போன வாரம் நடந்த சம்பவம் இது. நானும் என் அத்தையும் வெளியே சென்று கொண்டிருந்தோம். சில பொருட்களை வாங்கி கொண்டு, அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஃபோன் வந்தது அவர் வீட்டிலிருந்து. அவரது மகள் தான் ஃபோன் செய்து இருந்தாள். அத்தையும் அவளும் பேசி கொண்டிருந்தனர்.
அன்று வெள்ளிக்கிழமை. கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்தபோது, அத்தை அவளிடம், " இன்னிக்கு பூஜ ரூம்ம துடைக்கனும். அங்க இருக்குற பூஜ சாமான்கள நீயே எடுத்து கொடு. அவள எடுக்கவிடாதே. நீயே எடுத்து கொடு." என்று கண்டிப்பாக கூறினார் அத்தை. பேசிமுடித்துவிட்டு என் பக்கம் திரும்பிய அத்தையிடம் நான் கேட்டேன்,
"யாரு அந்த 'அவ'... ஏன் உங்க பொண்ண குறிப்பா பூஜ சாமான்கள எடுத்து கொடுக்க சொல்றீங்க?" என்றேன் குழப்பத்துடன்.
அதற்கு அத்தை, "என் வீட்டு பணிப்பொண்ண எடுக்க விட வேணாம்னு சொன்னேன்...."
எனக்கு இன்னும் குழப்பமாய் போக, மீண்டும் நான், "ஏன்?"
அத்தை அதற்கு, " அவ வீட்டுக்கு வேலை பாக்க வந்த அப்பவே கேட்டேன் அவ என்ன ஜாதின்னு, அவ ஒரு ஜாதி பெயர சொன்னா...."
எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அத்தை மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் குறைந்துவிட்டது. எனக்கு கோபம் ஒரு பக்கம், அவரின் செயலின் வெளிப்பாட்டின் மேல் அருவருப்பு ஒரு பக்கம் இருக்க,
"ஏன் அத்தை, யாரா இருந்தா என்ன?" என்று சற்று கோபம் கலந்த குரலில் கேட்க.
"என் மனசுக்கு பிடிக்கல" என்று சொன்னார்.
இந்த காலத்தில், அதுவும் படித்தவர்கள், இப்படி செய்வது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. இவர்களை எப்படி திருத்துவது. அப்படி என்றால், அவர்கள் தானே வீட்டில் எல்லாம் வேலைகளை செய்கிறார்கள், சாப்பிடும் உணவை தயாரிக்கும் முதல் துணிகளை துவைப்பதும் வரை. அப்படி என்றால், சாப்பிடாமல் அல்லவா இருக்கனும் அத்தை?
நியாயமற்ற அவரின் செயலை நினைத்து வேதனைப்படுவதா, அல்லது அவரின் அறியாமையை கண்டு பரிதாபப்படுவதா- ஒன்றும் புரியவில்லை. இனி எப்போது உலகம் திருந்தும்?
15 comments:
நம் சமூகத்தின் பதில் இல்லா கேள்விகளில் இதுவம் ஒன்று..
//இந்த காலத்தில், அதுவும் படித்தவர்கள், இப்படி செய்வது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. இவர்களை எப்படி திருத்துவது. அப்படி என்றால், அவர்கள் தானே வீட்டில் எல்லாம் வேலைகளை செய்கிறார்கள், சாப்பிடும் உணவை தயாரிக்கும் முதல் துணிகளை துவைப்பதும் வரை. அப்படி என்றால், சாப்பிடாமல் அல்லவா இருக்கனும் அத்தை?//
நம் தேவைக்கு ஏற்ப ஆட்டத்தின் விதிமுறைகளை மாற்றி கொள்வதுதான் மனித மனம்...
உங்கள் அத்தை மட்டும் இல்லை இன்னும் இந்த மாதிரி அத்தை மாமா சித்தப்பா சித்தி..அம்மா..அப்பானு என்று நிறைய பேரு இந்த மாதிரி இருக்காங்க! அவர்களை சொல்லி குற்றமில்லை..அவங்க வளர்ந்த சமூகம் அவர்களிடம் உண்டாக்கிய மனப்பான்மை இது.. அவர்கள் மூளை இதை உணர்ந்தாலும் இன்னும் அவர்கள் மனம் வளரவில்லை ! அடுத்த தலைமுறையில் இதெல்லாம் காணாமல் போய்விடும்...!
அதனால் தான் பாரதியார் கூட ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று வளரும் தலைமுறைக்கு தான் பாடி யிருக்கார் !
உங்க பதிவே சொல்லுது நீங்க வளர்ந்த தலைமுறையென்று !
vidunga avangala maatralaam mudiyaathu. vaazum konja aandukalil ivarkaliyum vaziyil santhikkavendi vanthu vittathu, manathai thiruppi kondu ungal payanaththai thodarungal.
v.pitchumani,
http://manimalar.wordpress.com
வணக்கம்
எப்போது இந்த சமூகம் திருந்தும் என விட்டுவிட்டால் எப்படி
\\அப்படி என்றால், சாப்பிடாமல் அல்லவா இருக்கனும் அத்தை?\\
இந்த கேள்வியை நீங்கள் அல்லவா உங்கள் அத்தையிடம் கேட்டிருக்க வேண்டும்
\\தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா -- பட்டுக்கோட்டை .....\\
நன்றி
ஆஆஆ... அப்புறம் ஓட்டு போட்டுட்டேன்
இராஜராஜன்
இப்படி நினைப்பவர் எதற்காக அந்த பெண்ணை வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் ?
ya, some guys never understand these things. :(
@பாண்டியன்
//நம் தேவைக்கு ஏற்ப ஆட்டத்தின் விதிமுறைகளை மாற்றி கொள்வதுதான் மனித மனம்//
இதை எடுத்து சொன்னால், கெட்ட பெயர் நமக்கு தான் வந்து விழும்!:(
என்ன செய்ய
@வளர்
//அடுத்த தலைமுறையில் இதெல்லாம் காணாமல் போய்விடும்...! //
நம்பிக்கையுடன் தான் நானும் உள்ளேன். இருந்தாலும் சில பெரியவர்கள் இதை சாத்தியமாக்குவார்களா. சின்ன புள்ளைங்க மனதில் தீய எண்ணங்களை போட்டு வளர்க்க ஆரம்பித்தால்....ஒன்னும் செய்ய முடியாது:)
@வனம்
//இந்த கேள்வியை நீங்கள் அல்லவா உங்கள் அத்தையிடம் கேட்டிருக்க வேண்டும்//
கேட்டிருப்பேன், அவர் மனித தன்மையோடு நடந்திருந்தால்...
@பூங்குழலி
//இப்படி நினைப்பவர் எதற்காக அந்த பெண்ணை வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் ?//
அவர் அவர் தேவைகளுக்கு மட்டும் விதிமுறைகளை மாற்றி கொள்ளும் சமுதாயம் இது,
'நீயலாம் சின்ன புள்ள' அப்படி என்று இளையர்களின் சிந்தனைகளை வேரோடு கிள்ளி எறியும் சமூகம் இது.
அட விடுங்க பாஸ்.. இவங்க எப்பவுமே இப்படித்தான். காலம் மாறிக்கிட்டு இருக்கு.
ada... Like ur writing.. Just bumped into ur blog somehow.. good job
@triumph,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி:)
உங்களுக்கு நல்ல முற்போக்கான சிந்தனை .
by
mcxmeega
// பூங்குழலி said...
இப்படி நினைப்பவர் எதற்காக அந்த பெண்ணை வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் ?//
என்ன இது,இருக்கிற வேலைக்கும் ஆப்பு வைக்க சொல்றாங்க .
by
mcxmeega
Post a Comment