"அம்மா இவங்க வீட்டுக்குமெல்லாம் போய் தான் ஆகனுமா? இவங்களுக்கும் நமக்கும் ஆகாது தானே... அப்பரம் ஏன்?" சலித்து கொண்டு புறப்பட்டாள் நந்தினி. அதற்கு அவள் அம்மா,
" அந்த பொண்ணு நல்ல பொண்ணு. அதுக்கு குழந்தை பொறந்திருக்கு... போகலன்னா...தப்பா போயிடும். அவங்க அம்மா தான் கொஞ்ச அப்படி இப்படி இருப்பாங்க." என்று பதில் அளித்தார்.
குழந்தையை பார்ப்பதற்கு இருவரும் சென்றனர். ஏனோ நந்தினிக்கு இந்த குடும்பத்தை பார்த்தாலே வெறுப்பு. தூரத்து சொந்தக்காரர்கள் இவர்கள். இந்த வீட்டு பெரியவர், அதான் அந்த குழந்தையின் பாட்டிக்கு வாய் கொஞ்சம் அதிகம். புரம் பேசுவதில் நம்பர் ஒன் இவர் தான்.
குழந்தையின் அம்மா வாசலில் நின்று வரவேற்றாள், "வாங்க சித்தி, வா நந்தினி...எப்படி இருக்கீங்க?" என்று முகம் மலர சொன்னாள். வீட்டில் நடு ஹாலில் உட்கார்ந்து இருந்த பாட்டி நக்கலுடன், "வாடியம்மா... இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?" என்றார்.
நந்தினிக்கு அவரின் நக்கல் பாணி பிடிக்கவில்லை. குழந்தை பிறந்து 4 நாள் தான் ஆகுது. என்னமோ 40 வருஷம் கழிச்சு வந்து பாக்குற மாதிரி பேசுறாங்க என்று மனதில் முணுமுணுத்து கொண்டாள். கடமைக்காக நந்தினி, பாட்டியிடம் ஒரு சிரிப்பு சிரித்தார்.
"இவ தான் உன் இரண்டாவது பொண்ணா?" பாட்டி நந்தினியின் அம்மாவிடம் கேட்டார். அவர் நந்தினியைப் பார்க்கும்போது எல்லாம் கேட்கும் அதே கேள்வி. குழந்தை இன்னொரு அறையில் உறங்கி கொண்டிருக்க, அதை தூக்கி கொண்டு வந்தார் அதன் அம்மா. அவர் நந்தினியின் அம்மாவின் கையில் வைத்தார் குழந்தையை.
பாட்டி உடனே, "ஆமா... என்னமோ இவ பொண் குழந்தைகளே பார்க்காத மாதிரி வந்து கொடுக்குறே?" என்று நந்தினியின் அம்மாவுக்கு மூன்று பெண்கள் இருப்பதை குத்தி காட்டியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏன் இந்த பேச்சு? நந்தினியின் குடும்பத்தினர் இவர்களைவிட வசதி படைத்தவர்கள் என்ற பொறாமையோ? நந்தினிக்கு புரியவில்லை. அவர் சொன்ன வார்த்தைகள் நந்தினியின் கோபத்தை தூண்டியது.
நந்தினி உடனே, "உங்களுக்கு எத்தன ஆம்பள பசங்க?" தெரிந்து கொண்டே கேட்டாள்.
பாட்டி, "2 பசங்க."
நந்தினி தொடர்ந்தாள், "2 பசங்க இருந்தாலும்... நீங்க என்னத்த சாதிச்சீங்க? ஒன்னு குடிக்காரன்... இன்னொருத்தன் வீட்டு பக்கமே வரது இல்ல."
பாட்டிக்கு ஆத்திரம் போங்க நந்தினியின் அம்மாவிடம் "ஏய் உன் மவ என்ன இப்படி பேசுறா?"
நந்தினி யார் பேசுவதற்கும் இடம் கொடுக்காமல், "பசங்க இருந்தா தான் கொல்லி வைப்பாங்க... அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தீங்கன்னா... அதுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன். இப்பலாம் செத்தா கொல்லி வைக்குறது இல்ல. ஹாஸ்பிட்டலில் ஒரு electric trayல வச்சு, ஒரு switch தான். எரிஞ்சு சாம்பலா போயிடும்... அந்த switch பசங்க தட்டுனாலும் சரி பொண்ணுங்க தட்டுனாலும் சரி, ஏரியும்." என்று சொல்லிமுடித்து வீட்டின் வெளியே வந்துவிட்டாள்.
இன்னும் ஒரு வினாடிகூட அந்த வீட்டில் அவள் இருக்க விரும்பவில்லை. உடனே அவளை பின் தொடர்ந்து ஓடி வந்தாள் அவள் அம்மா.
"என்னடி இப்படி பண்ணிட்டே. இனிமேல அவங்ககிட்ட எப்படி முகம் காட்டுறது?"
நந்தினி, "இப்படிப்பட்ட சொந்தக்காரங்கலாம் நமக்கு தேவையில்ல."
முற்றும்**
18 comments:
நல்ல கதை.. நிஜத்திலும் இந்த கதாபாத்திரங்கள் (நந்தினியை தவிர) இருப்பது தான் கொடுமை!!
நல்லாருக்குப்பா! மிரட்டுறீங்க..:-)
hey, why so serious?!
:)
நல்லா இருக்கு!
//ஹாஸ்பிட்டலில் ஒரு electric trayல வச்சு, ஒரு switch தான். //
இங்கு மின் சுடுகாடு என்று தனியாகவே இருக்கும். மருத்துவமனைகளில் கிடையாது. அங்கு எப்படி னு தெரியல.
@புவனேஷ்
//நிஜத்திலும் இந்த கதாபாத்திரங்கள் (நந்தினியை தவிர) இருப்பது தான் கொடுமை!//
சரியாய் சொன்னீங்க. கொடுமை தான். என்ன செய்வது?
@சந்தனமுல்லை
//நல்லாருக்குப்பா! //
நன்றிங்க:)
@கார்த்திக்
//hey, why so serious?!//
எத்தனை நாளைக்கு தான் அரைச்ச மாவையே அரைக்கறது! :)
'என்ன வாய்.பொண்ணுன்னா ஒரு அடக்க ஒடுக்கம் வேணா'
நாஞ்சொல்லலை. இப்படி சொல்....வா.....ங்...க...ண்ணு...
'தைரியமான பொண்ணா இப்படித்தான் இருக்கோணும். ஆனால் மனதிலுள்ளதை பக்குவமா எடுத்துச் சொல்ல தெரியோணும்'
இத நாந்தாஞ் சொன்னேன், நாந்தாஞ் சொல்றேன்.
கதையா அல்லது உண்மையா...?
//எத்தனை நாளைக்கு தான் அரைச்ச மாவையே அரைக்கறது! :)//
அதானே...
அருமையான கதை தமிழ் :)
இப்படியான மக்களும் இருக்கிறார்கள். பெண் பிள்ளை தான் வேண்டும் என்று வேண்டி நிற்பவர்களும், பெற்ற பெண் தான் தங்கள் வீட்டின் திருமகள் என்று கொண்டாடுபவர்களும் கூட இருக்கிறார்கள் இன்னொரு புறம் :)
சாட்டை அடி ! அந்த பெரிசுக்கு !
@சுல்தான்
//ஆனால் மனதிலுள்ளதை பக்குவமா எடுத்துச் சொல்ல தெரியோணும்'//
மனிதனாக இருந்தால், கண்டிப்பாக பக்குவமாக சொல்லலாம்!
@பிரேம்குமார்
//அருமையான கதை தமிழ் :)//
நன்றி:)
@வளர்
//சாட்டை அடி ! அந்த பெரிசுக்கு !//
:)
கதை நல்லா இருக்கு தமிழ்...
எனக்கு ஒரே ஒரு டவுட்டு... கருத்தம்மா ஆக்சுவலி கள்ளிப்பாலுல இருந்து தப்பிச்ச பொண்ணுதானே?? அப்புறம் அவுங்க ஏன் அழியனும்??
(தலைப்புலையே கும்முன்னு தப்பு கண்டுபுடிச்சேனா?? ;))
கதை நன்று... கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்... அடுத்த தடவ ஒரு ப்ரூஃப் ரீட் விட்டுட்டு ரிலீஸ் பண்ணுங்க :))
ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க காயத்ரி:))
நச்சுன்னு இருக்கு...!
@திவ்ஸ்
//ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க காயத்ரி:))
நச்சுன்னு இருக்கு...!//
நன்றிங்க:)
Post a Comment