Post a Comment